அங்குமிங்கும்
அல்லாடிக் கொண்டிருக்கிறது
காற்று வெளியெங்கும்
கவிதை.
ஒரு தென்றலாய்.
மூச்சுவிட நேரமின்றி
ஓடுகிற ஓட்டத்தில்
கைக்கு எட்டாமலும்
கண்ணுக்குத் தெரியாமலும்
கரைந்து போகின்றன
விரிந்த மலரிலிருந்து
வெளிப்படும் மணமாய்
நுகரப்படாமலேயே.
ஒரு தியானம் போல்
உள்ளிழுத்து நிறுத்தி
காற்றை மூச்சாக்கி
கண்மூடி களிக்கையில்
மெல்ல.. மெல்ல..
எட்டிப் பார்க்கிறது
ஒரு பெரிய நூல்கண்டின்
சிறிய நுனி போல
எழுதப்படாத கவிதையின்
ஒரு வரி.
அல்லாடிக் கொண்டிருக்கிறது
காற்று வெளியெங்கும்
கவிதை.
ஒரு தென்றலாய்.
மூச்சுவிட நேரமின்றி
ஓடுகிற ஓட்டத்தில்
கைக்கு எட்டாமலும்
கண்ணுக்குத் தெரியாமலும்
கரைந்து போகின்றன
விரிந்த மலரிலிருந்து
வெளிப்படும் மணமாய்
நுகரப்படாமலேயே.
ஒரு தியானம் போல்
உள்ளிழுத்து நிறுத்தி
காற்றை மூச்சாக்கி
கண்மூடி களிக்கையில்
மெல்ல.. மெல்ல..
எட்டிப் பார்க்கிறது
ஒரு பெரிய நூல்கண்டின்
சிறிய நுனி போல
எழுதப்படாத கவிதையின்
ஒரு வரி.
சிவகுமாரன்
எழுதப்படாத கவிதையும் ஒரு தியானம் தான் - நுட்பமான கவிதை.
பதிலளிநீக்குமிகவும் ரசித்தேன். ரசிக்கிறேன். நூல்கண்டின் சிறிய நுனி, இதை இன்னும் கொஞ்ச நாள் நினைத்துக் கொண்டே இருப்பேன். beautiful!
தென்றலாய்? புயலாய்??
பதிலளிநீக்குதென்றலா அல்லது புயலா??
பதிலளிநீக்குநூல்கண்டின் நுனியா அல்லது அணுகுண்டின் திரியா??
எல்லாருக்குமே இந்த அவஸ்தை இருக்கா.....நான் நினைச்சேன் எனக்கு மட்டும்தானாக்குமென்று !
பதிலளிநீக்கு/// ஒரு பெரிய நூல்கண்டின்
பதிலளிநீக்குசிறிய நுனி போல
எழுதப்படாத கவிதையின்
ஒரு வரி. ///
மனதில் தைத்த வரி...
மூன்றாவது கண்ணி கவர்கிறது. இரண்டாவது கண்ணியில் கடைசி வரி சேராமல் தனித்து நிற்கிறதோ?
பதிலளிநீக்குநன்றி அப்பாஜி -
பதிலளிநீக்குஇளமுருகா,
பதிலளிநீக்குதென்றலோ புயலோ
நூல்கண்டின் நுனியோ
அணுகுண்டின் திரியோ
காற்றின் போக்கையும்
கவிஞனின் வாக்கையும்
தீர்மானிப்பது
புறவிசைகள் தான்.
ஹேமா,
பதிலளிநீக்குகவிதையை சுமக்கும்
எல்லோருக்குமான
அவஸ்தை பொதுவானது தான்
கர்ப்பிணியின் அவஸ்தை போல்.
நன்றி தனபாலன் சார்
பதிலளிநீக்குஸ்ரீராம் கூறியது
பதிலளிநீக்கு\\\\மூன்றாவது கண்ணி கவர்கிறது. இரண்டாவது கண்ணியில் கடைசி வரி சேராமல் தனித்து நிற்கிறதோ?///
எனக்கென்னவோ முதலாவது கண்ணியின் கடைசி வரி தான் தனித்து நிற்பது போல் தோன்றியது.(ஒரு தென்றலாய் - என்ற வரி ).
நுகரப்படாத மலரின் மணம் போன்றது தானே எழுதாக் கவிதையும்.
வழக்கமாய் ஒவ்வொரு கவிதையிலும் ஒரு புதிய உவமை இருக்கும் சிவாவின் கவிதைகளில். உங்கள் கவிதைத் தியானம் காலமெல்லாம் இருக்கட்டும்.
பதிலளிநீக்குஒவ்வொரு க்குள்ளும் ஒவ்வொரு திறமை ஒவ்வொரு கவித்துவம் உங்களதும் தனி விதம் . அருமை
பதிலளிநீக்குஎனக்கென்னவோ அந்த எழுதப்படாத வரி, பெண்பார்க்கும் படலத்தின்போது சன்னல்வழி எட்டிப்பாத்து மறையும் மணப்பெண்ணைப்போல் தோன்றுகிறது. நூற்கண்டு உவமை அருமை. வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குமெல்ல எட்டிப் பார்க்கும் கவிதையை மிக அழகாக கூறியுள்ளீர்கள்...
பதிலளிநீக்குகவிதை அற்ருமை...
நூற்கண்டு உவமை அருமை
பதிலளிநீக்குவணக்கம்...
பதிலளிநீக்குஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_30.html) சென்று பார்க்கவும்...
நன்றி...
நன்றி ஆதிரா மேடம். தமிழாய்ந்த தங்களின் வாழ்த்து எப்போதுமே எனக்குப் பெருமை
பதிலளிநீக்குநன்றி சந்திர கௌரி மேடம் தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும்
பதிலளிநீக்குதங்களின் பெண்பார்க்கும் படலம் அழகோ அழகு அகரம் அமுதன். தமிழ் சான்றோரான தங்களின் வாழ்த்து என்னை பெருமிதம் கொள்ள வைக்கிறது அமுதன். நன்றி
பதிலளிநீக்குநன்றி இரவின் புன்னகை
பதிலளிநீக்குநன்றி கரந்தை ஜெயக்குமார்
நன்றி தனபால்
எழுதப்படாத கவிதையின்
பதிலளிநீக்குஒரு வரி.பல சிந்தனைகளை விதைத்தது ..
இதயம் நிறைந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!
பதிலளிநீக்குநேரமிலாமல் போனாலும் குறுகிய தியானமாக இருந்தாலும் உங்கள் கவிதை தியானம் ஆழமான தியானம்.
பதிலளிநீக்குவலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்...
பதிலளிநீக்குhttp://blogintamil.blogspot.in/2013/03/blog-post_7.html
Thanks to all
பதிலளிநீக்குThanks to all
பதிலளிநீக்கு