திங்கள், ஆகஸ்ட் 15, 2011

தண்ணீர் விட்டோ வளர்த்தோம் ...?

வேரிலே
இரத்தம் ஊற்றினோம்
உடல்களை
உரமாய்ப் போட்டோம்
காய்க்கவே இல்லை
இன்னும்..
கொடிமரம்.


            -சிவகுமாரன்.



9 கருத்துகள்:

  1. சிவகுமரா ! இந்தக்கவிதையின் உள்ளடக்கத்தை என்னல் ஏற்கமுடியவில்லை. 19 வயதில் தூக்கில் ஏற்ற பட்ட குதிராம்போஸ் 14 வயதில்பொலீசின் துப்பாகிரவையைமீறிமூவர்ணக்கொடியை ஏற்றிய சுர்ஜித் ,ஒருகையால் தடியடியை தாங்கிகொண்டு மறுகையால் உப்பைகாய்ச்சி வந்தேமாதரம் என்று கூவி மயங்கி விழுந்த பாரதபுத்திரர்கள் ---அவற்றின் பலன் தான் உங்கள் எழுத்தின் அடி உரம். நன் பள்ளியில் படிக்கும் போது பொன்னார் மேனியனே என்று பாடமுடியாது.God save our king பாடிய பிறகுதான் மற்றவை . அப்பொது என் நாட்டின் தலை நகரம் லண்டன். இன்று டெல்லி.உங்கள் ஆதங்கம் புரிகிறது.ஆனால் சுதந்திரமான மண் என்பதை நிராகரிக்க வேண்டாமே! ---காஸ்யபன்

    பதிலளிநீக்கு
  2. நன்றி அய்யா.
    கண்டிப்பாய் தங்கள் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன். அப்படி பாடுபட்டு வாங்கிய சுதந்திரம் இன்று வீணாய்ப் போய்க்கொண்டிருக்கிறது என்பது தான் என் கவலை. வெள்ளையர்களை விரட்டி அடித்தோம் . கொள்ளையர் கையில் கொடுத்து சென்றோம் என்பது தான் நிதர்சனம்.
    மரம் பூக்கிறது ,காய்க்கிறது ஆனால் பலன் பாடுபட்டவனுக்கு இல்லை என்பது தான் என் ஆதங்கம். மறக்கவில்லை, மறுக்கவும் இல்லை . நமக்கு சுதந்திரம் இருக்கிறது.... நம்மை யார் சுரண்டுவது என்பதை தீர்மானிக்க.

    பதிலளிநீக்கு
  3. சாய்க நினைக்கும்
    சதிகாரர் உள்ளவரை
    காய்க இயலா
    கொடிமரம் குமரா!

    என் கவிதையைப் படித்துப்
    பாருங்கள்
    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  4. காஷ்யபன் சார், உங்கள் கருத்தை எவ்வளவு அழகாய் வெளிப்படுத்தி இருக்கின்றீர்கள். அருமை.

    பதிலளிநீக்கு
  5. காஷ்யபன் சார், சிவா உங்களுக்கு கொடுத்த விளக்க நிலைமையும் உண்மை தானே. இப்போதைய நம் தலைநகரம் இதாலியோ / ஸ்விஸ் வங்கியோ என்று தெரியவில்லையே

    நெஞ்சு பொறுக்குதில்லையே - உண்மை தான் இன்றைய நிலை கெட்ட மக்களை நினைத்தால்

    பதிலளிநீக்கு
  6. சாய் அவர்களே! இந்திய -சீன எல்லைத்தாவாவின் பொது இந்திய அரசு தேஜ்பூர் நகரை காலிபண்ண உத்திரவிட்டது. மவட்ட கலக்டர் முதல் விமானத்தில் முதல்மனிதராக தப்பி டெல்லி பறந்தார்.அங்குள்ள விவசாயி, பாடுபடும் உழைப்பாளி ரிக்ஷக்காரன் அன்றாடம் உழைத்து உண்பவன் பொக மறுத்து விட்டான். நமக்கு டெல்லிதான் தலைநகராமாக என்றுமிருக்க முடியும். ---காஸ்யபன்.

    பதிலளிநீக்கு
  7. காஷ்யபன் ஐயா

    அப்படியா நடந்தது. அசிங்கம். அந்த கலெக்டர் சம்பளத்துக்கு வேலைபார்ப்பவர். மற்றவர் வேலைபார்ப்பதில் சம்பளம் பெறுபவர்கள்.

    பதிலளிநீக்கு
  8. காய்க்காத கொடிமரமாக நம் நாடு...அருமையான கவிதை வாழ்த்துக்கள்....வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  9. "வெள்ளையர்களை விரட்டி அடித்தோம் .. கொள்ளையர் கையில் கொடுத்து சென்றோம்" இது தான் இங்கே கவிதை என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு