ஞாயிறு, செப்டம்பர் 13, 2020

எங்கள் ஆடுகளத்தில் உங்கள் கோழிகள்.



கட்டை விரலை அல்ல.
ஏகலைவனையே
காவு கேட்கிறீர்கள்
துரோகித் துரோணர்களே.
உங்கள்
குருச் சேத்திரத்தில்  
நீண்டு கொண்டே 
போகின்றன
நீட்டு கொலைகள்.

முட்டையிடும் போட்டியில்
உங்கள் கோழிகளோடு
எங்கள் சேவல்களை
கலந்து கொள்ளச்
சொல்கிறீர்கள்.

ஓரிரண்டு முட்டைகளை
இட்டும் தொலைக்கின்றன
எங்கள் சேவல்கள்.

இடத் தெரியா இயலாமையில்
தங்களையே
அறுத்துக் கொள்கின்றன
அப்பாவிச் சேவல்கள்.

ஆடுகளம்
எங்களுடையது.
அடை காக்க
வராதீர்கள்
பெட்டைக் கோழிகளே.
                                             -சிவகுமாரன்.

6 கருத்துகள்:

  1. கருத்து எனக்கு உடன்பாடில்லை என்றபோதும் கவிதை அருமை.வாழ்த்துகளுடன்..

    பதிலளிநீக்கு
  2. CASINO GAMES at The Harrah's Cherokee Casino - JDHWeb
    CASINO 바카라 GAMES 여주 출장샵 at 충주 출장샵 The Harrah's Cherokee Casino Resort - See 원주 출장마사지 what's great, and learn 사천 출장안마 how to play.

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லாஜனவரி 16, 2023 10:19 PM

    நீங்கள் எந்த ரமேஷ்

    பதிலளிநீக்கு