வருகிறது
இன்னொரு தேர்தல்.
காத்திருக்கிறார்கள் மக்கள்
இன்னொரு முறை
ஏமாறுவதற்க்காக.
கொளுத்தும் வெயிலில்
திரியும்
குப்பைமேட்டுக்
கோழிக்குஞ்சுகளாய்
மக்கள்.
நிழல் தருவதாய்
சொல்கின்றன
வல்லூறுகளின் இறைக்கைகள்.
வரிசை வரிசையாய்
வலம் வருகின்றன
வாக்குறுதிகள்.
எத்தனையோ முறை
தேர்தல் வந்தது
ஒவ்வொரு முறையும்
தோற்றுப் போனது
மக்கள் தான்.
ஒவ்வொரு முறையும்
அழித்துவிட்டு
அதே நாமத்தைத்
திருப்பிப் போட்டார்கள்.
விரல்களில் வேண்டுமானால்
வித்தியாசம் இருக்கலாம்.
நாமம் ஒன்றுதான்.
மக்களாட்சி தேர்தலுக்கும்
மாட்டு வேடிக்கைக்கும்
வித்தியாசம் ஒன்றுமில்லை.
சாயம் தீட்டப்பட்ட
கொம்புகளில்
பட்டுத்துணியும் பணமுடிப்பும்
கட்டப்படுவதில்
என்ன பயன் இருக்கிறது
மாடுகளுக்கு?
அடித்து துரத்தி விரட்டி
அவிழ்த்துக் கொள்வது என்னவோ
அவர்கள்தான்.
காட்டுவது என்னவோ
தவிடும் வைக்கோலும் தான்,
ஆனால்
கடைசி சொட்டுவரை
கறந்து விடுகிறார்கள்.
வருகிறது
இன்னொரு தேர்தல்.
வாருங்கள் நண்பர்களே
ஒன்றாய்க் கூடி
மொட்டை அடித்துக் கொள்வோம்,
ஒரு கிண்ணம் சந்தனம்
இலவசமாய்த் தருகிறார்களாம்.
- சிவகுமாரன்
வருகிறது
பதிலளிநீக்குஇன்னொரு தேர்தல்.
காத்திருக்கிறார்கள் மக்கள்
இன்னொரு முறை
ஏமாறுவதற்க்காக.//
வணக்கம் சகோதரம், இது ஒட்டு மொத்த மக்கள் மனங்களையே படம் பிடித்துக் காட்டும் யதார்த்தம் கலந்த வரிகள்.
கொளுத்தும் வெயிலில்
பதிலளிநீக்குதிரியும்
குப்பைமேட்டுக்
கோழிக்குஞ்சுகளாய்
மக்கள்//
கோழிக் குஞ்சுகள் தம் உடற் சூட்டைத் தணிப்பதற்காய் குப்பை மேட்டினுள் ப் போய் முதுகை நெளித்து, வளைத்து புரண்டால் தம் உடற் சூடு குறையும் என எண்ணிச் சென்று, அதிக வெப்பம் வாங்குவது போல மக்களும் இந்த அரசியல் வாதிகளை நம்பித் தம்மையறியாமலே ஏமாறுகிறார்கள் என்பதனை உவமித்திருக்கிறீர்கள்.
குப்பை மேட்டுக் கோழிக்குஞ்சுளாய்.........
தொக்கி நிற்கும் உவமை உருபு: போல
உவமானம்: கோழிக் குஞ்சுகள்
உவமேயம்: மக்கள்....
////வரிசை வரிசையாய்
பதிலளிநீக்குவலம் வருகின்றன
வாக்குறுதிகள்./////
காத்திரக்கும் மனிதர்க்கெல்லாம் வெட்டு வைக்கும் காப்புறுதிகள்.. ஹ..ஹ..
அருமையான வரிகளுங்கோ...
பதிலளிநீக்குநிழல் தருவதாய்
பதிலளிநீக்குசொல்கின்றன
வல்லூறுகளின் இறைக்கைகள்.//
வேலியே பயிரை மேயும் நிலையினை... வாக்கினைப் பெற்ற பின்னர், வாக்குறுதிகளைக் காற்றில் பறக்க விடும் அரசியல் வாதிகள் மோசமானவர்கள், என்பதனை அறிந்தும்,இலவசங்களுக்காய் தம் ஜனநாயகத்தை விற்கும் மக்களை அழகாக வர்ணித்துள்ளீர்கள்.
வல்லூறுகளிடம் கோழிக் குஞ்சு அகப்பட்டால் என்ன நிலமையோ? அதே நிலமை தானே மந்திரிகளை நம்பி ஏமாளிகளாகும் மக்களின் நிலையும் என்பதனை காட்சிப்படுத்தியுள்ளீர்கள்.
வரிசை வரிசையாய்
பதிலளிநீக்குவலம் வருகின்றன
வாக்குறுதிகள்.
எத்தனையோ முறை
தேர்தல் வந்தது
ஒவ்வொரு முறையும்
தோற்றுப் போனது
மக்கள் தான்//
சகோ. இது தானே சொல்லடி எனப்படுவது.........
மக்கள் மனங்களைப் படம் பிடித்துக் காட்ட இதனை விட வேறு வரிகளே தேவையில்லை......
மக்களாட்சி தேர்தலுக்கும்
பதிலளிநீக்குமாட்டு வேடிக்கைக்கும்
வித்தியாசம் ஒன்றுமில்லை//
இங்கே தேர்தல் மீதுள்ள கோபம், மக்களை ஏமாற்றுவோர் மீதான ஆத்திரம் மாட்டு வேடிக்கை எனும் பதத்தினூடாக வந்து விழுகிறது.
சாயம் தீட்டப்பட்ட
பதிலளிநீக்குகொம்புகளில்
பட்டுத்துணியும் பணமுடிப்பும்
கட்டப்படுவதில்
என்ன பயன் இருக்கிறது
மாடுகளுக்கு?
அடித்து துரத்தி விரட்டி
அவிழ்த்துக் கொள்வது என்னவோ
அவர்கள்தான்.//
தம்மைச் சுற்றி நடப்பது என்னவென்று அறியாத மக்களை......குறியீட்டு வடிவில்.....மாடுகளுக்க்கு......
ஒப்பிட்டுள்ளீர்கள்....
ஆட்டோ அனுப்பிடுவாங்க........(ச்....சும்மா..............ஒரு டைமிங் காமெடி)
காட்டுவது என்னவோ
பதிலளிநீக்குதவிடும் வைக்கோலும் தான்,
ஆனால்
கடைசி சொட்டுவரை
கறந்து விடுகிறார்கள்//
சகோ.....இலவசமா என்ன தந்தாலு,, இறுதியில் வரிப் பணத்தில் கண்ணும் கருத்துமாக இருந்து கறக்கிறார்களா?
வருகிறது
பதிலளிநீக்குஇன்னொரு தேர்தல்.
வாருங்கள் நண்பர்களே
ஒன்றாய்க் கூடி
மொட்டை அடித்துக் கொள்வோம்,
ஒரு கிண்ணம் சந்தனம்
இலவசமாய்த் தருகிறார்களாம்//
இலவசத்தை வாங்குவோருக்கு சொந்தச் செலவில் சூனியம் வைக்க இதனை விட ஒரு வார்த்தை தேவையே இல்லை....
இறுதி வரிகளில் எள்ளல், கிண்டல் தொனித்திருக்கிறது.
நகைச்சுவையா நையாண்டியா?
பதிலளிநீக்குசுவையான வரிகள். 'விரல்களில் வித்தியாசம்' அருமையான சிந்தனை.
உண்மையோ உண்மை.
பதிலளிநீக்கு//ஒன்றாய்க் கூடி
மொட்டை அடித்துக் கொள்வோம்,
ஒரு கிண்ணம் சந்தனம்
இலவசமாய்த் தருகிறார்களாம்//
கவிஞரே கலக்கீட்டீங்க
மொட்டை அடிக்கப்பட்டு சந்தனம் தடவிய மண்டை ஜில்லுன்னு இருக்கும்ன்னு நினைத்து மனம் குளிர்ந்து போனேன்.
பதிலளிநீக்குஆனால் மண்டையில் ஒரே எரிச்சல். துருப்பிடித்த கத்தியால் ஆங்காங்கே கீறல்கள். தடவப்பட்ட சந்தனத்தில் ஏதேதோ கெமிகல்ஸ் கலப்படம்.
சந்தனம் மட்டும் இலவசமா, மொட்டையும் இலவசமா?!
பதிலளிநீக்குஎது இலவசமாயினும் நம் மக்களுக்கு மகிழ்ச்சியே!
இலவசங்களுக்கும் ஓட்டுக்கு காசும் வாங்கி விட்டு நம் உரிமையை அடகு வைக்கும் வரை இந்த அவலங்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும்.
பதிலளிநீக்குஅழித்து விட்டு போடுவதில்லை, மேலேயே இன்னும் அழுத்தி போட்டு விடுவார்கள். நல்ல கவிதை நண்பரே.
பதிலளிநீக்கு//ஒரு கிண்ணம் சந்தனம்
பதிலளிநீக்குஇலவசமாய்த் தருகிறார்களாம். //
:)
//ஒவ்வொரு முறையும்
பதிலளிநீக்குதோற்றுப் போனது
மக்கள் தான்//
இந்த முறை மாறுமா? அல்லது இதெல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்காகுமா?
அருமை!
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்!
"உங்களுக்கு நாங்க புள்ளதான் தரல மத்த எல்லாம் கொடுத்துட்டோம்" -பாண்டிச்சேரியைச் சேர்ந்த காங்கிரஸ் நடுவண் அமைச்சர் நாராயணசாமி பேச்சு.
இச் செய்தி எனக்கு இப்பொழுதுதான் தெரியும். எனினும் எனது இடுகை ஒன்றில் அரசியல்வாதிகள் இவ்வாறு வாக்குறுதி கொடுப்பதாக எழுதி அது பெண்களைக் கேவலப்படுத்துவதாக இருக்கும் என்பதால் நீக்கி விட்டேன்.
இலவசங்களை நோக்கி மக்கள் ஓடும் போது அது அங்கேதான் போய் நிற்கும் என நான் நினைத்தது உண்மையாகிவிட்டது.
மேலும் படிக்க...
ஒரு தரம்... ரெண்டு தரம்...!
http://hooraan.blogspot.com/2011/04/blog-post_9929.html
மொட்டையா! உங்களின் ஆதங்கம் புரிகிறது சிவா! என்ன செய்ய.. முடி மீண்டும் மீண்டும் வளர்ந்து தொலைக்கிறது. ;-))))
பதிலளிநீக்குகாத்திருக்கிறார்கள் மக்கள்
பதிலளிநீக்குஇன்னொரு முறை
ஏமாறுவதற்க்காக.//
உண்மை..
எனக்கு மொ்ட்டையும் வேணாம். சந்தனமும் நான் ஏமாறமாட்டேன்
பதிலளிநீக்குசெம செம செமையாய் கலாய்த்து விட்டீர்கள்!
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்!
”விரல்களில் வேண்டுமானால்
பதிலளிநீக்குவித்தியாசம் இருக்கலாம்.
நாமம் ஒன்றுதான்.”
நச் வரிகள்!
வெந்த புண்ணில் வேலு பாச்சாதிங்க சிவா...நாங்களே..கவர் பணம் கொடுக்காமல் மொட்டை அடிச்சிட்டாங்கன்னு கடுப்பில் இருக்கோம்...ஹீ ஹீ..
பதிலளிநீக்கு"..கடைசி சொட்டுவரை
பதிலளிநீக்குகறந்து விடுகிறார்கள்..."
அவர்கள் கறக்க நாம் வைக்கல் கன்றுகளைப் பார்த்தபடி சொரிய வேண்டியதுதான்.
காலத்திற்கு ஏற்ப நல்ல கவிதை.
//சிவகுமாரன் கவிதைகள் இல் சிவகுமாரன் ஆல் இடுகையிடப்பட்டது – 4 மணி நேரத்திற்கு முன்
பதிலளிநீக்குஎந்த நூற்றாண்டா இருந்தா என்ன மோகன் அண்ணா ?//
என் டேஷ்போர்டில் மட்டும் தெரிகிறது. உள்ளே நுழைந்தால் காணோம். தங்கள் தகவலுக்காக மட்டும். எந்த நூற்றாண்டிலாவது காட்டப்பட்டால் சரிதான். No problem.
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஒவ்வொரு வார்த்தையும் லேசர் கத்திபோல
பதிலளிநீக்குஉள்ளத்த்துள் ஊடுருவிப்போனது
மீண்டும் மீண்டும் படிக்கத்தூண்டும்
பதிவு மட்டும் இல்லை
படித்தவர்களிடம் பாதிப்பை உண்டாக்கும் பதிவும் கூட
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குசிவா!உங்களின் பலம் மரபு சார்ந்த லயம் இணைந்த வடிவம்தான்.
பதிலளிநீக்குஇதே கருத்தை அந்த வடிவத்தில் இன்னும் பலமாக நெற்றியில் அடித்தது போல சொல்லியிருக்கமுடியும் உங்களால்.
DEAR SIVAKUMAARAA, FREEBIES ARE ANNOUNCED AND GIV EN REGULARLY. BUT WHO KNOWS WHO GETS THEM,?THOSE PEOPLE WHO ARE BENEFITTED ,I AM AFRAID, KEEP QUIET, AND THOSE WHO DO NOT GET THEM COMPLAIN ABOUT THEM.WHATEVER IT BE, WE MUST BE ABLE TO DISTINGUISH WHAT IS BETTER, AS WE DO NOT HAVE A BIG CHOICE. AS USUAL YOUR KAVITHAI IS GOOD.
பதிலளிநீக்குமக்கள் வரிப்பணத்திலிருந்து தரப்படும் இவை இலவசங்கள்தானா...! வேறு ரூபத்தில் மக்கள்தான் அந்தச் சுமையையும் ஏற்கப் போகிறார்கள்.!
பதிலளிநீக்கு//எத்தனையோ முறை
பதிலளிநீக்குதேர்தல் வந்தது
ஒவ்வொரு முறையும்
தோற்றுப் போனது
மக்கள் தான்.//
நச் !!!
//விரல்களில் வேண்டுமானால்
வித்தியாசம் இருக்கலாம்.
நாமம் ஒன்றுதான்.//
அருமை
//ஒரு கிண்ணம் சந்தனம்
இலவசமாய்த் தருகிறார்களாம்.//
Final touch சூப்பர் ..
திரும்பதிரும்ப அப்பாவி மக்கள் ஏமாற தயாராக இருக்கும்போது ஏமாற்றுபவர்களின் எண்ணிக்கையும் அதிகர்த்துக்கொண்டேதான் போகும்.
பதிலளிநீக்கு//விரல்களில் வேண்டுமானால்
பதிலளிநீக்குவித்தியாசம் இருக்கலாம்.
நாமம் ஒன்றுதான்//
சூப்பர் பாஸ்! :-)
கவிதை இன்றைய நிதர்சனம் !
பதிலளிநீக்குமிகையான எதார்த்தம் நண்பரே..
பதிலளிநீக்குரொம்ப நல்லா வந்திருக்கு
படிக்கும் போதே எனக்கு வைரமுத்துவின் கவிதையொன்றும்
நினைவுக்கு வந்தது.
ஆகஸ்ட் 15
-------------------
அவன்
ஒரு பட்டு வேட்டியை பற்றிய
கனாவிலிருந்த பொழுது
கட்டியிருந்த கோவணம்
களவாடப் பட்டது.
- வைரமுத்து -
கடந்த 15 வருடங்களில் 10 தேர்தலுக்கு மேல் வந்துவிட்டது (சட்டமன்றம், நாடளுமன்றம், உள்ளாட்சி). நிலமை ரொம்ப மோசமாகிவிட்டது. ஓட்டுக்கு காசு வாங்கி, திருட்டுக்குத்துணைபோய், தவறை எதிர்த்துக் கேட்கும் தகுதியை மக்கள் இழந்துவிட்டார்கள்.
பதிலளிநீக்குஆறுதலான விசயங்கள் - தேர்தல் கமிசன் கட்டுப்பாடுகள், 49ஒ பற்றிய விழிப்புணர்வு ஆரம்பித்திருப்பது.
அண்ணாவால் ஏற்பட்ட மாற்றம், அநியாயத்தில்தான் முடிந்திருக்கிறது.
அன்னாவால் ஏற்படுகிற மாற்றம், நல்லதாய் முடியும் என்று நம்புவோம்
அங்கதத்துடன் இருக்கும் கருத்தெனினும்,அங்கலாய்க்க வேண்டிய நிலையில் தான் மக்கள் இருக்கிறார்கள்..
பதிலளிநீக்குமக்களின் நலன் சார்ந்த அரசு வரும் வாய்ப்புக்கள் கண்ணுக்குத் தெரியும் தூரத்தில் தெரியவில்லை..
மாற்றத்தை நாமே உருவாக்குவோம் என்று நாம் இறங்கினால் ஒழிய!
//விரல்களில் வேண்டுமானால்
பதிலளிநீக்குவித்தியாசம் இருக்கலாம்.
நாமம் ஒன்றுதான்//
நிதர்சனம் உணர்த்தும் வார்த்தைகள்... பார்ப்போம் என்றேனும் மாறுமோ என..:((
//எத்தனையோ முறை
பதிலளிநீக்குதேர்தல் வந்தது
ஒவ்வொரு முறையும்
தோற்றுப் போனது
மக்கள் தான்.//--good one
நன்றி நிரூபன் சார். தங்களின் நீண்ட பின்னூட்டங்களுக்கு. . ஒரு மாதம் காத்திருக்க வேண்டியிருக்கிறது. இரண்டு பேரில் யார் வந்தாலும் விடிவு வரப் போவதில்லை.
பதிலளிநீக்கு49 - ஓ பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் வர வேண்டும் .
நன்றி மதி.சுதா.
பதிலளிநீக்குநன்றி அப்பாஜி
நன்றி திருமதி ஸ்ரீதர்
வை.கோ. சொன்னது
பதிலளிநீக்கு\\மொட்டை அடிக்கப்பட்டு சந்தனம் தடவிய மண்டை ஜில்லுன்னு இருக்கும்ன்னு நினைத்து மனம் குளிர்ந்து போனேன்
ஆனால் மண்டையில் ஒரே எரிச்சல். துருப்பிடித்த கத்தியால் ஆங்காங்கே கீறல்கள். தடவப்பட்ட சந்தனத்தில் ஏதேதோ கெமிகல்ஸ் கலப்படம்.////
நன்றி வை.கோ. சார்.
இலவசங்களால் வரும் பின் விளைவுகளை மிக அழகாய் சொல்லி விட்டீர்கள்.
நன்றி சென்னைப் பித்தன்., சிவமணி அண்ணா, வெங்கட், இளங்கோ
பதிலளிநீக்குநிலாமகள் சொன்னது
பதிலளிநீக்கு//ஒவ்வொரு முறையும்
தோற்றுப் போனது
மக்கள் தான்//
இந்த முறை மாறுமா? அல்லது இதெல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்காகுமா?///
இந்த முறை ஆட்சி மாற்றம் வேண்டுமானால் வரலாம். காட்சி மாற்றம் வராது. ஆனால் மாற்றத்திற்கான அறிகுறிகள் தென்படலாம். ( 25000 க்கு மேல் 49-O பதிவாகியுள்ளன)
நன்றி ஊரான், RVS இராஜராஜேஸ்வரி, வலிபோக்கன், & தென்றல்
பதிலளிநீக்குஆனந்தி சொன்னது.
பதிலளிநீக்கு\\வெந்த புண்ணில் வேலு பாச்சாதிங்க சிவா...நாங்களே..கவர் பணம் கொடுக்காமல் மொட்டை அடிச்சிட்டாங்கன்னு கடுப்பில் இருக்கோம்...ஹீ ஹீ..//
ஆமாங்க உங்க வருத்தமும் ஒரு வகையில சரிதான். கறுப்புப் பணம் வெளியில வராம போச்சே.
நன்றி Dr .முருகானந்தம். ரமணி சார், GMB சார், ஸ்ரீராம், நாகா, லக்ஷ்மி, ஜீ , ஹேமா, & கமலேஷ்
பதிலளிநீக்குஇளமுருகன் சொன்னது. \\அண்ணாவால் ஏற்பட்ட மாற்றம், அநியாயத்தில்தான் முடிந்திருக்கிறது.
பதிலளிநீக்குஅன்னாவால் ஏற்படுகிற மாற்றம், நல்லதாய் முடியும் என்று நம்புவோம்//
அண்ணாவால் ஏற்பட்ட மாற்றம் அவரை சுற்றி இருந்தவர்களால் அநியாயத்தில் முடிந்தது. அன்னாவை சுற்றி இருப்பவர்களைப் பார்த்தாலும் பயம் வருகிறது.
நன்றி அறிவன் சார். நன்றி அப்பாவி தங்கமணி நன்றி சமுத்ரா
பதிலளிநீக்குசுந்தர் ஜீ சொன்னது
பதிலளிநீக்கு\\\சிவா!உங்களின் பலம் மரபு சார்ந்த லயம் இணைந்த வடிவம்தான்.
இதே கருத்தை அந்த வடிவத்தில் இன்னும் பலமாக நெற்றியில் அடித்தது போல சொல்லியிருக்கமுடியும் உங்களால்.//
நன்றி சுந்தர்ஜி சார்
இந்தக் கவிதை 1996 ஆம் ஆண்டு த.முஎ.ச. நடத்திய கவியரங்கில் வாசிக்கப்பட்ட கவிதையின் ஒரு பகுதி. மரபில் ஆரம்பித்து புதுக்கவிதையில் முடித்தேன். பெரிதாய் பாராட்டுப் பெற்றது. புதுக்கவிதை அவ்வப்போது எழுதத் தான் வேண்டும் . இல்லையேல் நம்மை புறந்தள்ளி விடுவார்கள்.