திங்கள், ஏப்ரல் 09, 2012

காதல் வெண்பாக்கள் 30

    இரண்டிலொன்று


மொட்டமாடி மீது
முழித்துக் கிடக்கின்றேன்.
விட்டத்தை நோக்கி
வெறிக்கின்றேன் -கட்டழகில்
கட்டுண்டு நான்கிடந்து
காலம் கழிக்கின்றேன்
வெட்டொன்று துண்டிரண்டு
சொல்.


    இரண்டுமொன்று


ஏதேனும் ஒன்றெனக்கு
இப்போதே சொல்லிவிட்டால்
பாதையினை மாற்றி
பயணிப்பேன் - வேதனையில்
எத்தனைநாள் நானிருப்பேன்
இப்படியே ? பேசாமல்
செத்துத் தொலைக்கலாம்
சே.




( மற்ற காதல் வெண்பாக்களையும் காணஇங்கே சொடுக்கவும் )

19 கருத்துகள்:

  1. பார்த்தவற்றை கவிதைக்குள் பதுக்கி வைக்கும் பகல் திருடன் மட்டுமல்ல நீர். அழகிய தமிழ் வரிகளால் மனங்களைத் திருடும் மனத் திருடனும் கூட! காதலின் தவிப்பைச் சொல்லிய இரு கவிதைகளையும் மிகமிக ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  2. காதல் வெண்பாக்கள் வேதனை பிரதிபலிக்க, தலைப்புகள் வியப்பை அளிக்கின்றன. காதல் கூடத்தில் சோதனை எலிகளாய் இந்தப் பாழும் மனம் படும் பாட்டைப் பாடும் வெண்பாக்கள் அற்புதம். பாராட்டுகள் சிவகுமாரன்.

    பதிலளிநீக்கு
  3. காதலின் அவஸ்தை.அதிர்ந்து சொல்லுமே தவிர காதல் அந்த இடத்தைவிட்டு நகராது.காத்திருக்கும்.காதல் வெண்பாவா இல்லை தூதுப்பாவா !

    பதிலளிநீக்கு
  4. படம் கண்டதால் பாடல் வந்ததா பாடல் வந்ததும் படம் கிடைத்ததா?
    இரண்டு பாக்களிலும் ஆணின் காதல் தெளிவாகத் தெரிகிறது. குறிப்பாக, தலைப்புகள்!

    பதிலளிநீக்கு
  5. அருமையான காதல் பாக்கள்
    பதிவாக்கித் தந்தமைக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. sivakumaran

    idaividaatha panikal. varamudiyavillai. kanipporiyil sikkal. iruppinum evvalau naatkal kazithu vanthaalum ungkal pakkam uvappaka irukkinrana. manathukku itham koottubavai. 2vathu venpa mika arumai. suvai. sugam. enakku ungkal pakkam eppothum niraivu tharubavai. ariviyal padithaa niihgkal tamizhili perrirukkum arivin visaalam. thodarnthu marabu charnthu ezuthuvathu. tamiz ulagam ungkalukku kadamaipattirukirathu. tamil puthaandu vaazhthukkal.

    பதிலளிநீக்கு
  7. அதானே!

    எத்தனைக்காலம் காத்திருப்பது?

    காதலில் செத்துப்பிழைத்தல் தான் சுகம் கவிஞரே!

    பதிலளிநீக்கு
  8. உங்கள் வேதனை...எங்களுக்கு அழகிய பாக்கள்!!!! காதல் இது தானோ!!!

    பதிலளிநீக்கு
  9. ஏன் செத்துதொலைக்க வேண்டும்?எல்லாம் வாழவே ஆக்கப்பட்டதுதானே சார்.காதலும் அப்படித்தானே இருக்க முடியும்?

    பதிலளிநீக்கு
  10. சிவகுமரன் அவர்களே! மடிகணினியில் சிக்கல்.புதிதாக எதையோ மாத்தித் தொலைச்சதில் ஒரு மண்ணும் புரியவில்லை. இப்பொழுது தான் ஒரு நிதானம் வந்துள்ளது.மறதி கவிதை அருமை.வழக்கமான உங்கள் punch ஓடு.---காஸ்யபன்.

    பதிலளிநீக்கு
  11. வெட்டொன்று துண்டிரண்டாய்ச் சொல்கின்றேன்! வெண்பாக்கள்
    பட்டென்று தொட்டது பாய்ந்து!

    பதிலளிநீக்கு
  12. நல்ல வெண்பாக்கள். கனிச்சீர் ஒன்றைத் தவிர்த்திருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  13. நல்ல வெண்பாக்கள். கனிச்சீர் ஒன்றைத் தவிர்த்திருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  14. நன்றி பாலன்.
    மொட்டைமாடியை மாற்றியிருக்கிறேன். இப்போது காய்ச்சீர் ஆகிவிட்டது. டை என்பது குறிலாக மாத்திரை குறைந்து ஒலிக்கும் என்ற அர்த்தத்தில் எழுதிவிட்டேன்., பாதையினை என்ற சொல் கனிச்சீராகாது .
    பா/தையி/னை என்று பிரிக்கவேண்டும் ,தை ஒரு மாத்திரை அளவு குறைந்து குறிலாக ஒலிக்கும். ஐகாரக்குறுக்கம் என்று சொல்வார்கள் என்று நினைக்கிறேன்.
    பாரதியார் ஒரு வெண்பாவில்
    " வீணையொலி என்நாவில் விண்டு" என்கிறார். வீ/ணையொ/லி என்று பிரித்து அலகிடவேண்டும் .
    சுட்டியதற்கு நன்றி

    பதிலளிநீக்கு
  15. காதலின் அழகே காத்திருப்பதும் காத்திருக்க வைக்கப்படுவதுதான்.

    பதிலளிநீக்கு
  16. 2nd Oct 2013

    காதலா .. சாதலா ..

    காதலர் சேராது காதல்பின் வாழினும்
    காதலர் சாதலே மேல் !

    பதிலளிநீக்கு