கோடி கோடியாய்
கொட்டிக் கிடக்குது
சுவிஸ் வங்கிகளில்
தங்கமும் வைரமும்
தளும்பி வழியுது
திருப்பதி உண்டியலில்
வெளைஞ்சது எல்லாம்
வீணாய்ப் போகுது
தானியக் கிடங்குகளில்
கணக்கே இல்லாமல்
கடைத் தேங்காய்கள்.
வயிறு ஒட்டிய
வழிப் பிள்ளையார்கள்.
எடுத்து உடைக்குமா
இ.பி.கோ. கரங்கள் ?
-சிவகுமாரன்
வயிறு ஒட்டிய வழிப்பிள்ளையார்
பதிலளிநீக்குகணக்கேயில்லாமல் கடைதேங்காய்கள்
அதுவும்
கடைகாரர் யாரென்றும் தெரியாமல்.
உண்மைதான்.
எடுத்து உடைக்க இபிகோவால் மட்டுமே முடியும்.
எங்கோ போய்விடும் இந்தியா.
இதற்காக ஒரு இயக்கம் தொடங்கினால்
ஒட்டு போடுவதோடு நான் பிரச்சாரமும் செய்யத் தயார்