புதன், மார்ச் 07, 2012

காதல் வெண்பாக்கள் 28




உன்னுள் மறைவாய்
   ஒளிந்திருப்ப தென்னடி?
என்னுள் இருப்பதும்
   என்னவோ ?- இன்னும்
ரகசியங்கள் தேடவைத்து
   லட்சியங்கள் எல்லாம்
தகர்த்தாய் .நியாயமா
     சொல்








சொல்லாமல் கொள்ளாமல்
   சொந்தமாக்கிக் கொண்டாயே
எல்லாம் தனதென்று
   என்னைநீ !- வில்லாய்
வளைக்க நினைக்கின்றாய் .
   வாழ்க்கை உனக்கு
விளையாட்டுப் பொம்மையா
   சொல். 











9 கருத்துகள்:

  1. anbu sivakumaran

    Niinda naal idaiveli. mannikkavum. manathu niravai aaka ullathu. venba ezthuvoorai kandaal vananka thondrukirathu. manam nirai vaazhthukkal.

    பதிலளிநீக்கு
  2. anbu sivakumaran

    Niinda naal idaiveli. mannikkavum. manathu niravai aaka ullathu. venba ezthuvoorai kandaal vananka thondrukirathu. manam nirai vaazhthukkal.

    March

    பதிலளிநீக்கு
  3. வருக வருக.
    ரகசியமாய் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  4. விளையாட்டுப் போல் வாழ்க்கை இருந்தால் வீண்பிரச்சனைகள் இல்லையென்று நினைத்திருக்கலாம்.

    அழகான கவிதை. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  5. தங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன் நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள். நன்றி.
    http://blogintamil.blogspot.com.au/2012/03/blog-post_13.html

    பதிலளிநீக்கு
  6. கவிதை அருமை, எப்படிலாம் யோசிக்குறாங்கப்பா. நாமளும் ஒரு கவிதை எழுதிடனும்

    பதிலளிநீக்கு
  7. சொல்லாமல் கொள்ளாமல்
    சொந்தமாக்கிக் கொண்டாயே
    எல்லாம் தனதென்று
    என்னைநீ !- வில்லாய்
    வளைக்க நினைக்கின்றாய் .
    வாழ்க்கை உனக்கு
    விளையாட்டுப் பொம்மையா//அழகான கவிதை. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  8. சொல் சொல் என்றாலும் காதல் வந்தால் எதுக்கும் பதில் இல்லை !

    பதிலளிநீக்கு
  9. தங்களது மேலும் ஒரு பதிவை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன். நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள். நன்றி.
    http://blogintamil.blogspot.com.au/2012/03/blog-post_17.html

    பதிலளிநீக்கு