வெள்ளி, மார்ச் 22, 2013

தேறாத் தேடல்


தூக்கத்தில் மட்டும் சுகங்கண்டு, நாட்களைப்
போக்கிக் கழித்து பொழுதெல்லாம் - ஏக்கத்தில்
வாடுதல் மட்டுமா வாழ்க்கை ? இனிவேண்டும்
தேடுதல் இல்லாத் தினம்.

தினமொரு போராட்டம், தேயும் இளமை
கனவினில் மட்டும் களிப்பு - மனதினில்
மாறா வடுக்கள் , மகேசா இனிநானும்
தேறாமல் போவேனோ தீர்ந்து?



-சிவகுமாரன் 
22.03.2013

12 கருத்துகள்:

  1. வேறு வழியில்லை... அனுபவிக்க வேண்டியது தான்-மனஅமைதியோடு...

    பதிலளிநீக்கு
  2. வருக சிவா! நாளும் வெண்பாக்களைத் தருக சிவா!

    பதிலளிநீக்கு
  3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  4. ஏறாதோ மேடை மகேசா கவிச்சித்தன்
    தேறாத் தேடற் துயர்மொழி? காறாக்
    கவியின் தமிழ்மட்டும் துய்க்குமுன் காது
    தவிடாய்ப் பொடியட்டும் இற்று.

    பதிலளிநீக்கு
  5. நன்றி தனபாலன்
    நன்றி ரமணி சார்
    நன்றி இராமாநுசம் ஐயா.
    நன்றி ஜெயக்குமார் சார்

    அபாரம் அப்பாஜி.
    "செவிடாய் போகட்டும் சற்று "
    மாறி " தவிடாய் பொடிந்தது " அருமை.
    கொஞ்சம் இடறிய சீரையும் மாற்றி விட்டீர்கள். தங்களின் versatility வியக்க வைக்கிறது

    பதிலளிநீக்கு
  6. அன்பு சிவகுமரன்...

    என்னாச்சு? ஏன் இத்தனை ஏக்கம்?
    அருமையான வெண்பாக்களில் வாழ்வியலின் அற்புதங்கள். இவைதானே வாழ்க்கை? இவற்றை அனுபவிக்காவிட்டால் வாழ்க்கையேது?

    பதிலளிநீக்கு
  7. அது படித்த உடன் தோன்றிய அவசரம், இது படித்ததை மறக்க முடியாத ஆசுவாசம் :)

    பதிலளிநீக்கு
  8. கவிதை மிக‌ அருமை!

    தேடுதல் இல்லாவிடில் வாழ்க்கையில் ருசி ஏது? ஆயிலும் கவிதையினுள் பொதிந்திருக்கும் சோகம் மனதை க‌னக்க வைக்கிறது!

    பதிலளிநீக்கு
  9. நன்றி அப்பாஜி
    ஹரணி சார் மனோ மேடம்,
    கவிதை என் அவ்வப்போதைய மனோ நிலையை பிரதிபலிக்கும் அகம் பார்க்கும் கண்ணாடி போன்றது. .ஒரு விசித்திரம்
    கவிதையாக்கும் போது சுகங்கள் பன்மடங்காகிறது. சோகங்கள் குறைந்து போகிறது.

    பதிலளிநீக்கு
  10. தேடுதல் அற்றுப் போவதும் ஒரு சுகம் தான். எல்லாவற்றையும் கடந்த நிலை.
    வேண்டுதல் வேண்டா நிலை .

    பதிலளிநீக்கு