ஞாயிறு, மே 01, 2011

மே... வெண்பாக்கள்


மெய்யாலும்ம்ம்ம்ம்ம்..மே


உழைப்பே உயர்வா ? 
  உளறல் ! பிதற்றல்!
பிழைக்கத் தெரியாதோர் 
  பேச்சு - உழைக்காமல் 
முன்னேறிக் காட்டலாம்.
   முன்னேற்றக் கட்சியில் 
என்னோடு  இணையுங்கள்  
   இன்று. 



   
  ம்ம்ம்ம்ம்ம்மே . ....


உழைத்துக் களைத்தோரே
   ஓடோடி வாரீர் !
அழைக்கின்றார் நம்தலைவர் 
  அன்பாய் -  உழைப்போரின்
வாழ்வை வளமாக்க 
  வாரி வழங்குவீர் !
ஏழ்மை ஒழிப்பு நிதி 
   இன்று. 
  


                                                  -சிவகுமாரன் 



24 கருத்துகள்:

  1. புரிந்தது போலவும் இருக்கு
    புரியாதது போலவும் இருக்கு.

    பதிலளிநீக்கு
  2. என்ன புரியலைன்னு எனக்கு புரியலையே மேடம்.

    அரசியலில் சேர்ந்து விட்டால் உழைக்காமல் உயர்ந்து விடலாம் என்பது முதல் வெண்பாவின் செய்தி.

    உழைப்பாளர்களின் இரத்தத்தை உறிஞ்சும் அரசியல்வாதிகளின் பிரச்சாரம் இரண்டாவது வெண்பாவின் செய்தி.

    பதிலளிநீக்கு
  3. இப்போ தெளிவாக புரிந்துவிட்டது.நன்றி.

    பதிலளிநீக்கு
  4. சரியான நேரத்தில் சரியான வெண்பா!ரிசல்டுக்காக காத்திருக்கும் இந்த நேரத்தில் தில் லானதா இருக்கு!

    பதிலளிநீக்கு
  5. சுருக்கமாகவும் தெளிவாகவும் சொல்லியிருக்கிறீர்கள். நல்ல கவிதைகள்.

    பதிலளிநீக்கு
  6. நன்றாக இருக்கிறது வெண்பா, செய்திதான் கசக்கிறது

    பதிலளிநீக்கு
  7. மெய்யாலும்ம்ம்ம்ம்ம்..மே//

    உழைக்க முடியாதோராய் நொண்டிச் சாட்டுடன் நிற்கும் நபர்களைச் சாடி நிற்கிறது,
    இடையில்...முன்னேற்றக் கட்சியில்
    எள்ளி நகையாடல் இடம் பெற்றிருக்கிறது.

    பதிலளிநீக்கு
  8. ம்ம்ம்ம்ம்ம்மே . ....//

    சுய நல வேட்பாளர்கள், கட்சிக்காரர்களின் நலம் வேட்டி வழங்கப்படும் ஏழ்மை நிதியினையும், உழைப்பின்றி உயர வால் பிடிக்க நினைக்கும் உள்ளங்களையும் இரண்டாவது கவிதை எள்ளி நகை செய்கிறது.

    பதிலளிநீக்கு
  9. இரண்டுமே நல்ல கிண்டல் கவிதைகள்.
    உழைப்பாளியை ஆடாகவும், உழைப்பைச்சுரண்டுபவரை ஓணாயாகவும் படம் மூலம் பொருத்தமாக கொடுத்துள்ளீர்கள். பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  10. வெண்பாவில் எதிர்மறை சற்று துக்கலாக இருந்தாலும்..இந்த சாட்டையடி அரசியல் அட்டைகளுக்கு தேவையான ஓன்று...

    பதிலளிநீக்கு
  11. வெண்பாவில் எதிர்மறை சற்று துக்கலாக இருந்தாலும்..இந்த சாட்டையடி அரசியல் அட்டைகளுக்கு தேவையான ஓன்று...

    பதிலளிநீக்கு
  12. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  13. ஊசியேற்றியே கொல்லும் ஜாதி நாமெல்லாம்.

    பதிலளிநீக்கு
  14. இணைந்தாச்சு முன்னேற்றக் கட்சியில். நிதியா நாமமா எது கிடைக்கும் சொல்லுமே?

    பதிலளிநீக்கு
  15. அருமையான வெண்பா
    மே...மே...என்பது நன்றாய் இருக்கிறது
    மெய்யாலுமே
    மே தின நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  16. சரியான நேரத்தில் சரியான வெண்பா

    பதிலளிநீக்கு
  17. எண்ணங்களை
    எழுத்தாக்குவதே பெரிய வேலை ..

    அதை தாங்கள் கவியாக்கித் தந்திருக்கிறீர்கள் .. வாழ்த்துக்கள்

    தொடர்ந்து வருகிறோம்,

    சிவகுமாரனின் அருட்கவி - சிவயசிவ - விற்கும் பாயட்டும்,

    http://sivaayasivaa.blogspot.com

    அன்பே சிவம்.

    பதிலளிநீக்கு
  18. சொல்ல வந்ததை சிறப்பாக சொல்லி இருக்கின்றீர் ..
    படமும் சரியா பொருந்தி இருக்கின்றது ,...

    பதிலளிநீக்கு
  19. உழைப்பாளர் தினத்திற்கு உகந்த மேதினக் கவிதைக்குப் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  20. அட!... சூப்பர்ப். படமும் நச்சென்ற வரிகளும். ஏழ்மை ஒழிக்க அவர்களிடமே நிதி உதவி?!.... அது சரி யார் வாழ்வை வளமாக்க!...

    பதிலளிநீக்கு