நான்
ஊர்க்குருவி தான்.
நான்
உயரப் பறப்பதில்
கொஞ்சம்
உயரப் பார்ப்பதில்
என்ன தவறு ?
நான்
பறக்கும் போது மட்டும்
உங்கள்
பார்வையில் ஏன்
ஓர் இனம்புரியாத
இளக்காரம்?
நீங்கள் சொல்லலாம்
" உயர உயரப் பறந்தாலும்....."
என்று.
ஆனால் நண்பர்களே
எனக்கும் சிறகுகள் இருக்கிறதே,
பரந்து விரிந்த வானம்
பருந்துகளுக்குத் தானென்றால்
சின்னஞ்சிறு குருவி எனக்கு
சிறகுகள் எதற்கு ?
என் மேனியில்
முளைத்த சிறகுகள்
முடங்கிவிடக் கூடாதே
என்பதற்காக நான்
பறந்து பார்க்கிறேன்
நீங்கள் ஏன்
பருந்து பார்க்கிறீர்கள் ?
தவறு
நான் பறப்பதில் அல்ல.
நீங்கள்
பார்ப்பதில் தான்.
ஒன்றைப்
புரிந்து கொள்ளுங்கள்.
நான் ஒருபோதும்
பருந்தாக வேண்டியதில்லை
ஆனால் நிச்சயம்
பறந்தாக வேண்டுமே.
--சிவகுமாரன்
.
நீயெல்லாம் கவிதை எழுதி என்ன செய்துவிடப் போகிறாய் என்றவர்களுக்கும், வைரமுத்து, வாலி மாதிரி வரும் ஆசையில் எழுதிக் கொண்டிருப்பதாக சொன்னவர்களுக்கும், இணையத்தில் கவிதை எழுதுபவர்கள் சினிமாவில் எழுத சான்ஸ் கிடைக்கும் என்ற நப்பாசையில் எழுதுவதாகவும், இலவசமாக ப்ளாக் இல் எழுத முடிவதால் எல்லோரும் கவிதை எழுத கிளம்பிவிட்டதாகவும், உண்மையான கவிஞர்கள் ப்ளாக் இல் கவிதை எழுதுவதில்லை என்றும், என் போன்றோரை கவிதை எழுதுவதை நிறுத்தி blogspot server இன் இடத்தை மிச்சப்படுத்தவும் சொன்ன சமுத்ரா போன்றோருக்குமான என் பதில் இந்தக் கவிதை
பதிலளிநீக்குhttp://samudrasukhi.blogspot.com/2010/11/blog-post_24.html
விமர்சனமென்றால் கருத்தில் கொள்ளுங்கள், வீண்வாதம் என்றால் ஒதுக்கித் தள்ளுங்கள். உங்கள் கவிதைகள் உண்மையில் அருமை. தொடர்ந்து எழுதுங்கள்...
பதிலளிநீக்குநீங்கள் கொடுத்துள்ள link ல் படித்தேன். நான் கவிதை பற்றிய அவரின் பார்வையுடன் சிறிது முரண்பட்டாலும் அந்தப் பதிவு சரிதான்.(அவருக்கும் சேர்த்து எழுதியதாகவேப் படுகிறது)
பதிலளிநீக்குநன்றி நண்பரே
பதிலளிநீக்குப்ளாக் இல் எழுதுபவர்கள் உண்மையான கவிஞர்கள் இல்லை என்பது போல் சொன்னது தான் கொஞ்சம் வலித்தது. இணையத்திலும் இலக்கியம் பிறக்கும் காலம் வரும்.
leave his crap. but this poem is really gud answer. fly high...
பதிலளிநீக்குநல்ல கவிதையை வெளிக்கொணர்ந்த நண்பருக்கு நன்றி...
பதிலளிநீக்குபருந்து தான் உயர பறக்கும் எனும் காலம் முடிந்துவிட்டது ...
குருவி சிட்டாக பறக்க வாழ்த்துக்கள்..
//பருந்தாக வேண்டியதில்லை
பதிலளிநீக்குஆனால் நிச்சயம்
பறந்தாக வேண்டுமே.\\
நண்பரே, அருமை.
வாழ்த்துக்கள.
//தவறு
பதிலளிநீக்குநான் பறப்பதில் அல்ல.
நீங்கள்
பார்ப்பதில் தான்.//
‘நச்’
பருந்தாக வேண்டியதில்லை; பறந்தாக வேண்டும் - ரசித்தேன். இதன் பொருள் 'எமக்குத் தொழில் கவிதை'யா?
பதிலளிநீக்கு"பரந்து விரிந்த வானம்
பதிலளிநீக்குபருந்துகளுக்குத் தானென்றால்
சின்னஞ்சிறு குருவி எனக்கு
சிறகுகள் எதற்கு ?"
ரசிக்கக் கூடிய வரிகள்...
சமுத்ரா
உங்களை நீங்களே குருவி என்று முடிவு செய்து விட்டால் அப்புறம் எப்படி முன்னேறுவது?
பதிலளிநீக்குஉள்ளுவதெல்லாம் உயர்வுள்ளுங்கள்...
நன்றி நண்பரே.
பதிலளிநீக்குகுறையொன்றுமில்லை
குருவியாய் இருப்பதில்.
வானம் எனக்கும் தான்.
அருமை. வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குசமுத்திரா அவர்கள் சற்று பொதுவாக சொல்லிவிட்டார்கள்
கவிதையின் தரம் என்பது அது எதில் எழுதப்படுகிறது என்பதில் இல்லை.
நல்ல திறமையுள்ளவர் பிளாக் பக்கம் வருவதில்லை என்பதும் தவறு. திரைப்படங்கள், பத்திரிக்கைகள் எல்லாம் நல்ல கவிதைகளை மட்டுமா பிரசுரிக்கிறார்கள். காசு பார்க்க வேண்டும் என்றால் பிரபலமாக் வேண்டும் என்றால் அதற்கு பலவழிகள் [தேவைப்படுபவர்களுக்கு நன்றாகத் தெரிந்தவழிகள்] உள்ளன.
மனத்திருப்திக்காக எழுதுவது எதிலிருந்தாலும் அவரவர்க்கு அது ஆனந்மே. மற்றவரகளின் பாராட்டுக்காக எழுதுவது கவிதையாகாது. ஒரு தலைப்பைக்கொடுத்து எழுதச் சொன்னலும் நல்ல கவிதைவராது. ஒரு கருத்தைத்தானாகஉணர்ந்து எழுத வேண்டும்.
தங்கள் பதில் அருமை.
பருந்தான பந்தாவான குருவிக்கு வாழ்த்துக்குள். ;-)
பதிலளிநீக்குஒரு குருவியின் பார்வையில் நல்ல கவிதை. நீ ஏன் குருவியாகவும் பருந்தாகவும் இருக்க ஆசைப்பட வேண்டும். எப்போதும் சிங்கமாக இரு நண்பா. சொல்பவர்கள் ஆயிரம் சொன்னாலும் நம் என்ன செய்ய நினைக்கின்றேமே, அதில் நல்லது கெட்டது அறிந்து முன்னேக்கி நடை போடு. மற்றவை பற்றி கவலைப் படக்கூடாது.
பதிலளிநீக்குஎப்பவும் லயன் சேர் நமக்குத்தான்.
மிக்க நன்றி நண்பரே
பதிலளிநீக்குசமத்துவக் குருவி மிகவும் அருமை நண்பரே !
பதிலளிநீக்குஉங்கள் குருவி..உண்மையில் உயர உயர.. தாங்க...
பதிலளிநீக்குசூப்பர்.. :-))
கவிதையால் சாட்டியடி மிகமிகாருமை. சிறகுகள் உண்டு பறந்தாக் வேண்டும்.
பதிலளிநீக்குமேலும் மேலும் உயரப் பறக்க்
(முன்னேறிச் செல்ல) வாழ்த்துக்கள்
கவிதையால் சாட்டியடி மிகமிகாருமை. சிறகுகள் உண்டு பறந்தாக் வேண்டும்.
பதிலளிநீக்குமேலும் மேலும் உயரப் பறக்க்
(முன்னேறிச் செல்ல) வாழ்த்துக்கள்
படைப்புகள் பேசட்டும் சிவா..
பதிலளிநீக்குஇந்த அழகான கவிதையைப் போல.
//நான் ஒருபோதும்
பதிலளிநீக்குபருந்தாக வேண்டியதில்லை
ஆனால் நிச்சயம்
பறந்தாக வேண்டுமே//
எல்லோரும் சொல்லிவிட்டாலும் என்னாலும் பாராட்டாமல் இருக்கமுடியவில்லை இந்த வரிகளை. 'நச்'சென்று நான்கு வரிகள்!!