முல்லைப் பெரியாற்றில்
மூழ்கிப் போயின
பாவப்பட்ட பயணிகளை
பாதி வழியில் இறக்கிய
கட்டணம் உயர்ந்த
பேருந்துகள்
கூடங்குளத்தில்
வெடித்துச் சிதறின
இரு வேளை தேநீரை
ஒருவேளை ஆக்கிய
பால் பாக்கெட்டுகள்.
தானே புயலில் தரை மட்டமாகின
கோடிகளை விழுங்கிய
தலைமைச் செயலகமும்.
கோர்ட்டுக்குப் போன
நூலகமும்.
முப்பதாண்டு கால
தோழியின் பிரிவில்
மறந்தே போயின
அடித்த கொள்ளையும்
அனுபவித்த சிறையும்.
ஏற்றிய விலையையும்
இம்சை அரசையும்
இடைத் தேர்தல் தீர்ப்பளித்து
ஏற்றுக் கொண்டார்கள்
இனிய தமிழ் மக்கள்.
அசைக்க முடியாதினி
அம்மாவை யாரும்.
இன்னும் கூட
ஏற்றலாம் விலையை
கல்லா கட்டலாம்
கஜானா(!?) நிரப்பலாம்
மக்கள் கிளர்ந்தால்
மறக்கடிக்க
மவிவாய் கிடைக்குது
மருந்துகள் ஆயிரம்.
மாதமிருமுறை
மந்திரிசபை மாற்றலாம்.
தீய சக்தியைத்
திட்டித் தீர்க்கலாம்.
துரத்தியடித்த
தோழியோடு கூடலாம்.
இலங்கை நெருப்பில்
எண்ணெய் ஊற்றலாம்
இன்னும் கொஞ்சம்
இலவசம் தரலாம்.
குடிசையில் கொடுத்து
குடிக்கவைத்து பிடுங்கலாம்.
கொள்கைகள், கூட்டணிகள்
அமைச்சர்கள், அடிமைகள்
தொண்டர்கள் , தோழர்கள்,
அறிக்கைகள், பேச்சுகள்,
பூஜைகள், பரிகாரங்கள்,
கோடிகள் மோடிகள்,
கணிப்புகள் ,பணிக்கர்கள்,
"சோ"க்கள் , ஜோக்கர்கள்
ஆயிரம் இருந்தாலும்
அடுத்த தேர்தலுக்கு
அம்மா நம்புவது
"அம்னீசியா"வைத் தான்.
-சிவகுமாரன்
April fool special கவிதை?
பதிலளிநீக்குஇந்த கவிதையை படித்துவிட்டு பாராட்டுவதா அல்லது வருத்தப்படுவதா?
ஆயிரம் இருந்தாலும்
பதிலளிநீக்குஅடுத்த தேர்தலுக்கு
அம்மா நம்புவது
"அம்னீசியா"வைத் தான்.
மறதி நல்லது !
இலங்கை நெருப்பில்
பதிலளிநீக்குஎண்ணெய் ஊற்றலாம்
இன்னும் கொஞ்சம்
இலவசம் தரலாம்.
குடிசையில் கொடுத்து
குடிக்கவைத்து பிடுங்கலாம்.
கொள்கைகள், கூட்டணிகள்
அமைச்சர்கள், அடிமைகள்
தொண்டர்கள் , தோழர்கள்,
அறிக்கைகள், பேச்சுகள்,
பூஜைகள், பரிகாரங்கள்,
கோடிகள் மோடிகள்,
கணிப்புகள் ,பணிக்கர்கள்,
"சோ"க்கள் , ஜோக்கர்கள்//மிகவும் சிறந்த ஆக்கம் இப்படி உண்மையை ஆணித்த்தரமாக எடுத்து வைக்கும்போதுதான் மக்கள் விழிப்பார்கள் உங்களின் சினம் உண்மையான சினம் பாராட்டுகள் தொடர்க....
சிவகுமாரன் உங்கள் கவிதையும் மாலதியின் பின்னூட்டமும் இன்றைய இந்திய நாட்டின் நடப்பையும் மக்களின் மனநிலையையும் காட்டுகிறது !
பதிலளிநீக்குஅருமை அருமை
பதிலளிநீக்குஅந்த நேரத்தில் ஏதாவது
ஜிஞ்சாலக்கடி வேலை செய்து ஜெயித்து விடுகிறார்கள்
அல்லது அவர்களைவிட மோசமாக எதிப்பாளர்கள் நடந்து
இவர்களை வெல்ல வைத்துவிடுகிறார்கள்
ஐந்தாண்டு நாம்தான் லொள்ளுபடுகிறோம்
அனைவரின் மனக்குறையை மிக அழகாகப்
பதிவு செய்தமைக்கு மனமார்ந்த நன்றி
நம் நாட்டில்
பதிலளிநீக்குஎந்த ஆட்சி நிகழ்ந்தாலும்
அதில் எண்ண எண்ண குழப்பங்கள் நிகழ்தாலும்
சமூகத்தில் கொடூரமும் கோரங்களும் நிகழ்ந்தாலும்
ஒரு நிகழ்வின் பிறப்பில் மற்றதை மறந்ந்து விடுகிறோம்
இந்த கேடுகட்ட மனிதர்களின் மறவி பலகீனத்தால்
நம்மை இலகுவாக ஆட்டிப்படைகிரார்கள்
எல்லா கயவர்களும்
எண்ண செய்ய மறவி
நம் ரத்தத்தில் ஊறிய உயிர்கொல்லி
ஆள்பவர்களின் நம்பிக்கை, மக்களை ஏமாற்றலாம் என்பதே!ஏமாறுவதில் சுகம் கொண்ட ஜனங்க எப்ப முழிச்சுப்பாங்களோ தெரியல!!!!
பதிலளிநீக்குவிலையை ஏற்றுவதால் நிரம்புவது அரசாங்க கஜானாவா?
பதிலளிநீக்குஆகா.. அடி சறுக்கியதே அப்பாஜி.
பதிலளிநீக்குகஜானா தான் -- ஆனால் அரசுடையதல்ல.
நன்றி இளமுருகன், இராஜராஜேஸ்வரி , மாலதி, ஹேமா, ரமணி, செய்தாலி &தென்றல்,
பதிலளிநீக்குஅம்னீசியாவை மக்களுக்கு காலகாலமாக ஏற்படுத்தித்தான் வென்று வருகிறார்கள். விழித்தெழ மக்களுக்குத் தேவை சாட்டைச் சொடுக்கல்கள். இதுபோல பல சாட்டைச் சொடுக்கல்களை வீசுவதற்கு சினங் கொள்க சிவகுமரன்! மீசைக்காரன் சொன்னதும் ரெளத்திரம் பழகத்தானே!
பதிலளிநீக்குநன்றி கணேஷ்
பதிலளிநீக்குஎங்கள் ஓட்டு
பதிலளிநீக்குஎல்லோரும் சொல்லும்
அம்மாவிற்கே..
அதுக்கு தானே காத்திருக்கின்றோம்