திங்கள், அக்டோபர் 20, 2014

பிள்ளைக் குறள் 20


கண்டு பிடிப்பாய்! கடவுள் பெருங்கருணை
உண்டு முழுதாய் உனக்கு
.                     
உனக்கென்ற ஒன்றை உனையன்றி யாரும்
தனக்கென்று சொல்லத் தகாது.

தகாத பழக்கங்கள் தன்னுடைய வாழ்வில்
புகாமல் கவனித்துப் போ.

போனதை எண்ணி புலம்பாதே! சாதிக்க
வானளவு வாய்ப்புண்டு வா.

வாவென்றால் முன்னின்று வாய்பொத்தி நிற்காதோ!
நீவென்ற பின்னே நிதி.

நிதிக்கு உலகில் நிகருண்டு! உந்தன்
மதிக்கில்லை இன்னுமோர் மாற்று.

மாற்றம் பிறக்கும்! மனதில் துணிவிருந்தால்
வேற்றாய் மலரும் விதி.

விதியை எதிர்கொள்ளும் வீரம் இருந்தால்
எதிர்க்க எவருண்டு இங்கு.

இங்குனக்கு ஆண்டவன் ஈந்ததை நீபிறர்க்கு
தங்கு தடையின்றி தா.

தாராளம் காட்டிடு தர்மச் செயல்களில்!
ஏராளம் காட்டும் இறை.                                                                 20

                                                                                                                                      தொடரும்....

சிவகுமாரன்




14 கருத்துகள்:

  1. வணக்கம் கவிஞரே!

    இறையருள் கிட்டும் எனினும் முயற்சி
    குறைவின்றி உன்வாழ்விற் கொள்!

    அத்தனையும் முத்துக்கள்!
    நூலிற் சேர்த்திடுங்கள்!

    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  2. எல்லாமே அருமை. குறிப்பாக 4, 6 7.

    பதிலளிநீக்கு
  3. அன்பு சிவா! எதைச் சிறந்ததெனக் குறிப்பிடுவேன்? எல்லாமே ஆணிமுத்து. முழுதுமாய்க் குவித்தபின் தொடுப்போம் ஒரு முத்தாரம். அன்னை மீனாட்சி அருளுண்டு உன் முயற்சிக்கெல்லாம். தீபாவளி வாழ்த்துக்கள். (காலையில் இட்ட கருத்துகாணாமல் போனதால் மீண்டுமிட்டேன் உவந்து. வானவில்லில் இன்று காதல்கோட்டை)

    பதிலளிநீக்கு
  4. இணைத்துக் கொண்டேன்
    விடுபட்டவைகள் அனைத்தையும் இவ்வாரம்
    படித்துவிடுவேன்.வாழ்த்துக்களுடன்...

    பதிலளிநீக்கு
  5. இணைத்துக் கொண்டேன்
    விடுபட்டவைகள் அனைத்தையும் இவ்வாரம்
    படித்துவிடுவேன்.வாழ்த்துக்களுடன்...

    பதிலளிநீக்கு
  6. அன்புள்ள சிவகுமரன்..

    அருமையாக உள்ளது.

    உங்கள் குழந்தையா? என்ன படிக்கிறான்? விடுதியில் சேர்த்துள்ளீர்களா? விவரம் அறிய விழைகிறேன்.

    எனினும் அவனுக்கான ஒரு குரல் நல்ல பொறுபபான தகப்பனின் தமிழ்த் தொண்டாகவே படுகிறது எனக்கு.

    தொடருங்கள் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  7. நன்றி இளமதி.நன்றி ஸ்ரீராம் சார் .நன்றி மோகன்ஜி அண்ணா

    பதிலளிநீக்கு
  8. நன்றி ரமணி சார். தங்களின் மறு வருகைக்கு. தங்களைப் போன்ற நிறைய பேரை மீண்டும் வலைக்கு அழைக்க வேண்டும். 300 followers எப்படி காணாமல் போனார்கள் தெரியவில்லை. தொழில்நுட்ப விசயங்கள் இன்னும் எனக்கு பிடிபடவில்லை. வலைப்பதிவர் சந்திப்பில் தங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  9. நன்றி ஹரணி சார். என் மகனின் சிறு பிராயத்தில் எடுத்த புகைப்படம் இது. தற்போது 11ம் வகுப்பு சென்னையில் CBSE பள்ளியில் படிக்கிறான். மதுரையில் போட்டித் தேர்வுகளுக்கான சரியான வழிகாட்டுதலும் வாய்ப்புகளும் இல்லாததால் சென்னையில் விடுதியில் தங்கி படிக்க வேண்டிய சூழல்.
    அவனுடைய எதிர்காலத்திற்காக சில சங்கடங்களை நானும் என் மனைவியும் சகித்துக் கொண்டிருக்கிறோம். தங்களின் அக்கறை கலந்த விசாரிப்புக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  10. இறையின் வரம்பெற்ற தந்தை உரைக்கும்
    மறைமொழி போதும் மகற்கு

    பதிலளிநீக்கு
  11. குறள் படிக்க இப்படி ஒரு தந்தை கிடைத்தால் அதுவும் பேறு தான்.

    பதிலளிநீக்கு
  12. நான் எப்படி இதையெல்லாம் தவற விட்டேன்
    குறளில் அறிவுரைகள் குழந்தைக்கு அப்பப்பா யாருக்கு கிடைக்கும் இந்த பாக்கியம். ம்..ம்...ம் அருமை என்று வெறுமனே சொல்ல முடியாது அற்புதம்.
    இதுவும் போதாது. வேறு என்ன சொல்ல.
    தொடர வாழ்த்துக்கள் சகோ ...!

    பதிலளிநீக்கு
  13. தாங்கள் படித்து கருத்திடுவதும் என் பேறு அப்பாஜி

    பதிலளிநீக்கு
  14. நன்றி இனியா, தேடிப் பிடித்து படித்து கருத்திட்டதற்கு. மிக்க மகிழ்ச்சி

    பதிலளிநீக்கு