ஞாயிறு, ஆகஸ்ட் 26, 2012

மனக் குரல்


ஊக்கம் இல்லா உழைப்பு -  மனதில்
தூக்கிச் சுமக்கும் துயர்..

கரும்பாய் இருந்தால் கசக்குவார் - கடிக்கும்
எறும்பாய் இருப்பாய் இனி.

பணிந்ததும் பயந்து தணிந்ததும் போதும்
துணிந்தால் வாராது  துயர்.

தகுதி மறந்து தன்மானம் இழந்து
சொகுசாய் வாழ்வதா சுகம்?

திரும்பத் தருமோ தீர்ந்த இளமையை
விரும்பிச் செய்யா வேலை?

கொஞ்சமே கிடைத்தாலும் கூனிக் குறுகாமல்
நெஞ்சம் நிமிர்த்தி நில்.

வாடிக் கிடந்தால் வாய்ப்புகள் வாரா.
தேடி அலைந்து திரி

பெற்ற அவமானம், பேச்சுக்கள் எல்லாம்
வெற்றியால் அடித்து விலக்கு .

விதிப்பயன் என்று வீணாய் உழைக்காதே 
மதிப்பில்லா இடத்தில் மாடாய் .

கலகம் செய்யாமல் கழன்றுகொள் எளிதாய்.
உலகம் பெரிதென்று உணர்.


10 கருத்துகள்:

  1. அருமையான கவிதை.அருமையாக கூறியுள்ளீர்கள்.
    //பணிந்ததும் பயந்து தணிந்ததும் போதும்
    துணிந்தால் வாராது துயர்.

    தகுதி மறந்து தன்மானம் இழந்து
    சொகுசாய் வாழ்வதா சுகம்? //
    துணிந்து நில்! வெற்றி உமக்கே.
    கடுமையாக உழை.ஒருநாள் அல்லது ஒருநாள் வெற்றி நமக்கே தோழா.

    என்னுடைய தளத்தில்

    ஏணிப்படி

    தன்னம்பிக்கை

    நம்பிக்கை

    தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  2. //திரும்பத் தருமோ தீர்ந்த இளமையை
    விரும்பிச் செய்யா வேலை?

    மனதைப் பிசைகிறது.

    பதிலளிநீக்கு
  3. அருமையான வரிகள்...

    முடிவில் இரு வரிகளும் சிறப்பு...

    தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி...

    பதிலளிநீக்கு
  4. அற்புதம் சிவா! பல நாட்கள் கழித்து நான் மேயும் முதல் பதிவு இது. எல்லாமும் முத்துக்கள் தம்பி.

    பதிலளிநீக்கு
  5. நறுக் வரிகள் .. நலமா

    www.bhageerathi.in

    பதிலளிநீக்கு
  6. கலியுகத்தில் வெற்றிபெற கண்ணபிரான் சொன்னது

    பாலிடிக்ஸ் கொஞ்சம் பழகு !

    பதிலளிநீக்கு
  7. கவிஞரே என்ன ஆயிற்று உங்களுக்கு...?

    பத்து வெண்பாக்களில் முதல் குறள் வெண்பா ஒன்றைத் தவி மீதி ஒன்பதும் தலைதட்டுகிறதே....

    ஆனால் கருத்துக்கள் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  8. அருணா செல்வம்.
    இது குறள் வெண்பா இல்லை. கவனியுங்கள் " குரல்" என்று தான் குறிப்பிட்டு இருக்கிறேன்.
    இது slogan மாதிரி . அதுவும் எனக்கு நானே சொல்லிக் கொண்டது.
    இலக்கணம் பார்க்க வேண்டாம். Please

    பதிலளிநீக்கு
  9. இளமுருகா,

    "காலி"யுகத்தில் பிழைக்க கண்ணன் சொன்னது
    பாட்டில்ட்ரிக்ஸ் கொஞ்சம் பழகு

    எனக்கு அது வராது.

    பதிலளிநீக்கு