திங்கள், நவம்பர் 06, 2017

வலி


வண்டு துளைக்கையில்
வலி பொறுத்த
கர்ணனும்,
அம்புப் படுக்கையில்
அரற்றாத பீஷ்மனும்,
தசையறுத்துத்
தராசில் வைத்த
சிபியும்
சொல்லிக் கொடுக்கிறார்கள்
சூட்சுமம் ஒன்றை.
வலி தாங்குதலே
வலிமை என்று.

சருகை உதிர்த்த
மரத்தின் வலியும்
சிறகை உதிர்த்த
பறவையின் வலியும்
கண்டுணர
நீ
கவிஞனாக வேண்டியதில்லை.
காயம் படு போதும்.

                                                                                                                                                      
சிவகுமாரன்
06.11.2017

16 கருத்துகள்:

  1. தீயிணால் சுட்டபுண்....
    நன்றாக உணர்த்தும் வலியை. :)

    பதிலளிநீக்கு
  2. உண்மை
    தங்களின் கவி கண்டு மகிழ்ந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டன நண்பரே
    தொடர்ந்து எழுதுங்கள்
    தம 1

    பதிலளிநீக்கு
  3. தங்களைப் பார்த்ததில் மகிழ்ச்சி, சிவகுமாரன்!

    மரம் சருகை உதிர்த்தலும், பறவை சிறகை உதிர்ப்பதும் இயற்கை நியமங்கள் அல்லவோ?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது மிகைப்படுத்துதல் தான் ஜீவி சார். தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தானே தெரியும்.

      நீக்கு
  4. வலியின் வலியையும் அது காட்டும் வழியையும் உணர முடிந்தது.நன்றி

    பதிலளிநீக்கு
  5. நிறைய நாட்கள் ஆகிவிட்டதே தங்களைக் கண்டு. அருமையான கவிதை! ஆம் வலி அதைத் தாங்குவதே வலிமை!!! அது நம் மனதைப் புண்படுத்தலாக இருந்தாலும்!! அருமை அருமை சிவகுமாரன்!

    துளசிதரன், கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் . சில வலிகள் மனதைப் புண்படுத்தும். சில பண்படுத்தும்.
      எதுவானாலும் தாங்கித்தான் ஆக வேண்டும்.

      நீக்கு
  6. மரம்சருகை உதிர்ப்பதும் பறவை சிறகை உதிர்ப்பதும் மனிதன் முடியை உதிர்ப்பது போல்தானே சிவகுமாரா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் அய்யா.
      ஆனாலும்
      மயிர் நீத்தால் உயிர்
      நீக்குமாமே கஸ்தூரி மான்... ஏன்?
      ஊர்ப்பக்கம் ஒரு சொலவடை உண்டு.

      "முட்டையிடும் கோழிக்குத் தான் தெரியும் மூல நோவு" என்று.

      அதுவுமன்றி
      கவிதைக்கு ஏது காரண காரியம்?

      நீக்கு
    2. வலிமேல் வலி வந்தும் மனதில்
      கிலிகொள்ளாதிருப்பது வாழ்வில்
      சலிப்படையாதிருப்பது உலகில்
      கலி தீர்க்க வந்தோரின் மாண்பு

      மாசக்கணக்கில் மாயமாகிப்போனீரே என யோசித்திருக்கையில் வந்துசேர்ந்தீர் கவிதையுடன். வருக. தொடர்க.

      நீக்கு
  7. வலி தெரியாமல் வளர்ப்பதல்ல ... வலி பழக்கி வளர்ப்பது தான் நல்லது. நன்று சொன்னாய் தம்பி.

    பதிலளிநீக்கு
  8. மிகவும் அருமையான கவிதை 💐💐💐💐🌹🌹🌹🌹

    பதிலளிநீக்கு