சிங்கள வீதியெங்கும்
சீன தேசத்தின்
சிவப்புக்கொடிகள்.
கம்யூனிசம்
காலூன்றி விட்டதாக
கர்வப்பட்டுக் கொள்ளலாம்
காம்ரேட்கள் .
பேரினவாதப் பேய்கள்
பிணந்தின்றபோது
பொதுவுடைமை வாய்கள்
பூட்டிக் கிடந்ததின் மர்மம்
புரிகிறதா இப்போது?
-சிவகுமாரன்
சீன தேசத்தின்
சிவப்புக்கொடிகள்.
கம்யூனிசம்
காலூன்றி விட்டதாக
கர்வப்பட்டுக் கொள்ளலாம்
காம்ரேட்கள் .
பேரினவாதப் பேய்கள்
பிணந்தின்றபோது
பொதுவுடைமை வாய்கள்
பூட்டிக் கிடந்ததின் மர்மம்
புரிகிறதா இப்போது?
-சிவகுமாரன்
அப்படி என்ன கோபம் உங்களுக்கு கம்யூனிஸ்ட்கள் மீது?
பதிலளிநீக்குஈழத்துக்கு சப்போர்ட் செய்தால் எந்தக் கூட்டணியில் எக்ஸ்ட்ரா 2 சீட் தரப்போகிறார்கள் ?
மதிமுகவுடன் வேண்டுமானால் கூட்டணி சேரலாம்.
we understand your feeling.....but...you should accept the fact.....eezham is an internal matter of Srilanka...india and indian leaders have limitations in interfering and controlling srirlanka on this issue.
பதிலளிநீக்குEezham is ...politics and beyond politics.
அமிர்தலிங்கத்தைத் தின்றபோதும், பத்மநாபாவைத் தின்ற போதும் ராஜீவைக் கொன்ற போதும் புரிந்து கொண்டோம்.
பதிலளிநீக்குகவிதைக்கு பொய் அழகுதான். பொய் மட்டுமே அழகைத்தராது---காஸ்யபன்
பொய்யில்லை அய்யா. இரண்டு தலைமுறைக்கு முன் இலங்கைக்கு ஓடிப்போன என் சின்ன தாத்தாவின் வாரிசுகள் இன்று எந்த முள்வேலிக்குள் முடங்கிக் கிடக்கிறார்களோ இல்லை இனவாதத்திற்கு இரையாகிப் போனார்களோ என்ற பதைப்பில் உதிரும் கண்ணீர். இந்த வாரம் ஆனந்தவிகடன் படித்தீர்களா, ஒரு இனம் இருந்ததற்கான சுவடே இல்லாமல் அழிக்கப்பட்டு வருகிறது. இனி நானும் நீங்களும் சண்டை போட்டு என்ன ஆகப்போகிறது? எல்லாம் கனவாய் பழங்கதையாய் ஆகிப் போச்சு. ஒரு பிரபாகரனை அழிப்பதற்காய் ஒரு இனத்தையே அழிப்பது எந்த விதத்தில் நியாயம்? இந்திரா காந்தியை ஒரு சீக்கியன் கொன்றான் என்பதற்காய் அந்த இனத்தையே அழிக்க நினைத்தோமா? மன்மோகன் சிங்கை பிரதமராக்கி அழகு பார்க்கும் சோனியாகாந்தி ஈழத்தமிழரை அழிப்பதற்கு துணை போகிறார். அதற்கு நீங்கள் எல்லாம் வக்காலத்து வாங்குகிறீர்கள்.என் கோபமெல்லாம் தமிழ் தமிழர் என்று தம்பட்டம் அடித்தவர்கள் மீதும், என் தெருவில் சாக்கடை அடைத்துக்கொண்டால் கூட கொடி தூக்கியவர்கள் மீதும் தான். என்னிடம் வந்து ஓட்டு கேட்டு பணம் தருபவர்களுக்கும், ஓட்டு கேட்டுவிட்டு உண்டியல் குலுக்குபவர்களுக்கும் என் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் இருக்கிறது. ஒன்றை புரிந்து கொள்ளுங்கள், விடுதலைப்புலிகள் ஈழத்தமிழர்கள் தான். ஆனால் ஈழத் தமிழர்கள் எல்லோரும் விடுதலைபுலிகள் அல்லரே. புலிவேட்டை என்னும் போர்வையில் அவர்கள் வேட்டையாடியது புலிகளை மட்டுமல்ல. அப்பாவி மான்களையும் முயல்களையும் தான். அவர்களின் நோக்கமும் அதுதான். கேட்க நாதியற்றுப் போனோம்.
பதிலளிநீக்கு"சொந்த சகோதரர் துன்பத்தில் சாதல் கண்டும்
சிந்தை இரங்காரடி- கிளியே
செம்மை மறந்தாரடி. "
What is wrong with this poem mr.kashyapan? srilanka has opened its gate to China. Dont you feel its a big threat to India's Defence security? India has helped srilanka in many ways to destroy LTTE only becas srilanka may seek help from china. But finally what happens? Srilanka has betrayed. There is room to suspect all the politicians including communists in ezham matter.
பதிலளிநீக்குem udan piravaa sagodharargal mannikkalaam. aanaal - varalaaru emmai oru pothum mannikkap povathillai
பதிலளிநீக்கு