( வெண்பா )
இளங்கவிஞா ஏடெடுத்து ஏழை மனிதர்
உளங்களிலே நம்பிக்கை ஊற்று - வளங்கொழிக்கும்
நன்மை தரு(ம்)விதைகள் நானிலத்தில் நீவிதைத்தல்
உண்மையெனில் பின்தொடரும் ஊர்.
காப்பியங்கள் எல்லாம் கனலாய்ப் பிறக்கட்டும்
தீப்பிழம்பு சொல்லில் தெறிக்கட்டும் - யாப்பிழந்து
போனதெனில் போகட்டும்! போலிகளின் நாவறுக்க
ஆனதெனில் காவியமே ஆம்.
கருப்புப் பணமுதலைக் காலிகளை உந்தன்
செருப்பால் மிதித்துவிடு! சீறும்- நெருப்பு
தெறிக்கட்டும் உன்கவியில்! தீயோர் எலும்பை
முறிககட்டும் உன்கவிதை மூச்சு.
போர்க்குணமே இல்லா புலவனது பாட்டெல்லாம்
யார்க்குதவப் போகிறது ? எட்டிமரம் - ஊர்க்குள்
எழுந்தென்ன ஆகிறது ? ஆழ்கடலில் நீரும்
விழுந்தென்ன எல்லாமே வீண்.
விழுந்தால் இனிமேல் விதையாய் விழுவாய்
எழுந்தால் தொடுவாய் இமயம்- அழுந்தும்
புதைமணல் வாழ்வினி போதும்! விதிக்குச்
சிதையினை மூட்டிச் சிரி.
-சிவகுமாரன்
//போர்க்குணமே இல்லா புலவனது பாட்டெல்லாம்
பதிலளிநீக்குயார்க்குதவப் போகிறது ? எட்டிமரம் - ஊர்க்குள்
எழுந்தென்ன ஆகிறது ? ஆழ்கடலில் நீரும்
விழுந்தென்ன எல்லாமே வீண்//
சூப்பர்!
புத்தாண்டு வாழ்த்துக்கள்! கலக்குங்க! :-)
அருமை நண்பரே..புத்தாண்டு வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஎல்லா வரிகளையும் ரசித்தேன். /விழுந்தால் இனிமேல் விதையாய் விழுவாய்
பதிலளிநீக்குஎழுந்தால் தொடுவாய் இமயம்- / இந்த வரி மிகவும் பிடித்தது. யாரந்த இளைய பாரதி? நன்றாயிருக்கிறது வேடம்.
புத்தாண்டு வாழ்த்துக்கள் :)
பதிலளிநீக்குபையன் அழகா இருக்கான்,
பதிலளிநீக்குயாரு உங்க பையனா?
எட்டயபுரதுக்கு இணையான கவிஞனை இங்கேயே கண்டேன்--மாடத்தி --------காஸ்யபன்
பதிலளிநீக்குபடத்தில் மட்டும் பாரதி தெரியவில்லை;கவிதையிலும்தான்.
பதிலளிநீக்குஎனக்கு வெண்பா தெரியாது நண்பா இருந்தாலும் பிடி இந்த
பதிலளிநீக்குவாழ்த்துப்பாவை..
புது வருஷ வெண்பா.. பொங்கும் பூங்கனலாக... ரொம்ப நல்லா இருந்தது..
பாரதியை வந்த பையன் யார்?
சிலிர்க்கிறது படித்தால். நல்ல கவிதை. //"போர்க்குணம் இல்லாத கவிதை யார்க்குதவப் போகிறது?"// அப்போ காதல், இயற்கைக் கவிதை எல்லாம் என்ற கேள்வி எழுகிறது.
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஇந்த பையன்.....
பதிலளிநீக்குபாரதி கண்ட அக்னி குஞ்சு கண்ட பாரதி !!
அக்னி குஞ்சின் குஞ்சு !!!
அருமை பாராட்டுக்கள்
பதிலளிநீக்குबगूठ अच्छा
பதிலளிநீக்குಚೆನ್ನಕಿಥೆ
బాగా ఉంది
വല്ലിയ കവിതൈ
арумамай
யாமறிந்த மொழிகளில்
தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் இல்லை
வைடமின் வரிகள். அருமை நண்பரே.
பதிலளிநீக்குசின்ன பாரதிகள் வேண்டும். பாரதி சின்னங்களும் வேணும்.
sivamani பின்னூட்டம் சுவை.
இயல்பான நடையில் அருமையாக இருக்கிறது
பதிலளிநீக்குகவிதை நன்றாக உள்ளது என்று சொல்வது சர்க்கரை இனிக்கிறது என்று சொல்வது போலத்தான். God bless you Sivakumaaraa.!
பதிலளிநீக்குகுட்டி பாரதியின் குரலில் இன்னமும் மெருகேறியிருக்கும்...எல்லோரும் சொன்ன வரி தான் என்றாலும் என்னாலும் மேற்கோள் காட்டாமல் இருக்க முடியவில்லை ...போர்க்குணமே இல்லா புலவனது ....
பதிலளிநீக்குசிவமணி அழகாக சொல்லிவிட்டார்..
என்னைக்கேட்டால்...
தமிழ்
தமிழ்
தமிழ்
இதற்குப் பிறகு இனியெதுவும் நுழையப்போவதில்லை..என் மூளை தமிழிலேயே முழு நிறைவு கண்டதாலோ....
//காப்பியங்கள் எல்லாம் கனலாய்ப் பிறக்கட்டும்
பதிலளிநீக்குதீப்பிழம்பு சொல்லில் தெறிக்கட்டும் - யாப்பிழந்து
போனதெனில் போகட்டும்! போலிகளின் நாவறுக்க
ஆனதெனில் காவியமே ஆம்.//
அக்கினிக்குஞ்சுக்கும் மூப்புக்கும் வேறுபாடு உண்டோ என்று கூறுகிறது உங்கள் கவிதை.. அருமை..
அன்பு சிவா! பாரதியோடு புதுவருடம் துவங்கியிருக்கிறது.
பதிலளிநீக்குமைக்கெடுத்த மன்னவன் உன் சின்னவனா?
முண்டாசுக்குள் முளைத்திருக்கும் என்னவனா?
என் அன்புனக்கு..
சூப்பர்!
பதிலளிநீக்குஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
புலவனின் கவிதையை பாராட்டும் தகமை எனக்கில்லை .இருப்பினும் உணர்ச்சி பிரவாக்மாகிறது உங்கள் கவிதை. பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குபோட்டோவில் இருக்கும் பாரதி யார்...? உங்க மகனா...?
பதிலளிநீக்குபாவேந்தனின் "கொலை வாளினை எடடா" என்ற கவிதைக்கு சற்றும் குறைந்ததல்ல தங்களின் இந்தக் கவிதை. வேறென்ன சொல்ல ?
பதிலளிநீக்குநல்ல பகிர்வு. வெண்பா பற்றி அவ்வளவாய் தெரியாது எனினும், வார்த்தைகள் அழகாய் கவிதையாக இருக்கு. குட்டி பாரதி?
பதிலளிநீக்குindra netra unn kavithiyayai padithu rasithe valarnthavan naan.un thambiyaga iruka perumai adaikiren.
பதிலளிநீக்குகவிதை வரிகள் ஒவ்வொன்னும் இடி மாதிரி உரைச்சது சிவா...அற்புதமான பாடல்...
பதிலளிநீக்குவெண்பா அனல் கக்குகிறது வரிகளில்.அந்தக் குழந்தையின் கண்களும் கவிதைக்கேத்தபடி விரிந்து வியப்போடு !
பதிலளிநீக்குசூப்பர் ( என்னக்கு தெரிந்த அளவிற்கு ). இது தான் surprise ஆ. நன்றி,என்னுடைய படத்தை நெட்டில் பதிவு செய்ததற்கு . இன்னும் உங்களிடம் நிறைய கவிதைகள் எதிர்பார்கிறேன் அப்பா.
பதிலளிநீக்குவிழுந்தால் இனிமேல் விதையாய் விழுவாய்
பதிலளிநீக்குஎழுந்தால் தொடுவாய் இமயம்- அழுந்தும்
புதைமணல் வாழ்வினி போதும்! விதிக்குச்
சிதையினை மூட்டிச் சிரி.
.....அருமை...... வெண்பா எழுதுவது வெகு சிலரே.... அசத்துறீங்க!
இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
"விழுந்தால் இனிமேல் விதையாய் விழுவாய்
பதிலளிநீக்குஎழுந்தால் தொடுவாய் இமயம்- அழுந்தும்
புதைமணல் வாழ்வினி போதும்! விதிக்குச்
சிதையினை மூட்டிச் சிரி."
மிக அருமையான கவிதை வரிகள்!
தீப்பிழம்பு அனலாய் மனதைத் தொடுகிறது!
வாழ்த்துக்கள்!!
நன்றி ஜீ. வழக்கம் போல் உங்கள் முதல் வாழ்த்துக்கு.
பதிலளிநீக்குநன்றி
பதிலளிநீக்குதிரு.பழனிசாமி.
ஜே.ஜே.
காஷ்யபன்
சென்னப்பித்தன்.
தமிழ்த்தோட்டம்.
இளமுருகன்
சிவமணி அண்ணா
அப்பாத்துரை.
பார்வையாளன்
GMB சார்
ஆதிரா
எஸ்.கே.
பிரஷா
நிலாமதி
ராதேஷ்
வெங்கட் நாகராஜ்
தம்பி பிரபாகரன்
ஆனந்தி
ஹேமா
அய்யா (விவேக்௦)
சித்ரா
மனோ சாமிநாதன்,
அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி.
நன்றி
பதிலளிநீக்குகீதா மேடம்
தொப்பிதொப்பி
RVS
பத்மநாபன்
மோகன்ஜி
&
பிலாசபி பிரபாகரன்
ஆமாங்க.
குட்டி பாரதி என் மகன் தான், 3 வயதில் பள்ளி விழாவில் அச்சமில்லை அச்சமில்லை என அச்சமில்லாமல் முழங்கிய போது எடுத்தது.
அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். குட்டி பாரதி சார்பாக.
ஸ்ரீராம் சொன்னது
பதிலளிநீக்கு"சிலிர்க்கிறது படித்தால். நல்ல கவிதை. //"போர்க்குணம் இல்லாத கவிதை யார்க்குதவப் போகிறது?"// அப்போ காதல், இயற்கைக் கவிதை எல்லாம் என்ற கேள்வி எழுகிறது."
நன்றி ஸ்ரீராம்.
ரௌத்திரம் பழகச் சொன்ன பாரதி, பாப்பா பாட்டும் கண்ணம்மாவின் காதலும் பாடவில்லையா என்ன ?
முறுக்கிய மீசை முத்தத்திற்கு
இடையூறா ?
வெண்பா அருமைங்க..
பதிலளிநீக்குஇனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்..
Wow! super kavithai. cute boy.
பதிலளிநீக்கு//போர்க்குணமே இல்லா புலவனது பாட்டெல்லாம்
பதிலளிநீக்குயார்க்குதவப் போகிறது ?//
உண்மை. நன்றாக சொன்னீர்கள் .வாழ்த்துக்கள்.
//போர்க்குணமே இல்லா புலவனது பாட்டெல்லாம்
பதிலளிநீக்குயார்க்குதவப் போகிறது ? எட்டிமரம் - ஊர்க்குள்
எழுந்தென்ன ஆகிறது ? ஆழ்கடலில் நீரும்
விழுந்தென்ன எல்லாமே வீண்.//
சாத்து சாத்தியிருக்கிறீர்கள் சிவா தமிழால்.
யாரின் கையில் மொழி இருக்கிறதோ அதற்கேற்ப அது உருமாறிக்கொள்கிறது.
உங்கள் கையில் அது சாட்டையாய் சவுக்காய்.
ம்.சுழற்றுங்கள் அடுத்த சாட்டையை.
நன்றி பாபு
பதிலளிநீக்குநன்றி வானதி
நன்றி திரு. நடன சபாபதி சார்.
நன்றி சுந்தர்ஜி
இந்த வெண்பாக்களை இடுகையிடத் தூண்டியதே உங்கள் "எது அரசியல்" பதிவு தான்.
நன்றிகள் பல.
அற்புதம் நண்பரே
பதிலளிநீக்குஅனல் பறக்கும் பாக்கள்
அவனியில் அவன் வரிக்கு ஈடு இல்லை.
அவரின் எழுச்சியை உங்களின் வரிகளில் கண்டேன்.
வாழ்த்துகள்
மழலைக்கும்
வீட்டில், நம்மைச் சுற்றியுள்ள உடனடி சமுதாயத்தில்
பதிலளிநீக்குநல எண்ணங்களையே விதைத்து வளர விடுவோமானால் நாளடைவில்,
பொய்யும் புரட்டும் சற்றே குறைய வாய்ப்புண்டு என்று நம்பி செயலில் இறங்குவோம்
கவிதை அருமை.
பதிலளிநீக்கு