எங்கள் பரந்த வயலை
பசுமையாக்க
எங்கிருந்தோ வந்தார்கள்
அவர்கள்.
கூலி வாங்கியவர்கள்
விதைகளை விழுங்கிவிட்டு
வெட்டரிவாளை மட்டும்
விதைத்துவிட்டு வந்தார்கள்.
சாணை பிடித்துத்
தருவதாய் சொன்னவர்கள்
கூர்மையை சோதிக்க
குத்திப் பார்த்தார்கள்
எங்கள் வயிற்றிலேயே.
அறுவடைக்காக
அழைத்து வந்தோம் அவர்களை.
எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு
வைக்கோலை மட்டுமே
வைத்துவிட்டுப் போனவர்கள்
கூலி குறைவென்றும்
குறைபட்டுக் கொண்டார்கள்.
அடுத்தவருடம்
சுதாரித்துக் கொண்டோம்
நாங்களே உழுது
நாங்களே விதைத்தோம்.
அறுவடைக்கு மட்டும்
அவர்களே வந்தார்கள்.
-சிவகுமாரன்.
Be happy....atleast they have not taken our land...still left with us ....!!!
பதிலளிநீக்குWow.These lines to be included as last stanza of poem.
பதிலளிநீக்குமிகவும் அருமை.
பதிலளிநீக்குபல்வேறு சிந்தனைகளை தூண்டுகிறது. கவிதை.
வெள்ளையர்களின் காலனி ஆதிக்கம்
பன்னாட்டுக் கம்பெனிகளின் வரவால் இந்திய பாரம்பரிய தொழில் மற்றும் விவசாயம் பாதிப்பு.
ஆங்கில மோகத்தால் அழிந்து கொண்டுவரும் தமிழ்
காண்வெண்டுகளில் காணாமல் போன தாய்மொழி
கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்றப் போர்வையில் நடக்கும் மதமாற்றம்
இப்படி பல்வேறு பிரச்சனைகளை சொல்வதாக அமைந்துள்ளது கவிதை.
இன்னும் எழுதுங்கள்.
....ராதேஷ்
இன்ட்லி முலம் தங்கள் கவிதைகளைப் பார்த்தேன்.
பதிலளிநீக்குஇது போன்று கவிதைகள் எழுதுபவர்கள் இன்று அருகி வருகிறார்கள்.
மிகவும் எளிய வார்த்தைகள் ஆனால் powerful வார்த்தைகள்.
நிறைய எழுதுங்கள்.
-வெங்கடேஷ்