ஞாயிறு, மார்ச் 31, 2013

காதல் வெண்பாக்கள் 36



எப்போது இளகும் இரும்பு இதயமடி?
அப்போது இருப்பேனோ ஆரறிவார் ? - இப்போதே 
வந்தென்னைப் பார்த்தால் வரலாறு மன்னிக்கும்.
முந்திக்கொள் காலனுக்கு முன்.

உனக்காக ஏங்கி உயிர்துடிக்கக் காத்து
கணக்கின்றி போனதடி காலம் - பிணக்காட்டில்
நொந்து விழுந்து நெருப்புக் கிரையாகி
வெந்து மடியும்முன் வா!

சிவகுமாரன் 


13 கருத்துகள்:

  1. "எப்போ திளகும் இரும்பு இதயமடி?
    அப்போ திருப்பேனோ ஆரறிவார் ? - "

    - வெண்பா இலக்கணப்படி இப்படித்தான் இருக்க வேண்டும். ஏற்கனவே , வெறுப்பில் இருக்கும் பெண்பாவை , வெண்பாவைப் படித்து மேலும் வெறுப்பாகாமல் இருக்க , சந்தி பிரித்து எழுதப்பட்டது.

    பதிலளிநீக்கு
  2. அந்திம உணர்வை மிக ஆழமாக
    உணரச் செய்த அருமையான பதிவு
    படத் தேர்வு கூடுதல் சிறப்பு
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. பெண் பாவைக்கான வெண்பா மனதில் பதிந்தது. ரசிக்க வைத்தது. உணர்வுகளைக் கடத்தியது! அருமை!

    பதிலளிநீக்கு
  4. முந்திக்கொள் காலனுக்கு முன்.

    முந்த்க்கொள்வாளா பாவை ??

    பதிலளிநீக்கு
  5. ம‌றுப‌டியும் அருமையான‌ க‌விதை! பாராட்ட‌ வார்த்தைக‌ள் இல்லை!

    பதிலளிநீக்கு
  6. அருமை. 'காதல் வந்தால் சொல்லியனுப்பு, உயிரோடிருந்தால் வருகிறேன்' நினைவுக்கு வருகிறது!

    வெண்பா காதலினால் 'தண்'பா ஆனது!

    பதிலளிநீக்கு
  7. வரவேண்டும் வெந்து மடியும் முன்பாக.நல்ல சிந்தனை.

    பதிலளிநீக்கு
  8. இளமுருகன்ஏப்ரல் 01, 2013 10:11 AM

    வெண்பா அருமை. பின்னோட்டம் அதைவிட அருமை :-)

    பதிலளிநீக்கு
  9. வெண்பா நன்று.
    சிவாஜி கணேசன்?

    பதிலளிநீக்கு
  10. நன்றி ரமணி
    நன்றி பால கணேஷ்
    நன்றி ராஜேஸ்வரி மேடம்
    நன்றி தனபாலன்
    நன்றி மனோ மேடம்
    நன்றி ஸ்ரீராம்
    நன்றி விமலன்
    நன்றி இளமுருகன்
    நன்றி அப்பாத்துரை .

    அப்பாஜி நீங்கள் முதல் மரியாதை பார்க்கவில்லையோ ? சிவாஜி மிகையில்லாமல் நடித்த படம்.
    மரணப்படுக்கையில் காதலிக்காக(??!!) ஏங்கும் still அது. இந்தக் கவிதைக்கு கொஞ்சம் பொருந்தி வந்ததால் இணைத்தேன்.

    பதிலளிநீக்கு
  11. மரபுக்கவிதைக்குப் புத்துயிர் அளிக்கும் ஒரு சிலரில் நீங்களும் ஒருவர், ‘அருட்கவி’ சிவகுமரன் அவர்களே! உங்கள் கவித்திறம் வாழ்க, வளர்க. –கவிஞர் இராய.செல்லப்பா.

    பதிலளிநீக்கு
  12. நன்றி சிவகுமாரன். படத்தைப் பார்க்கிறேன் (பயமாக இருந்தாலும்:-)

    பதிலளிநீக்கு