ஹைக்கூ முத்தங்கள் 40
கூட்டுக்கு இரை கொணர்ந்த
குருவியின் அலகு
தந்தையின் முத்தம்.
வறண்ட நிலவெடிப்பில்
வானின் மழைத்துளி
தாயின் முத்தம்.
விரிந்த பூவிதழில்
விழுந்த பனித்துளி
மழலையின் முத்தம்.
வெண்ணெய் தடவிய
வெண்ணிலாக் கீற்று
காதலி முத்தம்
சூரியக் கதிரில்
சொட்டும் தேன்துளி
மனைவியின் முத்தம்
சொன்னமாதிரியே ரொம்ப கூலாதான் கவிதை எழுதியிறுக்கீங்க சூப்பர்.
பதிலளிநீக்குVery nice..... பாராட்டுக்கள்!
பதிலளிநீக்குநல்ல ஹைகூ கள்...
பதிலளிநீக்குஎந்த முத்தத்தை மறுக்க மூடியும்..எல்லாம் முத்துக்கள்...
பதிலளிநீக்குவைரத்தில் பதித்த முத்து..
விரிந்த பூவிதழில்
விழுந்த பனித்துளி...
சில்லுனு இருக்கு....
பதிலளிநீக்குமழலையின் முத்தம் கவர்கிறது..
காதலி முத்தம் வழவழக்கிறதோ...
அருமை...சூடான கவிதைகளுக்குப் பிறகு சுகமான கவிதைகள்.
வகைப்படுத்திய முத்தங்கள் சத்தமாய் இதமாய் !
பதிலளிநீக்குமொத்த முத்தமும் இனிமை சிவா! :)
பதிலளிநீக்குமுற்றமெங்கும் தெளிக்கப்பட்டது தமிழின் முத்தம்.
பதிலளிநீக்குஎல்லா முத்தங்களும் சத்தமில்லாத ரகசிய முத்தத்தின் மென்மையோடு.
சபாஷ் சிவா.
மூன்றாவது படத்தை பார்த்தவுடன் ஹாலிவுட் பாலா நினைவுக்கு வந்துவிட்டார்
பதிலளிநீக்கு//THOPPITHOPPI கூறியது...
பதிலளிநீக்குமூன்றாவது படத்தை பார்த்தவுடன் ஹாலிவுட் பாலா நினைவுக்கு வந்துவிட்டார்//
எனக்கும் அப்படித்தான் பாஸ்!
அருமை! :-)
ஹைகூ கவிதை
பதிலளிநீக்குதமிழ் தாய் முத்தம்?
அட்டகாசம் சகோ.சிவா..
பதிலளிநீக்குNice!
பதிலளிநீக்குஹைகூ முத்தங்கள் அனைத்தும் ஒவ்வொரு சுவை. பகிர்வுக்கு நன்றி நண்பரே.
பதிலளிநீக்குபாராட்டு மழையில்
பதிலளிநீக்குகுளிப்பிக்கும் உனை
ஜீஎம்பீ முத்தம்
nice....வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குமுத்தத்தில் இத்தனையா, சுத்தம்! மிக அருமை, வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குமுத்தம் ஒவ்வொன்றும் முத்துக்கள். கலக்குறீங்க !
பதிலளிநீக்குSuperb Kiss.
பதிலளிநீக்குKisses the heart deeply.
மனுசங்க கிச் பத்தி நச்.
பதிலளிநீக்குஇதையும் கொஞ்சம் விவரமாக.. ம்ஹூம்.. சுருக்கமாக வெளக்கிப் போடுங்க:
- இயற்கையின் முத்தம்
- இசையின் முத்தம்
- அறிவின் முத்தம்
- ஒளியின் முத்தம்
- சாவின் முத்தம்
தமிழின் முத்தம் சேர்க்க நினைத்தேன்; சுந்தர்ஜி சொன்னது நல்ல இருக்கு.
சில்லென்று வீசும்
பதிலளிநீக்குசிறுமழைத் தூறல்
இயற்கையின் முத்தம்.
காதுகளை வருடும்
காற்றின் இதழ்கள்
இசையின் முத்தம்.
தெளிவின் கதவை
திறக்கும் சாவி
அறிவின் முத்தம்.
இருட்டு மாட்டை
விரட்டும் சாட்டை
ஒளியின் முத்தம்.
இருப்பின் கதவை
இறுக்கும் பூட்டு.
சாவின் முத்தம்.
முத்தத் தீயில்
ஊற்றிய எண்ணெய்
அப்பாத்துரை முத்தம்.
பிடியுங்கள் பொற்கிழி!
பதிலளிநீக்குசாவின் முத்தம் அபாரம்!
பதிலளிநீக்குபதிவில் வந்த ஹைக்கூ அருமை!பின்னூட்ட ஹைக்கூ அதனிலும் அருமை.
பதிலளிநீக்குமுத்த மழை!
பதிலளிநீக்குஎழுதுவதற்கும் சலிக்காத ஒன்று முத்தம்
பதிலளிநீக்குசப்தமில்லாமல்
பதிலளிநீக்குமுத்தம் பற்றின
ஐந்து ஹைகூக்கள்
எழுதின தங்கள்
ஐந்து விரல்களுக்கும்,
கவிதையை ரஸித்த
எங்களின் முத்தங்கள்.
//விரிந்த பூவிதழில்
பதிலளிநீக்குவிழுந்த பனித்துளி
மழலையின் முத்தம்//
இந்தக்கவிதையும் அதற்கான படமும் மிக அருமை..
ஒரே ஒரு முத்தம் விட்டு போச்சு.
பதிலளிநீக்குபேரனுக்கு பாட்டியின் முத்தம் .
அணையில் தேக்கிய
பதிலளிநீக்குஆற்று வெள்ளம்
தாத்தாவின் முத்தம் .
கோடையில் திறந்த
கனஅடி காவிரி
பாட்டியின் முத்தம்.
அப்பாதுரையும்,சிவமணியும் காலணா செலவில்லாமல் கொடுத்த அறிவியல் கலந்த அன்பு முத்தத்தை சொல்லும்!---காஸ்யபன்.
பதிலளிநீக்குதாத்தாவின் முத்தம் .என் மகனுக்கு என் அப்பா கொடுத்த முத்தம் நினைவுக்கு வருகிறது
பதிலளிநீக்குஎல்லோரும் எல்லாமும் பெற்று வாழ வாழ்த்துக்கள்..வாழ்த்துங்கோ.
பதிலளிநீக்குபுத்தாண்டு,பொங்கல் வாழ்த்துகள்
பதிலளிநீக்குமுத்தமழை நனைந்து விட்டேன்
பதிலளிநீக்குகூட்டுக்கு இரை கொணர்ந்த குருவியின் அலகு!
பதிலளிநீக்குவரண்ட நிலவெடிப்பில் வானின் மழைத்துளி!
விரிந்த பூவிதழில் விழுந்த பனித்துளி!
வெண்ணெய் தடவிய வெண்ணிலாக் கீற்று!
சூரிய கதிரில் சொட்டும் தேன்துளி!
என்னன்ன பதச்சேர்க்கைகள்!
அற்புதமாய் அமைந்துவிட்டன!
இனிய பொங்கல் வாழ்த்துக்கள், சிவகுமாரன்!
இப்போத்தான் பார்த்தேன்
பதிலளிநீக்குஇவை மட்டும் என்னவாம்?
எல்லாம் அருமை என்றாலும்
இவை இரண்டும்
அருமையிலும் அருமை!
காதுகளை வருடும்
காற்றின் இதழ்கள்
இசையின் முத்தம்.
இருட்டு மாட்டை
விரட்டும் சாட்டை
ஒளியின் முத்தம்.
முத்தம் அத்தனையும்
பதிலளிநீக்குமுத்தமிட்ட உணர்வாய்
ஹைக்கூ முத்தங்கள்♥♥♥
ஸ்ரீராம் சொன்னது,
பதிலளிநீக்கு\\\\\காதலி முத்தம் வழவழக்கிறதோ...////
அது அப்படித்தான்,
எடுத்தாலும், கொடுத்தாலும்
வீசிக் கொண்டேயிருக்கும் வாசம்,
வெண்ணெய் தொட்ட
விரல்கள் மாதிரி.
முத்த ஹைக்கூக்கள் ரொம்ப சத்தானவை.. ;-)
பதிலளிநீக்குஇனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். ;-)
முத்தங்கள் வைரஸ் மாதிரி.
பதிலளிநீக்குஒட்டிக்கொள்ள இடம் கொடுத்தால்
குட்டி போட்டு விடுகின்றன.
நான் இட்டது ஐந்து முத்தங்கள் தான்.
பல்கிப் பெருகின பலவாய்.
அப்பாத்துரையின் தூண்டிலில்
சிக்கின ஐந்து.
அண்ணன் சிவமணி கேட்டதும்
தாத்தாவும் பாட்டியும்
அனுப்பி வைத்தனர்
அனுபவ முத்தங்கள்.
சுந்தர்ஜியின்
முற்றத்தில் தெளிக்கப்பட்டது
தமிழின் முத்தம்.
இளமுருகனுக்கு
தமிழ்த்தாய் இட்டாள்
ஹைகூ முத்தம்.
GMP யின் பாராட்டு முத்தம்,
வை.கோ.வின் ஆசி முத்தம்,
காஷ்யபன் அய்யாவின்
காலணா முத்தம்,
ஜீவியின் வாழ்த்து முத்தம்,
ரிஷபன் சொன்ன மாதிரி
முத்த மழை தான்.
அனைவருக்கும்
பொங்கல் வாழ்த்தோடு
என் நன்றி கலந்த
கவிதை முத்தங்கள்
நன்றி ராஜவம்சம், சித்ரா, வினோ, பிலாசபி பிரபா, பத்மநாபன், ஹேமா, பாலாஜி, சுந்தர்ஜி, தொப்பிதொப்பி, ஜீ, ஜெ.ஜெ. ஆனந்தி, நாகா, வெங்கட், ஆயிஷா, வசந்தா, கனா, தங்க்லீஷ்,சென்னைப்பித்தன், ரிஷபன், கவிதைகாதலன், திரு.பழனிசாமி, காஷ்யபன், தாரபுரத்தான், திகழ், பலே பிரபு & RVS
பதிலளிநீக்குமுத்த ஆராய்ச்சியே நடக்குது போலருக்கு!!..:)
பதிலளிநீக்கு"வெண்ணெய் தடவிய
பதிலளிநீக்குவெண்ணிலாக் கீற்று"
-பின்றீங்க சிவா, வார்த்தைகள் எதாவது தேவையென்றால் தங்களின் வலைப்பூவுக்கு வந்தால் போதும் போலிருக்கே... யாரங்கே... இதோ இங்கே எங்கள் சங்கப் புலவன் சிவா
நன்றி நன்றி நன்றி கோநா
பதிலளிநீக்குநல்ல கவிதை .. நல்ல உவமைகள் .. வாழ்த்துகள் நண்பரே .. கடைசி இரண்டு முத்தங்கள் கொஞ்சம் அதிகமாகவே இனிக்கின்றன ! நேரம் கிடைக்கையில் என் கவிதைகளை வாசித்துப் பாருங்கள் .. http://sunshinesignatures.blogspot.com/
பதிலளிநீக்குஇன்று தான் பார்த்தேன் சூப்பர். நன்றி
பதிலளிநீக்குஅருமை பாராட்டுக்கள் ரசித்தேன்
பதிலளிநீக்கு