ஞாயிறு, பிப்ரவரி 06, 2011

காதல் வெண்பாக்கள் 16

                         முத்திரை

              அங்கிருந்து நீயனுப்பும்
                    அஞ்சலுறைக் குள்தேடி
              எங்கேயும் இல்லையடி
                    இன்பங்கள் - இங்கெனக்கு
              முத்தங்கள் சேர்ந்துபோய்
                    மூச்சிரைப்பு வாங்குதடி
              இத்தோ  டிணைத்துள்ளேன்
                                  இச்



                     கடித்தம் 


           கிடைத்தது உங்கள்
               கிறங்கிய முத்தம்
           அடைத்துத் திணித்திருந்த
                அஞ்சல் - எடைக்கு 
           எடைதருவேன் முத்தங்கள்
                இங்குவந்தால்- கொஞ்சம்
           அடக்கி இருந்திடுங்கள்
                             அங்கு.


      

50 கருத்துகள்:

  1. அயல்நாடுவாழ் என்போன்ற மனிதர்களைப்பற்றியா??

    பதிலளிநீக்கு
  2. தபாலில் நச் என்று ஒரு இச் புதுமையானதொரு முத்திரையே !

    கடித்தம் படித்தோம்
    எடைக்கு எடை முத்தங்கள்
    பேரீச்சம்பழம் போலவே !!

    பதிலளிநீக்கு
  3. நிச்சயமா இந்தக் கடித்துக்கு முத்திரைச் செலவு அதிகமாகத்தான் இருந்திருக்கும்.சொல்லுங்களேன் சிவகுமாரன் !

    பதிலளிநீக்கு
  4. பறக்கும் முத்தங்கள் என்பது இது தானோ.. சிவா...

    பதிலளிநீக்கு
  5. பறக்கும் முத்தங்களா...? நடக்கட்டும்... நடக்கட்டும்...

    பதிலளிநீக்கு
  6. அன்பையும் உரிமையையும்
    பக்குவமாய் இணைத்துச் செய்த கவிதை.
    அருமை.தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  7. முத்திரைக் கதைகள் போல இது ஆனந்தமான முத்த - முத்திரைக் கவிதைகள்...!

    பதிலளிநீக்கு
  8. the structure,imagery,poetic word "இங்கு" is highlly tempting this couple of 69-75 sivakumaran-fine---kashyapan

    பதிலளிநீக்கு
  9. சூப்பர்! :)

    பதிலளிநீக்கு
  10. அருமை பாஸ்! கலக்குங்க!

    பதிலளிநீக்கு
  11. எப்போதும்போல இப்போதும் அருமை, சிவகுமாரா.

    பதிலளிநீக்கு
  12. பறக்கும் முத்தங்கள் அருமை.

    நீங்க எங்கே ,உங்க அம்மணி எங்கே

    பதிலளிநீக்கு
  13. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  14. மதுரைக்கும் சிவகங்கைக்கும் நடுவில் எத்தனை கிலோமீட்டர்? மற்றும் எத்தனை நேரப் பிரிவு? என்கிற இரு உண்மைகள் இப்பவே தெரிஞ்சாகணும் ”இச்”சிவகுமாரன்.

    பதிலளிநீக்கு
  15. VAI. GOPALAKRISHNAN said...

    சிவகுமாரன் said..//நேற்றே படித்திருந்தால் இன்னும் நிறைய சிரித்திருக்கலாமே.பாதி படிக்கும் போதே சிரிக்கத் தொடங்கி விட்டேன்.இன்னும் நிறுத்தவில்லை//

    நல்ல சீரியஸ்ஸாக சிந்தனை செய்து, பிறரையும் சிந்திக்க வைக்கும் அருமையான கவிதைகளை அள்ளித் தருகிற தங்கள் பொன்னான நேரத்தைக் கொஞ்சம் என் வலைப்பக்கமும் திருப்பி, படித்து, படிக்கும் போதே சிரிக்கத் தொடங்கி, இன்னும் சிரிப்பை நிறுத்தவில்லை என்று சொல்லி எனக்கு உற்சாகம் கொடுத்ததற்கு, என் ’இச்’ ஸாரி எச்சலாகி விடும். வழக்கமான நன்றிகள் !

    பதிலளிநீக்கு
  16. கவிஞருக்கு இன்னும் போதை தெளியவில்லை போலும்.:-)

    போதைப்பொருட்கள் பட்டியலில் காதலி இச் ஏன் சேர்க்கப்படவில்லை? இது எந்த வகை போதை?

    பதிலளிநீக்கு
  17. சிவகுமாரனுக்கு லவ் மூடு ஸ்டார்ட் ஆகிடுச்சு போல ?!

    பதிலளிநீக்கு
  18. காதல் வெண்பாக்கள் களை கட்டுகிறது!

    பதிலளிநீக்கு
  19. சிவா!

    கடிதமுத்தம் மாயமாச்சு ஏதிங்கே நேரம்?
    நொடியுளே குறும்செய்தி பரிமாறும் காலம்.
    எலக்ட்ரானிக் எச்சிலுக்கு காதலொரு பாரம்.
    சிலமுத்த மிச்சமன்றோ நினைவுகளின்
    கோலம்.

    பதிலளிநீக்கு
  20. பழசாகிப் போனாலும் பாரமில்லா முத்தம் - இது
    கிழங்களாகிப் போன பின்னும் கிறங்க வைக்கும் நித்தம்.
    சேர்த்து வைத்துப் பாதுகாத்து சேமிக்கும் சித்தம்.- இதைப்
    பார்த்தெடுத்து பல நேரம் பறந்ததைய்யா யுத்தம்.

    பதிலளிநீக்கு
  21. காதல் வழியுது எழுதிய ஒவ்வொரு எழுத்திலும்..நடக்கட்டும் நடக்கட்டும்...:))

    பதிலளிநீக்கு
  22. தித்திக்கிறது கவிதை,காதலியின் முத்தம் போல்!

    பதிலளிநீக்கு
  23. சிவகுமாரன், உண்மையிலேயே வார்த்தைகளால் தவமியற்ற வருகிறது உங்களுக்கு. பின்னூட்டக் கவிதை இன்னும் மேல்!

    பதிலளிநீக்கு
  24. வணக்கம் நண்பரே, உங்கள் வலைப்பூவை வலைச்சரத்தில்அறிமுகபடுத்தியுள்ளேன் நேரம் கிடைக்கும்போது வருகை தாருங்கள்...நன்றி

    பதிலளிநீக்கு
  25. ///அங்கிருந்து நீயனுப்பும்
    அஞ்சலுறைக் குள்தேடி
    எங்கேயும் இல்லையடி
    இன்பங்கள் - இங்கெனக்கு
    முத்தங்கள் சேர்ந்துபோய்
    மூச்சிரைப்பு வாங்குதடி
    இத்தோ டிணைத்துள்ளேன்
    இச்

    ///

    அச்சோ..!அச்சச்சோ... என்னா இச்.. என்னா வரிகள்.. அட ஙொப்பூரானே.. சூப்பரப்பூ..!

    பதிலளிநீக்கு
  26. கண்ணுக்கு இச் தரும் கடித முத்தம்
    செவிக்கு இச் தரும் தொலைபேசி முத்தம்
    பாவி- நீ கட்டியணைத்து தரும் இச்சொன்று
    உள்ளத்தை நச் ஆக்காதோ!!

    சும்மா கமெண்ட்டு போடலாம்ன்னு வந்தேன்.. உங்க பக்கமா.. கவிதை மாதிரி மாத்திடுச்சு..
    அற்புதமான இச்சையை சொல்லும் இச்..இச்.. கவிதை... மனசுல பச்சுன்னு ஒட்டிக்கிது... நன்றி.

    பதிலளிநீக்கு
  27. // இச்...கடித்தம்...கிடைத்தது //

    அடடா சிவகுமரா,

    அருமையப்பா....அருமை.

    பதிலளிநீக்கு
  28. ஆமாம் RVS.. இந்த இச்சு நச்செல்லாம் எந்த வீட்டுக்காரிக்கு எழுதினது? சொந்த வீட்டுக்காரிக்குனு சொல்லிப் பிழைச்சுக்குங்க.

    பதிலளிநீக்கு
  29. ஒரு கிழவன் உங்கள் காவடிச் சிந்தை பாடுகிறானே !
    நீங்கள் கேட்கவேண்டாமா ?
    இங்கே வாருங்கள்.
    சுப்பு தாத்தா.
    http://www.youtube.com/watch?v=LmizPvN8cz4

    பதிலளிநீக்கு
  30. நேரிசை, நிரையிசை இரண்டிலும் நன்றாகத் தேர்ச்சி பெற்றவர் என்பதற்கு இந்த வெண்பாக்களே சான்று பகர்கிறது. வெண்பாவில் புகழேந்தி, இது இலக்கிய காலத்தில், ஆனால் வெண்பாவில் சிவகுமாரன் இதுவோ, இன்றைய வலைக் காலத்தில்.

    பதிலளிநீக்கு
  31. @அப்பாதுரை
    ஆமாம் சொந்தக்காரிக்கு எழுதியதுதான்.. (அதாவது என் உயிருக்கு சொந்தக்காரியான என் மனைவிக்கு எழுதியதுதான்!!)

    பதிலளிநீக்கு
  32. வசந்தா நடேசன் கூறியது.
    \\\அயல்நாடுவாழ் என்போன்ற மனிதர்களைப்பற்றியா??//

    மனைவியை பிரிந்து வாழும் எல்லோருக்கும் தான்

    பதிலளிநீக்கு
  33. நன்றி

    அப்பாத்துரை
    வைகோ.
    ஹேமா
    ரசிகமணி
    பிலாசபி.
    ரமணி
    சித்ரா
    ஸ்ரீராம்
    காஷ்யபன் அய்யா
    பாலாஜி
    திருநா.
    ஜீ
    GMB
    வெறும்பய
    சுந்தரா
    இளமுருகா
    நாகா
    தென்றல்
    வெங்கட் நாகராஜ்
    கனாக்காதலன்
    மோகன்ஜி
    ஆனந்தி
    சிவா
    சென்னைப் பித்தன்
    தங்க்லீஷ் பையன்
    மாணவன்
    தங்கம் பழனி
    சத்ரியன்
    நன்றி நன்றி நன்றி

    பதிலளிநீக்கு
  34. மீண்டும் மீண்டும் வந்து பின்னூட்டக் கவிதையையும் ரசித்த உங்களுக்கு
    மிக்க நன்றி அப்பாத்துரை

    பதிலளிநீக்கு
  35. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  36. சுந்தர் ஜீ சொன்னது.
    \\மதுரைக்கும் சிவகங்கைக்கும் நடுவில் எத்தனை கிலோமீட்டர்? மற்றும் எத்தனை நேரப் பிரிவு? என்கிற இரு உண்மைகள் இப்பவே தெரிஞ்சாகணும் ”இச்”சிவகுமாரன்.//

    உங்க பின்னூட்டத்தைப் படித்து விட்டு இன்னும் சிரித்துக் கொண்டிருக்கும் அம்மணி கிட்ட இருந்து
    இந்தக் கவிதையை இடுகையிட NOC வாங்குறதுக்குள்ள நான் பட்ட பாடு. ...
    மத்த உண்மை எல்லாம் சொல்ல பெர்மிசன் கிடையாது

    பதிலளிநீக்கு
  37. RVS
    உங்கள் பின்னூட்டக் கவிதையும் அதற்கு அப்பாஜியின் கமெண்டும் அதற்கு உங்கள் சமாளிப்பும் அருமை.

    பதிலளிநீக்கு
  38. நிரூபன் கூறியது
    \\வெண்பாவில் புகழேந்தி, இது இலக்கிய காலத்தில், ஆனால் வெண்பாவில் சிவகுமாரன் இதுவோ, இன்றைய வலைக் காலத்தில்.//

    மிக்க நன்றி நிரூபன்.
    தங்களைப் போன்றோரின் மரபுக் கவிதைகளின் ரசனை எனக்கு புது உற்சாகத்தைத் தருகிறது.

    பதிலளிநீக்கு
  39. நன்றி சூரி. அய்யா.
    என் கவிதையை நீங்கள் பாடக் கேட்பது எனக்கு மிகுந்த ஆனந்தத்தை தருகிறது.

    பதிலளிநீக்கு
  40. சமீபத்தில் படித்து ரசித்தது:(கவி அழகன்

    உலகிலேயே மிகச்சிறிய காதல்கதை நான் அவளை காதலிப்பது
    உலகிலேயே மிகப்பெரிய சோகக்கதை அவள் இன்னொருவனை காதலிப்பது.

    பதிலளிநீக்கு
  41. அற்புதம் நண்பரே

    காதல் முத்திரை

    பதிலளிநீக்கு