புதன், நவம்பர் 12, 2014

சேராதோ


வேதம் இதிகாசம் வேண்டுவது எல்லாமே
நாதன் ஒருவனென்ற நாமந்தான் - மோதல்கள்
தீரா மதங்கள் தெளிவுற்று ஒன்றாகச்
சேராதோ நெஞ்சமே சொல்.

சிவகுமாரன்
06.12.1992

66 கருத்துகள்:

  1. பாபர் மசூதி இடிப்பின் போது - எழுதிய வெண்பா

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் சகோதரரே!

    நாதன் ஒருவனே நம்பினோர் தொல்லைதரார்!
    வாதமிதைக் கொண்டார் வழக்கு!

    இது இப்பொழுதும் பொருந்தும்!.
    வெவ்வேறு தோற்றப்பாடுகளுடன்..!

    அருமையான வெண்பா கவிஞரே! வாழ்த்துக்கள்!

    தமிழ் மணம்.1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொல்லை தருகின்ற தீய மதவாதம்
      இல்லாமல் செய்வோம் இனி.
      - நன்றி சகோதரி.

      நீக்கு
  3. ஆம் அண்ணா!
    நீங்கள் சொல்வது உண்மைதான்.
    பொங்குபல சமயமென்னும் நதிகளெல்லாம் புகுந்துகலந்திட நிறைவாய்ப் பொங்கியோங்கும்
    கங்குகரை காணாத கடல் என்றும்,

    அல்லா என்பார் சில பேர்கள்
    அரனரி என்பார் சில பேர்கள்
    வல்லான் அவன்பர மண்டத்தெ
    வாழும் தந்தை என்பார்கள்
    சொல்லால் விளங்கா நிர்வாணம்
    என்றும் சிலபேர் சொல்வார்கள்
    எல்லாம் இப்படிப் பலபேச
    ஏதோ ஒருபொருள் இருக்கிறதே..

    என்றும் நினைவுக்கு வரும் பாடல் வரிசையில் இதோ உங்கள் பாடலையும் நினைவிற்பதிகிறேன்.
    நன்றி.
    த ம 3

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி விஜூ. இரண்டாவது பாடல் நான் படித்ததில்லை. அழகான கவிதை. கடைசி இரண்டு வரிகளில் தான் இருக்கிறது கவித்துவம். அந்தக் கவிதையின் வரிசையில் எனது கவிதை என்பது ஏற்புடையதாய் இல்லை. ஏனெனில் என் கவிதையில் வெறுமனே செய்தி தான் இருக்கிறது. தங்களது நினைவாற்றல் வியக்க வைக்கிறது. நன்றி

      நீக்கு
  4. தமிழ் மண வாக்குப் பட்டை வேலை செய்ய வில்லையோ அண்ணா?
    வாக்களிக்க முயன்றால்,
    உங்கள் வாக்கு ஏற்கனவே சேகரிக்கப்பட்டது என வருகிறதே..?!
    சேராதோ ? என்று கவிதையின் தலைப்பிருப்பதால் என் வாக்கு சேராதோ?

    பதிலளிநீக்கு
  5. எல்லாமே நாதன் செயல் தானே - அவனன்றி ஓரணுவும் அசையாது, இல்லையா?

    பதிலளிநீக்கு
  6. அருமையான வெண்பா வாழ்த்துக்கள் ....!

    பதிலளிநீக்கு
  7. அரிக்கட்சிக் காரர்கள் அரன் இல்லை என்கிறார்கள்
    அரன்கட்சிக் காரர்கள் அரி இல்லை என்கிறார்கள்.
    இருவரும் சேர்ந்து மற்ற மதக் கடவுளை இலலை என்கிறாரகள்.
    ஆக ஆத்திகரை விடவும் “அவர் கடவுள் இல்லை“ என்பவர்கள்தான் அதிகம்!
    (லாஜிக்தான் இதில் மேஜிக் எதுவும் இல்லை)
    எந்த நாத்திகனும் போய் எந்தக் கோவிலையும் இடித்ததில்லை.
    அடுத்த மதத்துக் காரன்தான் இடிக்கிறான்.
    உலகம் முழுவதும் இதுவரை நடந்த போர்களில் இன-மத-(இந்தியாவில் ஸ்பெஷல் சாதி)சண்டையால் நடந்த அழிவுகள் தான் உலகப்பெரும் போர்களின் அழிவுகளை விடவும் அதிகம். உண்மை வெறும் புகழ்ச்சியில்லை.
    “ஆறுகளில் மிகவும் அழுக்கானது-
    அந்த டிசம்பர் ஆறு“ என்றார் உங்கள் ஆலங்குடிக் கவிஞர் ரமா.ராமநாதன்.

    வேதம் இதிகாசம் எல்லாம் மனிதருக்குள்
    மோதும் வழக்கினையே மூட்டியது - போதும்,இனி
    ஒன்றாய் இருப்போம் “ஒருவனால்“ அல்லபலர்
    நன்றாய் இருக்கவழி நாடு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல்பாட்டு நான் என் தொடக்கப்பள்ளியை விட்டு மேல் நிலைப்பள்ளிக்கு நுழைந்த சமயத்தில் பாடப்புத்தகத்தில் இருந்தது.
      தமிழ்ப்பாடநூலின் மறக்க முடியாத பாடலாய் அமைந்த பாடல்.
      அல்லா என்பார் எனும் பாடல் ஒன்பதாம் வகுப்பில் படித்ததாய் நினைவு..‘
      ஆத்திகமும் நாத்திகமும் அவரவர் கொண்ட நம்பிக்கையைச் சார்ந்தது.
      எதையும் அறிய, “கட உள்“ என்னும் , அறிவு பகுத்தறிவாயினும் ஆத்திகமாயினும் நாத்திகமாயினும் ஆதரிக்கும் அணியில் நானிருக்கிறேன்.
      அவரவர் கருத்தும் அவரவர் சுதந்திரமும் அவரவர்க்கு..!
      ரமா ராமநாதனின் கவிதை அருமை அய்யா!


      பேதம் வளர்க்கின்ற பொல்லாங்கு நம்மிடையே
      போதும் எனச்சொல்லிப் போவதினால் தீதென்ன?
      வாதம் வளர்ப்பதுவும் வல்லமை பேசுவதும்
      ஏதுமிலா தென்றன் இயல்பு !

      நன்றி அய்யா!

      அண்ணனின் தளத்தில் வெண்பாப் பின்னூட்டமிடப் பயமாய்த்தான் இருக்கிறது!

      நீக்கு
    2. நன்றி அய்யா. தோழர் ரமா ராமநாதனின் கவிதையைச் சொல்லி நினைவலைகளைக் கிளப்பி விட்டீர்கள். 1997 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் , கவிஞர் நீலா நடத்திய தோழி மூன்றாம் ஆண்டு விழாவில் கவிஞர் ஜீவி அவர்களின் தலைமையில் நடந்த " தேதிகள் சொல்லும் சேதிகள் " என்னும் கவியரங்கில், ராமநாதன் வாசித்த கவிதை வரி அது. அரங்கம் அதிர்ந்தது அப்போது. ரமா டிசம்பர் 6 என்ற தலைப்பிலும் ,நான் மே1 என்ற தலைப்பிலும், மு.முருகேஷ் ஏப்ரல் 1 என்ற தலைப்பிலும், தங்கம் மூர்த்தி ஜனவரி 1 என்ற தலைப்பிலும், நீலா மார்ச் 8 என்ற தலைப்பிலும் கவிதை வாசித்த இனிய காலகட்டம் அது. நன்றி அய்யா.
      உங்கள் வெண்பா அருமை.

      நீக்கு
    3. \\\\அண்ணனின் தளத்தில் வெண்பாப் பின்னூட்டமிடப் பயமாய்த்தான் இருக்கிறது!///
      இது கொஞ்சம் அதிகம் விஜூ . ஒரு வெண்பா பரம்பரையையே உருவாக்கிக் கொண்டிருக்கும் தாங்கள் இப்படி சொல்லலாமா ?

      \\வாதம் வளர்ப்பதுவும் வல்லமை பேசுவதும்
      ஏதுமிலா தென்றன் இயல்பு !///

      என் இயல்பும் அதுதான்.
      நன்றி விஜு

      நீக்கு
  8. இப்போதும் பொருந்தும் கவிதையாய்...எப்போது ஒழியும் இந்த மோதல்கள் என்ற வேதனையின் வெளிப்பாடாய்...நன்று...மதமும் மதுவும் தனக்குத்தானே மனிதன் வைத்துக்கொண்ட கொள்ளி....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. \\மதமும் மதுவும் தனக்குத்தானே மனிதன் வைத்துக்கொண்ட கொள்ளி....///
      கவிதையாய் சொன்னீர்கள் சகோதரி
      நன்றி

      நீக்கு
  9. ஆதாமும் ஏவாளும் ஆதியிலே வந்தவராம்
    வேதாந்தம் வேண்டுமா விளம்பு

    பதிலளிநீக்கு
  10. உங்கள் பாடல் நயத்தை ரசிக்கிறேன். அதுவும் பாபர் மசூதி இடித்தபோதுஎழுதியது என்கிறீர்கள். மதங்கள் நல்லிணக்கத்துக்கு வழிசெய்யாமல் பிரிவினை எண்ணங்களை வளர்க்குமானால் அவை தேவையா என்னும் சர்ச்சையில் இப்போது ஈடுபடல் வேண்டாமென்று தோன்றுகிறது சிவகுமாரா. நாதன் நாமம் ஒன்றுதான் என்று எத்தனை பேர்கள் நம்புகிறார்கள்.? வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  11. நாதன் ஒருவனென்று எல்லோரும் சொன்னால் சரிதான்! :)))

    //எல்லாமே நாதன் செயல் தானே - அவனன்றி ஓரணுவும் அசையாது, இல்லையா?//

    அட! ஒரு ஸ்மைலி கூட இல்லையே..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லோரும் சொல்ல மாட்டார்கள். நாமாவது சொல்வோம் ஸ்ரீராம் சார்.

      பின்னூட்டத்தில் ஸ்மைலி இட முடியுமா ?

      நீக்கு
  12. கணினி வழிகாட்டி அண்ணா நிலவன்
    பணித்ததால் வந்தேன் முதன்முறை பெற்றேன்
    மனிதத்தை தேடும் மரபுக்கவி ஒன்றை
    இனிதே பருகும் வாய்ப்பு !!!

    இங்க பாருங்க சகோ, இந்த பின்னூடத்திற்கு என்ன சன்மானம் கொடுப்பதா இருந்தாலும் இப்படி எழுத சொல்லித்தந்த விஜூ அண்ணாவுக்கும், உசுப்பேத்திய நிலவன் அண்ணாவிற்கு கொடுத்துவிடுமாறு தாழ்மையோடு கேட்டுக்கொள்கிறேன்!! நிஜமாவே அருமையான பாடல்.(நான் நீங்க எழுதினதை தான் சொன்னேன்). எனக்கு நல்ல வழிகாட்டியாய் இருக்கும் என்று நிலவன் அண்ணா இந்த பதிவை படிக்குமாறு அறிவுறித்தினார். உண்மை தான். நன்றி சகோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சகோதரி மைதிலி. விஜுவிடம் பயிற்சி சோடை போகுமா?
      மூன்றாவது அடியில் சிறு பிழை, (விஜூ அதையும் எதாவது மந்திரம் செய்து மாற்றி விடுவார்.)
      முத்து நிலவன் அய்யாவுக்கு என் நன்றிகள்.

      நீக்கு
    2. மரபுக்கவி - ( 2 1 2)
      மூன்றில் ஒன்றல்லவா சகோ?
      அண்ணனிடம் இல்லாத மந்திரமா என்னிடம் இருக்கிறது,
      மந்திரம் ... ம்ம்...
      தொலையட்டும் “ம்“
      “கணினி வழிகாட்டி அண்ணா நிலவன்
      பணித்ததால் வந்தேன் முதன்முறை பெற்றேன்
      மனிதத்தைத் தேடுமர புக்கவி ஒன்றை
      இனிதே பருகும் வாய்ப்பு !!!“
      சரியா அண்ணா?!

      நீக்கு
    3. இத இத இதத் தான் எதிர்பார்த்தேன்.
      மந்திரக் கவிதான். பலே.

      நீக்கு
    4. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    5. அண்ணா! மனம்தளரா விக்கிரமா தித்தன்போல்
      வெண்பா எனத்திகழும் வேதாளத் தைப்பிடித்தே
      தீர்வேன் எனுமாசை தன்னில் முயல்கிறேன்
      கூர்மதியால் தீட்டித் தா!

      திட்டி தந்தாலும் சரிதான்:)) அழ அழ சொல்பவர் நல்லத்துக்கு தான் சொல்வார்னு எங்க அம்மா சொல்லுவாங்க:)

      நீக்கு
    6. சகோதரி,
      உங்களுக்கான வகுப்பு முடிந்தது.
      யானை மண்டியிட்டு விட்டது.
      இனி நீங்கள் சவாரி செய்யலாம்!
      திசைகளைத் தீர்மானிக்கலாம்.
      நான் மதிக்கும் கவிஞர் ஒருவரின் தளத்தில் உங்களின் முயற்சி வெற்றி பெற்றதை எண்ணிப் பெரிதும் மகிழ்கிறேன்.
      நேரில் காணாமல் பேசாமல் வெறும் எழுத்து கொண்டு நகர்ந்த பதிவுகள் மூலமாக நீங்கள் இவ்வடிவத்தைப் பிடித்துக கொண்டதற்குக் காரணம் நிச்சயமாய் உங்கள் ஆர்வமும் உழைப்புமே என்பேன்.
      என் பணி முடிந்தது.
      வாழ்த்துகள் சகோ!
      அருமை !
      வெண்பா எப்படி இருக்கிறதுது என அண்ணன் நிச்சயம் சொல்வார்.
      நன்றி

      நீக்கு
    7. வேழம் அடக்கிய வேங்கைபோல், வெண்பாவின்
      ஆழத்தைக் கண்டீர் அயராமல்! - தோழனாய்
      உம்மோடு யாமிருப்போம், ஒன்றல்ல ஆயிரம்
      சும்மா படைப்பீர் சுழன்று.

      வாழ்த்துக்கள் சகோதரி

      நீக்கு
    8. ஆகா எனக்கும்தான் அன்பான அண்ணன்கள்
      பாகா யினிக்கும் துணையெனவே - நாளை
      முயற்சி பலசெய்ய யான்துணிவேன் வெண்பாவில்
      அயர்ச்சி எனும்சொல் மறந்து!!:)))

      அண்ணா ,
      பரிசுக்கு மிக்க நன்றி!! மிக அருமையான பரிசு!! மிகுந்த மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமாய்
      அன்பு தங்கை:)

      நீக்கு
    9. அண்ணா எனும் சொல்லில் நெகிழ்ந்து போனேன் சகோதரி.

      நீக்கு
    10. வெண்பாவில் “அயர்ச்சி“ வந்துவிட்டதே அதற்குள் சகோ!!!!!

      நீக்கு
    11. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    12. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    13. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    14. வெண்பா எனநான் அடுத்து முயன்றால்
      வெளிகள் மலைகளென சிந்திக்கச் சொல்லிவிட்டு
      வம்பாய் இதுபோல கேட்பது அண்ணா
      வேடிக்கை தானே சொல்!!
      --------
      சொல்லென இங்கொருமை சொன்னதற்கு அண்ணாவும்
      சோர்ந்தே போகமாட்டார் ஏனென்றால்- பாவில்
      தலைதட்டி தங்கைநானே சொல்லுதலை ஏற்பார்
      தளை தட்டுவதே பிழை!!

      இல்லையா அண்ணா!
      சிவா அண்ணா உங்க பக்கத்தை இப்படி அடித்துகிழித்து அழுக்கு செய்தமைக்கு மன்னிக்கவும்!

      நீக்கு
    15. எந்த அண்ணனைக் கேட்கிறிங்கன்னு தெரியலை.
      பரவாயில்லை!
      “ அணணா வேடிக்கை ( 1 1) ( 1 1 1) தானே சொல்?“ ( 1 1) (1)

      வேடிக்கைதான்!

      உண்மைதான்

      ““ தளை தட்டுவதே பிழை “ ( 2) (1 2 1) (2)

      “தளைதட் டுவதே பிழை“ பிழையல்ல!

      நீக்கு
    16. விஜூ அண்ணா உங்களை தான் கேட்டேன்:))
      ஹ்ம்ம்ம் better லக் நெக்ஸ்ட் டைம் னு என்னை சொல்லிக்கிறேன்:))

      நீக்கு
  13. மனிதன் ஒரு விநோதப் பிராணி
    ஒன்றாக வாழ்வது அந்தப் பிராணிக்கு உவப்பில்லாதது ...
    அண்ணாத்தே அனுப்பிவைத்தார் உங்களிடம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றாகச் சொன்னீர்கள் மது மற்ற பிராணிகள் எல்லாம் ஒன்றாய்த்தான் வாழ்கின்றன.
      அண்ணாத்தேக்கு நன்றி.

      நீக்கு
  14. எந்த மதமும் தெளிவை தராததால் தானே ம (ட)த மோதல்கள் உலகெங்கும் நடந்து கொண்டு இருக்கின்றன !
    த ம 6

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மதங்கள் தெளிவாய்த்தான் இருக்கின்றன பகவான்ஜி. மதவாதிகள் தான் குழப்புகின்றனர்.
      நன்றி நண்பரே

      நீக்கு
    2. கூவம் கூட நதியாய்த் தான் இருந்தது அப்பாஜி. சாக்கடையானது யார் குற்றம்

      நீக்கு
  15. நான் நணபர் விஜூவைப் போல் உருவம்பற்றி மட்டும் சொல்பவனல்லன். உள்ளடக்கம் பற்றியே பெரிதும் கவனம் தேவையென்பவன்.
    அதனால்தான் அழகான தெளிவான வடிவஞானம் உள்ள நீங்கள், இன்னும் சமூகப் பிரச்சினைகள் பற்றிப் பேச எழுத வேண்டும் என்னும் உரிமையில் சொன்னேன். உங்களுக்கு ஏற்புடையதல்ல என்றால், அந்த எனது பின்னூட்டத்தை நீக்கிவிடுங்கள். வெண்பாவையும்தான். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அய்யா. இந்தப் பின்னூட்டத்தின் பொருள் எனக்குப் புரியவில்லை. நான் இன்னும் தங்கள் பின்னூட்டத்திற்குப் பதில் அளிக்கவில்லையே. பின்னூட்டத்தை அதிலும் வெண்பாவை நீக்குவதா? சரிதான். என் தளத்திற்கு தாங்கள் வருகை தருவதே எனக்குப் பெரிய விஷயம். நான் ஏற்கெனவே சொன்ன மாதிரி, நீங்கள் என் சித்தப்பா சுந்தரபாரதியை பிரதிபலிக்கிறீர்கள். அவர் சொல்லாததையா நீங்கள் சொல்லி விட்டீர்கள் ?
      உங்களுக்கு சகல உரிமையும் உண்டு அய்யா. .

      நீக்கு
    2. நன்றி என் இளைய நண்பா. ஆனாலும் உங்கள் ஆத்திக மனத்தைக் காயப்படுத்திவிட்டேனோ என்னும் உறுத்தல். நான் பொதுவாக பக்திப்பதிவர்களிடம் பின்னூட்டமிடும் வழக்கமில்லை. ஏனோ ஏதோ உரிமையில் அப்படி அவசரப்பட்டு எழுதிவிட்டேனோ என்றும் மனம் குமைந்தேன். நீங்கள் இன்றைய இளைஞர்களுக்கு “நமது மரபில் காலூன்றி புதுமையில் சிறகுவிரிக்க“ கற்றுத்தரவே்ண்டும் என்பதே என் பேராசை. தோழர் சுந்தரபாரதியின் பாடல்களில் மயங்கி, அவரைத் தொகுப்புப் போடப் படுத்தி, போடவைத்து, அதற்கொரு முன்னுரையும் தந்தேன். அந்தத் தொகுப்பு கிடைக்குமா? (கரிசல் கிருஷ்ணசாமி கேட்டுக்கொண்டே இருக்கிறான்..சில பாடல்களை எடுத்து வைத்துக்கொண்டு.) தாங்களும் அவரது உள்ளடக்க மற்றும் உருவ வாரிசாகவே வரவேண்டும். இப்போது பாவகை உருவத்தில் பார்க்கிறேன். உங்கள் தொலைபேசி எண்ணை எனது தனியஞ்சலில் தாருங்கள். நன்றி (தூக்கம் வராமல் திடீரென்று விழித்துக் கொண்டு கணினியைத் திறந்தால் உங்கள் அஞ்சல்..இப்போதுதான் நிம்மதி) நன்றி என் இளைய தோழனே! நீங்கள் நன்றாக வருவீர்கள். வணக்கம்

      நீக்கு
    3. மிக்க நன்றி அய்யா. சித்தப்பாவின் கவிதைத் தொகுப்பு தங்களுக்குக் கிடைக்க ஆவன செய்கிறேன் அய்யா.

      நீக்கு
  16. அருமையான வெண்பா என்றும் பொறுந்தும் இது!

    பதிலளிநீக்கு
  17. சேராதோ.....
    அருமையான வெண்பா சிவகுமாரன் ஐயா.

    பதிலளிநீக்கு
  18. அருமையான வெண்பா நண்பரே
    நன்றி
    தம +1

    பதிலளிநீக்கு
  19. சிவகுமரா ! நீ கடலில் பெய்யும்மழை ! காட்டில் பொழியும் நிலா ! வேறென்ன சொல்ல ! வாழ்த்துக்களுடன் ---காஸ்யபன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடலில் பெய்தாலும் ஒருநாள் முத்தாவேன்.
      காட்டில் பொழிந்தாலும் விலங்கிற்கும் வெளிச்சமாவேன்.
      நன்றி அய்யா.

      நீக்கு
  20. வணக்கம். தங்களது பதிவுகளைப் படித்துவருகிறேன். எனது வலைப்பூவில் கனவில் வந்த காந்தி என்ற பதிவில் தங்கள் பெயரை இணைத்துள்ளேன். பார்க்கவும் இணைப்பைத் தொடரவும் அழைக்கிறேன். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி அய்யா. கண்டிப்பாய் தொடர்கிறேன்.

      நீக்கு
  21. கவிதை போட்டியில் வென்றமைக்கு வாழ்த்துகள் அண்ணா!

    பதிலளிநீக்கு