நரம்புகளின் முறுக்கேற்றம் நடத்துகிற போராட்டம். வரம்புடைத்து மீறுகிற வார்த்தைகளின் அரங்கேற்றம்
ஞாயிறு, செப்டம்பர் 05, 2010
திண்ணை ராஜ்ஜியம்
# புண்ணியவதி போய்ச்சேர்ந்து
பத்து வருஷமாச்சு.
அவளோடு சேர்ந்து
ஆதரவும் போயாச்சு!
# வருடம் ஒருமுறை
அவள் திதிக்கு மட்டும்
வக்கணையாய்
சாப்பிட முடிகிறது.
# பரிணாம வளர்ச்சியில்
அப்பா என்ற
அழகிய சொல்
முன்னிலையில்
"பெரிசு" என்றும்
படர்க்கையில்
"கிழட்டுச் சனியன்" என்றும்
உருமாறிப் போனது.
# முதியோர் இல்லம்
அனுப்பிட
முனைப்போடிருக்கிறான்
செல்லமகன்.
மருமகளுத்தான்
மனசில்லை.
# நர்சரி பேரனை
அழைத்துவர,
கமிஷன் அடிக்காமல்
காய்கறி வாங்கிவர,
வெளியூர் சென்றால்
வீட்டைக் கவனித்துக்கொள்ள
நம்பிக்கையான
வேலையாள்
கிடைக்கவில்லையாம்.
# விருந்தாளிகளை
விவஸ்தையின்றி
கடிக்கிறதாம் அல்சேஷன்.
விற்றுவிட்டார்கள்.
# இப்போது எனக்கு
வேலைமாற்றம் வந்திருக்கிறது.
வீட்டுத்திண்ணைக்கு!
# வீசியெறியப்படுகிறது
சோற்றுத்தட்டு.
வாலிருந்தால்
ஆட்டிக்காட்டலாம்
பதிலாய்த்தான்
ஆடிக்கொண்டிருக்கிறது
தலை.
-சிவகுமாரன்
உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்.
பதிலளிநீக்குhttp://blogintamil.blogspot.com/2011/01/blog-post_05.html
வயசு போனவங்க மனசு படுற கஸ்டமும் அவங்க நிலைமையும் பார்த்தா வயசு போய் உடம்பு தளரமுதலே நான் செத்திடணும்ன்னு இப்பவே சாமிகிட்ட கேட்டுக்கிட்டு இருக்கேன் !
பதிலளிநீக்குதோழி ஹேமாவின் அதே மன சஞ்சலம் தான் எனக்கும்...
பதிலளிநீக்குவலிக்கும் உண்மைகளை வார்த்தைகளில் சமைத்துள்ளீர்கள்...
நன்று தோழா...
நானும் கவிதை கிறுக்கன் தான். பொழுதிருப்பின் எனது வலைப்பூவிற்கு வாருங்கள்
ஆமாம் ஹேமா . எனக்கும் அதே நெனைப்பு தான். ( நானே எங்க அம்மாவை கவனிக்காமல் வெளியூரில் இருக்கேன். அம்மா சொந்த ஊர்லேயிருந்து நகர மாட்டேங்கிறாங்க.)
பதிலளிநீக்குவருணபகவானின் வருகைக்கு நன்றி.
பதிலளிநீக்குவருகிறேன் உங்கள் வலைக்கு.