அந்தி மயங்கும் நேரம்.
அரிக்கேன் விளக்கு
அடியில் தொங்க
அசைந்தாடிச் செல்கிறது
மாட்டுவண்டி.
பின்பக்கக் கட்டையை
பிடித்துத் தொங்கியபடியே
நானும் தம்பியும்.
தெருமுனை தாண்டியதும்,
"டேய் தம்பிகளா
எவ்வளவு தூரம்
வரப்போறீக ...?"
வாஞ்சையுடன்
வண்டிக்காரன்.
இறங்கிவிட
மனசில்லை
இன்றுவரை.
-சிவகுமாரன்.
அரிக்கேன் விளக்கு
அடியில் தொங்க
அசைந்தாடிச் செல்கிறது
மாட்டுவண்டி.
பின்பக்கக் கட்டையை
பிடித்துத் தொங்கியபடியே
நானும் தம்பியும்.
தெருமுனை தாண்டியதும்,
"டேய் தம்பிகளா
எவ்வளவு தூரம்
வரப்போறீக ...?"
வாஞ்சையுடன்
வண்டிக்காரன்.
இறங்கிவிட
மனசில்லை
இன்றுவரை.
-சிவகுமாரன்.
நண்பரே! கவிதைகள் அற்புதமாக உள்ளன."பால்யம்" மிக நன்று.கடவுள் பற்றிய கவிதை அருமையாக உள்ளது."ஈழம்" கவிதையின் கருத்தை ஏற்கமுடியவில்லை.ஒரே மதம் என்றாலும் வங்கதேசம் ஏன் பிரிந்தது.?ஒரே மொழி பெசினாலும் ஆஸ்திரேலியா,அமே ரிகா,இங்கிலாந்து என்று இருப்பதுஏன்? ஆங்கிலமும்,பிரெஞ்சும் பெசும் மக்களைக் கொண்ட "கானடா" ஒரே நாடாக இருப்பது எப்படி?ஐரோப்பாவில் பால்கன் நாடுகளை ஒன்றாகியதுஏண்?"செக்" நாட்டை துண்டாக்கியது யார்?ஏன்?
பதிலளிநீக்குஇனம்,மொழி ஆகியவற்றிர்க்கு அப்பாற்பட்டு நிற்கமுடியாதா? மூலதனம் தன் தேவை களுக்கு ஏற்ப,இன மொழி மத பிரச்சினைகளை எழுப்பும்.இவை பற்றி நிறைய விவதிப்போம்.
நண்பா! உன் நெஞ்சில் கவித்வமிருக்கிறது.மடியில் தமிழ் இருக்கிறதுமனிதனைப்பாடு! மனிதத்தை தேடு.---
காஸ்யபன்..
தங்கள் கருத்துக்களுக்கு நன்றி அய்யா.
பதிலளிநீக்குஈழத்தில் மனித உரிமை மீறல் நடக்கவில்லையா ?
எல்லாவற்றிற்காகவும் போராடும் கம்யூனிஸ்ட் ஈழப் பிரச்சினையில் அமைதி காப்பது ஏன்?
இனம் மொழி மதம் சாராமல் பார்த்தாலே நெஞ்சம் பதறவில்லையா?
கம்யுனிஸ்ட்களை விடுங்கள். ஆரம்பித்திலிருந்தே ஒதுங்கியே இருக்கிறார்கள்.
தமிழர்களின் பாதுகாவலர்களாக பறைசாற்றிக் கொள்பவர்கள் செய்தது என்ன? செய்யக்கூடிய இடத்தில் இருந்துகொண்டும்?
அன்புடன்
சிவகுமாரன்
நண்பா! மூன்றாம் வகுப்பு படிக்கும்போது என்று நினைவு.கவிமணி அவர்களின் பாடல் பாடமாக இருந்தது."கை" என்பது தலைப்பு. "மழைவரினும் வேயில் வரினும் விரிகுடையாம் கையே; மலையாள மின்னல் ஈழமின்னல்------"என்று வரும்.மலையாளம் என்பது மெற்கையும்,ஈழம் என்பது கிழக்கையும் குறிப்பதாக ஆசிரியர் விளக்கினார்.ஈழம் என்ற வார்த்தையை முதன்முதலாக அப்போதுதான் தெரிந்து கொண்டேன்.கம்யூனிஸ்டுகள் ஒதுங்கியிருப்பதுபோல் தெரியவில்லை.ஈழப்பிரச்சினை தமிழர்களின் பிரச்சினையாக என் சுருக்குகிறீர்கள். அது மனிதர்களின் பிரச்சினை.
பதிலளிநீக்கு---காஸ்யபன்