வியாழன், மார்ச் 17, 2011

முழக்கங்கள்




படைமுழக்கம் 


நாடுகாக்க போர்முனையில் போய் நொறுக்குவோம்.
ஊடுருவும் பேர்வழிகள் வால்   நறுக்குவோம்.
பதுங்கு குழி குண்டுமழை பழகிக் கொள்ளுவோம்
எதிரிகளை கடமைக்காக நின்று கொல்லுவோம் .
பனிஇரவில் மலைமுகட்டில் படை நடத்துவோம்
இனியஇல்லம் தனைமறந்து நொடி கடத்துவோம்.
பேறுகால மனைவி எண்ணம் ஓரம் கட்டுவோம்
நூறு கோடி மக்கள் வாழ வீரம் காட்டுவோம். 
ஆன்றவிந்த வீரர்களின் ஆசி வாங்குவோம்
மூன்றுவண்ணக் கொடியசைவில் மூச்சு வாங்குவோம்.


கொள்கை முழக்கம் 


வேட்டி சட்டை வெள்ளை கட்டி கூட்டம் போடுவோம்
பேட்டி  என்றால் பொய்யவிழ்த்து வேடம் போடுவோம்
கேடியாக வாழ்ந்த கதை கிழித்துப் போடுவோம்
கோடியாக சேர்த்துவைத்து ஒளித்துப் போடுவோம்
கூட்டணியில் சேர்த்துக் கொண்டால் வாழ்த்திப் பாடுவோம்
சீட்டு இல்லை என்று சொன்னால் நாறப் போடுவோம்
ஓட்டுவாங்க ஆளுக்கொரு நோட்டு நீட்டுவோம்
போட்டதெல்லாம் லஞ்சம் வாங்கி ஈடு கட்டுவோம்
ஒளிச்சு வச்ச சொத்துக்களை சுவிஸ்சில் போடுவோம்
இளிச்சவாயி மக்களுக்கு நாமம்  போடுவோம்.





கவிமுழக்கம் 


செவியினிக்க செவியினிக்க கவி முழக்குவோம
 புவியிலெங்கும் தமிழ்பரப்பி தலை நிமிர்த்துவோம்
மதமொழித்து மனந்திருத்தி மனிதம் போற்றுவோம்
நிதமுழைக்கும் எளியர்வாழ விதி இயற்றுவோம்
இருள்விலக்கி ஒளிபரப்பி இடர்கள் தாண்டுவோம்
பொருள்விளைக்கும் புதுமையெல்லாம் தமிழ் புகுத்துவோம்
இறைபாடி எழில்பாடி இருத்தல் போதுமா -தனிமைச்
சிறைக்குள்ளே செந்தமிழை நிறுத்தல் ஆகுமா ?
சேர்த்து வைத்த கோபமள்ளி தீ வளர்ப்போமா ?
வார்த்தைகளால் யுகப்புரட்சி வரவழைப்போமா ?
எளிமை நமது ஆயுதமாய் இருந்தது போதும்  - நம்
வலிமை தன்னை வரலாறு உணர்ந்திடச் செய்வோம். 


ஜனமுழக்கம் 















அரிசி பருப்பு எண்ணெய் வாங்க வெயிலில் காய்கிறோம்
வரிசையினில் நின்று நின்று வாழ்ந்து சாகிறோம்.
இலவசத்தில் அடிமையாகி சுயம் இழக்கிறோம் .
கலைஞர் டிவி ஆட்டம் பார்த்து கனவு காண்கிறோம்

எத்தனைநாள் இப்படியே வாழ்ந்திருப்பது ?-ஒரு 
தப்படியும் ஏறாமல் தாழ்ந்திருப்பது ?
ஆட்சிமாற்றம் ஒன்றுமட்டும் விடிவு ஆகுமா ?
காட்சிமாற்றம் நாடகத்தின் முடிவு ஆகுமா ?
கட்டுண்டு பொறுத்திருந்தால் காலம் மாறுமா ?- இல்லை 
நட்டாற்றில் நம்மை விட்டு காலை  வாருமா  ?
இருட்டை எரிக்க  எரிதழலை ஏந்துவது யார்?
திருட்டு பூனை கழுத்தில் மணி கட்டுவது யார் ?
எகிப்து லிபியா நாட்டில் மக்கள் விழிக்க வில்லையா ?
தகிக்கும் புரட்சி எரிமலையாய் வெடிக்கவில்லையா?  
தக்கதொரு தருணம பார்த்து காத்திருக்கிறோம் 
மக்கள் சக்தி என்னவென்று காட்டப் போகிறோம்  


                                                                    - சிவகுமாரன்  


நன்றி
இந்தக் கவிதையை என்னை எழுதத் தூண்டிய திரு G .M.பாலசுப்ரமணியம் அய்யா அவர்களுக்கு . 

26 கருத்துகள்:

  1. தங்களின் இன்றைய நாலு முழக்கங்களும் நியாயமானதே. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

    [மன அமைதிபெற்று மகிழ உடனே எழுச்சியுடன் வாருங்கள் என் வலைப்பூப்பக்கமும்}

    பதிலளிநீக்கு
  2. த்ற்போதைய நிலையில்
    அதிகம் கவனம் செலுத்த வேண்டிய
    நான்கு விஷயங்களைத் மிகச் சரியாகத் தேர்ந்தெடுத்து
    உணர்வுபூர்வமான படைப்பைத் தந்துள்ளீர்கள்
    போர்வாளைக் கொண்டு வெங்காயம் வெட்டாமல்
    பதிவுலகம் உருப்படியாக ஏதாவது
    செய்துதான் ஆகவேண்டும்
    மிகச் சிறந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. //ஒளிச்சு வச்ச சொத்துக்களை சுவிஸ்சில் போடுவோம்
    இளிச்சவாயி மக்களுக்கு நாமம் போடுவோம்.//
    pottutaaingale

    பதிலளிநீக்கு
  4. உங்களின் இந்த படைப்புகள்
    நான் நீண்ட நாட்களாக ஏங்கி தவிக்கும்
    எனது உள்ளத்திற்கு ஒரு மருந்தாக
    உள்ளது ...

    நிச்சயம் ஒன்று படுவோம் /../.
    வென்று காட்டுவோம் ...

    பதிலளிநீக்கு
  5. ஒவ்வொரு முழக்கும் எதிரொலிக்கிறது.. காதுகளில்..! தங்களின் முழக்கம் நிற்காமல் முழங்கட்டும்.. நன்றி மற்றும் வாழ்த்துகள்..!!

    பதிலளிநீக்கு
  6. கொட்டு முரசாக முழங்கிய அனைத்து கவிதைகளும் அற்புதம்..

    ஜனமுழக்கம் நல்லா இருந்தது...

    மொதல்ல ஓட்டுப் போடச் சொல்லுங்க எல்லாரையும்.. அதுதான் முக்கியம்.. லீவு வுடராங்க.. காசு கொடுக்கறாங்கன்னு வாங்கிகிட்டு சினிமாவுக்கு போயட்ரானுங்க... ராஸ்கல்ஸ்... ;-)))

    பதிலளிநீக்கு
  7. சிவகுமாரா, முழக்கங்களில் படை முழக்கம் கவிமுழக்கம் இரண்டும் எழுச்சி தரக்கூடியவை. கொள்கை முழக்கம் அல்ல அது. நடைமுறையின் அவல முழக்கம் கொள்கை முழக்கமாகுமா.?மக்கள் முழக்கம் அதுவும் அவலங்களின் கூக்குரல். எகிப்தும் லிபியாவும் வேண்டாம்.அங்கு நடந்தது நடப்பது சர்வாதிகாரத்துக்கு எதிர்ப்பு. நாம் மாறுவோம் நிலைமையினை மாற்றிக்காட்டுவோம்

    பதிலளிநீக்கு
  8. தங்கள் முழக்கங்களில் வீரம்,கோபம்,வேதனை மற்றும் வலிமையை உணர முடிந்தது!
    வாழ்க !

    பதிலளிநீக்கு
  9. சிவகுமரன் அவர்களே! இப்படி எழுதும் எழுச்சிக் கவிஞர்களுக்கு ஏழு ஆண்டு சிறை தண்டனை அளிக்க சட்டம் வந்துவிட்டது.என்ன செய்யப் போகிறோம்?---காஸ்யபன்

    பதிலளிநீக்கு
  10. சிலிர்க்க வைக்கிறது சிவகுமாரன்.
    'என்னவென்று காட்டப்போகிறோம்' என்பதற்குப் பதில் இன்னவென்று காட்டச் சொல்லியிருக்கலாமோ?

    காஸ்யபனின் கமென்ட் கலக்கம் தருகிறது. கருத்துரிமைக்கு காவல் சட்டமா? உண்மையாகவா?

    RVS சொல்வது போல் மக்கள் சக்தியைக் காட்டவேண்டுமென்றால் இருக்கும் ஒரு சக்தி - ஒரே ஒரு சக்தி - ஓட்டு போடும் சக்தி, அதை ஒழுங்காகச் செய்தால் போதும். மறக்காமல் மனசாட்சிப்படி ஓட்டு போடச்சொல்லி பாட்டெழுதுங்களேன். மக்களிடம் போய்ச் சேரக்கூடும்.

    பதிலளிநீக்கு
  11. சிலிர்க்க வைக்கிறது சிவகுமாரன்.
    'என்னவென்று காட்டப்போகிறோம்' என்பதற்குப் பதில் இன்னவென்று காட்டச் சொல்லியிருக்கலாமோ?

    காஸ்யபனின் கமென்ட் கலக்கம் தருகிறது. கருத்துரிமைக்கு காவல் சட்டமா? உண்மையாகவா?

    RVS சொல்வது போல் மக்கள் சக்தியைக் காட்டவேண்டுமென்றால் இருக்கும் ஒரு சக்தி - ஒரே ஒரு சக்தி - ஓட்டு போடும் சக்தி, அதை ஒழுங்காகச் செய்தால் போதும். மறக்காமல் மனசாட்சிப்படி ஓட்டு போடச்சொல்லி பாட்டெழுதுங்களேன். மக்களிடம் போய்ச் சேரக்கூடும்.

    பதிலளிநீக்கு
  12. சங்கு முழங்குவது போல,உங்கள் கவிதைகளும் முழங்குகிறது..அருமை..காஸ்யபனின் கூற்று கலக்கத்தை உண்டு பண்ணுகிறது..எழுச்சியுடன் எழுதினால் ஏழு வருஷ சிறையா? அட..ஆண்டவனே...!

    பதிலளிநீக்கு
  13. காஷ்யபன் சொன்னது
    \\சிவகுமரன் அவர்களே! இப்படி எழுதும் எழுச்சிக் கவிஞர்களுக்கு ஏழு ஆண்டு சிறை தண்டனை அளிக்க சட்டம் வந்துவிட்டது.என்ன செய்யப் போகிறோம்?-//

    " நான் ஜெயிலுக்கு போறேன்
    நான் ஜெயிலுக்கு போறேன்" -ன்னு வடிவேலு மாதிரி பந்தா பண்ணிட்டு போயிட வேண்டியது தான். கூடவே சுந்தர்ஜி , மோகன்ஜி, அப்பாஜி (அமெரிக்காவுக்கு சட்டம் பாயுமா) எல்லோரையும் கூட்டிட்டு போயிருவோம்ல . உள்ளேயே கச்சேரி களை கட்டியிரும்ல

    பதிலளிநீக்கு
  14. அருடகவி வலைத்தளத்துக்கு அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்

    பதிலளிநீக்கு
  15. சிவகுமாரன்...உங்கள் முழக்கம் கவிதையோடு ஒன்றிப்போய் பெரியவர்கள் எல்லோருமே முழங்கி வைத்திருக்கிறார்கள்.இதில் நான் என்ன சொல்ல.ஆனால் மனதில் இன்னும் உத்வேகம் !

    பதிலளிநீக்கு
  16. படை முழக்கம்தான் பொருந்தவில்லை சிவா. எல்லைகள் தாண்டியும் அன்பை விதைக்கும் மனம் நாடுகளுக்கிடையில் வேண்டும்.வளரமுயலும் பொருளாதாரத்தில் சாப்பாட்டுக்கே லாட்டரி அடிக்கும் நாடுகளும் படைகளுக்கும் ராணுவத்துக்கும் செலவிடும் கோடிகள் குறித்து எந்த வல்லரசும் யுஎன்னும் வாய் திறப்பதுமில்லை.

    எல்லைகள் அற்ற வானம் போல பூமியும் மாறும் நாள் நாமிருக்க மாட்டோம். அது நடக்கும்.

    மற்றவை எல்லாம் வழக்கம் போல் என் முறுக்கேற்றுகின்றன சிவா.

    பதிலளிநீக்கு
  17. தங்களின் இந்த‌ நான்கு முழ‌க்க‌ங்க‌ளில் முன்னெடுக்க‌ வேண்டிய‌து "ஜ‌ன முழ‌க்க‌ம்" தான்.
    ந‌ம்மின் ம‌ன் அழுத்த‌த்தை குறைக்கும் செய‌லாய் தேர்த‌ல். தேர்த‌ல் த‌விர்த்து, இந்தியாவிற்கும், லிபியாவிற்கும், ஏனைய‌ ச‌ர்வாதிகார‌ ம‌ன்ன‌ராட்சி தேச‌ங்க‌ளுக்கும் என்ன‌ பெரிய‌ வித்தியாச‌ம் இருக்கிற‌து சிவ‌குமார‌ன்? அதே ப‌சி, ப‌ட்டினி, அடிப்ப‌டை உரிமைக‌ளான, குடிநீர்,உணவு, இருப்பிட‌ம், சுகாத‌ர‌ம், க‌ல்வி சுத‌ந்திர‌ம் வ‌ந்து 64 ஆண்டாகியும் இதே நிலை. திரும‌ங்க‌லத் தேர்த‌ல் ஒரு ஏமாற்று வ‌ழி. விக்கிலீக் வெளியிட்ட‌ பின்பும், முத‌ல்வ‌ரின் ம‌க‌ன் அழ‌கிரியும், ம‌த்திய‌ உள்துறை ம‌ந்திரி ம‌க‌ன் கார்த்திக் சித‌ம்ப‌ர‌மும், யாராலும் அணுகமுடியாத‌ உச்சத்தில் தான் இருக்கிறார்க‌ள். ம‌க்க‌ளின் முழ‌க்க‌மும், எழுச்சியும், த‌வறு க‌ண்டு பொங்கும் ‌போர்குணம் ம‌ட்டுமே நாட்டை நல்வ‌ழி செலுத்தும்.

    பதிலளிநீக்கு
  18. அன்பு அண்ணனுக்கு இந்த தம்பி பிரபாகரனின் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் . நூறு வருடம் நோய நொடி இல்லாமல் சந்தோசமாக வாழ மேன்மேலும் பல கவிதைகளை எழுதி இந்த இரு வலை தளமும் வேற்றி பெற இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன்

    பதிலளிநீக்கு
  19. ஆமாம் வாசன்
    மக்களுக்கு தேர்தல் நேரத்தில் 2G எல்லாம் மறந்துவிடும். ஏதாவது ஒரு அலை வந்து எல்லாவற்றையும் அடித்துக் கொண்டு போய்விடும். வை. கோபாலகிருஷ்ணன் சார் அவர்கள் பாணியில் சொல்வதானால், எழுச்சி வெறும் எழுத்தில் மட்டுமே இருக்க , முடிவுகள் வழுவட்டையாக போய்விடுமோ என பயமாக இருக்கிறது .

    பதிலளிநீக்கு
  20. கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம் என்ற பாவேந்தனின் ஆசை தான் எனக்கும் சுந்தர்ஜி. படைமுழக்கம் திரு. GMB சார் அவர்கள் கேட்டதற்காக எழுதியது. ஆனாலும் நம் படைவீரர்களின் தியாகங்களை போற்ற வேண்டியது நம் கடமை அல்லவா ?

    பதிலளிநீக்கு
  21. ஆமாம் RVS & அப்பாத்துரை. நிறைய பேர் வரிசையில் நிற்க அலுத்துக்கொண்டும் , பலருக்கு எந்த அரசியல் கட்சியும் பிடிக்காமல் போனதாலும் ஓட்டுப் போடாமல் இருக்கிறார்கள்.
    பிடிக்காதவர்கள் 49 -O போடலாம் .இது பற்றிய விழிப்புணர்வு வரவில்லை இன்னும்.

    பதிலளிநீக்கு
  22. நன்றி GMB சார் .
    கொள்கை முழக்கம் - கேட்பதற்கு கஷ்டமாக இருக்கலாம். ஆனால் அது தானே உண்மை. எலா அரசியல் கட்சிகளின் உண்மையான கொள்கைகளாக இவைதானே இருக்கின்றன் .
    லிபியாவில் எப்படி சர்வாதிகாரத்துக்கு எதிராக புரட்சி வெடித்ததோ , அது போல இப்பொது இங்கே ஊழலுக்கு எதிராக புரட்சி வெடிக்க வேண்டும் என்பது என் ஆசை.

    பதிலளிநீக்கு
  23. நன்றி
    வை.கோ.சார்
    ரமணி சார்
    நாகா
    அரசன்
    தங்கம் பழனி
    சமுத்ரா
    தென்றல்
    RRR சார்
    &
    ஹேமா
    நன்றிகள் அனைவருக்கும்

    பதிலளிநீக்கு
  24. லிபியாவிலாவது சர்வாதிகாரம்... இங்கு... அடக்குமுறையும் ஏகாதிபத்தியமும் எதேச்சாதிகாரமும் புரட்சி முளைவிடப் போதுமானதாகிறது. துணிவும் நேர்மையும் துணையிருக்க ஒன்று நூறாக லட்சம் கோடியாக ஒன்றுதிரளும் மக்கள் எழுச்சி வென்று உயரும் நாள் வரும்.

    பதிலளிநீக்கு
  25. . புதிய உத்வேகத்தை தருகிறது உங்கள் வார்த்தைகள் நிலாமகள்

    பதிலளிநீக்கு