சனி, மார்ச் 22, 2014

ஒப்பனை



ஒப்பனைகளில் 
ஒளிந்து கொண்டிருக்கிறது 
வயது.

கவிதைக்கு அழகு 
கற்பனை எனில் 
உடலுக்கு அழகு 
ஒப்பனை.

வழித்து எறிந்து 
ஒழித்து விட நினைத்தாலும் 
கடமை முடியும் முன் 
கணக்கை முடிக்க வரும்  
காலனின் வருகையை 
கண் மறைப்பதில் 
வெற்றி கண்டு விடுகிறது.
ஒவ்வொரு முறையும் 
ஒப்பனை.

உண்மையை மறைப்பதால் 
தலை குனிந்தாலும் 
தன்னம்பிக்கை தருவதால் 
தலை நிமிர்ந்து விடுகிறது 

ஒப்பனை 
அதற்கு 
ஒப்பிலை.

சிவகுமாரன் 

4 கருத்துகள்:

  1. இன்று அதிகம் தேவைப்படுகிறது...

    ஒப்பனை அதற்கு ஒப்பில்லை தான்...

    பதிலளிநீக்கு
  2. ஒப்பனைக்கு ஒப்பில்லைதான்.
    அருமை நண்பரே.
    நீண்ட நாட்களுக்குப் பிறகு தங்களின் பதவினைப் பார்ப்பதில் மகிழ்ச்சி

    பதிலளிநீக்கு

  3. வணக்கம்!

    ஒல்லியும் குண்டாய் உருபெறும்! முன்னெழுந்த
    பல்லியும் நம்முன் பளபளக்கும்! - மல்லியாய்க்
    குப்பனை சுப்பனைச் கூா்ந்திழுக்கும்! இவ்வுலகில்
    ஒப்பனைக் கில்லை ஒழிவு!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    பதிலளிநீக்கு