வெள்ளி, செப்டம்பர் 10, 2010

பிரிவு

         

# சலனமற்ற வாழ்க்கையில்
   பூகம்பமாய்
   உன் பிரிவு.

# எங்கோ தொலைவிலிருந்து
   நிவாரண நிதியாய் 
   நீ அனுப்பும்
   குறுஞ்செய்திகள்.

# இடிபாடுகளுக்கிடையே
   என்
   இதயம்.

# மீட்புப் படையாய்
   நீ
   வருவது எப்போது?

                       -சிவகுமாரன்,

1 கருத்து:

  1. அருமையான புனைவுகள்.
    பிரிவின் துயரை
    இதைவிட நேர்த்தியாய் சொல்ல முடியாது.

    பதிலளிநீக்கு