புதன், செப்டம்பர் 29, 2010

ஹைகூ கவிதைகள் 20 (ஈழம்)

இந்தியாவின் கீழே
இரத்தத் துளி
இலங்கை.


நிலவை முத்தமிட 
நீளும் தென்னை.
ஈழக் கனவு.

அமைதிக்குழுவின்  ஆராய்ச்சிமுடிவு.
முத்திரைச் சான்றோடு
முள்வேலிகள்.

இனவாதம் தூண்டும்
இலங்கைத் துறவிகள்.
இரத்தம் மரணம் அச்சோ...மி .

ஆட்டுக்கிடைக்குள்ளும் 
அவதரிக்காதோ ஓர்நாள்
புலிக்குட்டி.

                      -சிவகுமாரன்

5 கருத்துகள்:

  1. கவிதைகள் அனைத்தும் மிக அருமையாக் இருக்கின்றன.
    ஈழக் கவிதைகளை படிக்கும்போது நம் இயலாமை உறுத்துகிறது.
    காதல் கவிதைகளில் வர்ணனை கொஞ்சம் அதிகம்,
    தமிழில் பட்டம் பெற்றிருக்கிறீர்களா?

    வாழ்த்துக்களுடன்
    பாலா.

    பதிலளிநீக்கு
  2. நன்றி இளமுருகா & பாலா.
    தமிழில் பட்டம் பெற்றிருக்கவில்லை பாலா.
    கவிதை எழுத உணர்ச்சிகளை அழகாய் வெளிப்படுத்த தெரிந்தால் போதும்.
    இது கடவுளின் பரிசு.

    பதிலளிநீக்கு
  3. எல்லாமே அருமை,ரெண்டாவது கவிதை ரொம்ப பிடிச்சிருக்கு.

    பதிலளிநீக்கு