புதன், மே 01, 2013

வரட்டுமே வறட்டு"மே"



வியர்வைத் துளிகளால்
நிரம்பி வழிகிறது
கோப்பை.

தொழிற் சங்கங்களில்
தோண்டத்  தோண்ட
தங்கச் சுரங்கங்கள்.

சிவகாசி முழுக்க
சிவப்புப் புரட்சி தான்.
பட்டாசும்  இரத்தமுமாய்  .

அழகருக்குத் திறந்த
வைகைத் தண்ணீர்
வயிறு கழுவுமோ ?

விடுமுறை, ஒய்வு
பென்சன், பி.எஃப்
அம்மாவுக்குண்டா ?

மே  ஒண்ணு
ஏப்ரல் ஒண்ணு
எல்லாம் ஒண்ணு.

சிவகுமாரன் 


12 கருத்துகள்:

  1. ப்ரிய சிவா! சுகம் தானே தம்பி? வலை மீண்ட பின் முகன்ன்த முதல் முத்து இந்தக் கவிதை..

    விடுமுறை, ஒய்வு
    பென்சன், பி.எஃப்
    அம்மாவுக்குண்டா ?

    மே ஒண்ணு
    ஏப்ரல் ஒண்ணு
    எல்லாம் ஒண்ணு.

    வலிதரும் உண்மைகள் சிவா! சந்திப்போம்!

    பதிலளிநீக்கு
  2. சிவகாசி முழுக்க
    சிவப்புப் புரட்சி தான்.
    பட்டாசும் இரத்தமுமாய் .

    பொங்கல் பிறந்தாலும் ,
    தீபம் எரிந்தாலும்
    ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே ..!

    பதிலளிநீக்கு
  3. அன்புள்ள சிவகுமரன்..

    வலி. வலி. வலி.

    பதிலளிநீக்கு
  4. பிரமாதம். தொழிற்சங்கம் தங்கச்சுரங்கம் நிறைய யோசிக்க வைக்கிறது.

    அந்தச் சிறுமியின் படம்! வலிக்கிறது.

    (அம்மாவுக்கு லீவு பிஎப் எல்லாம் தந்தா அம்மாவா மதிப்போமா? இப்பவே வேலைக்காரியாத் தான் நினைக்கிறோம்)

    பதிலளிநீக்கு
  5. சிலேடையை இப்போது தான் கவனித்தேன். சிறப்பு.

    பதிலளிநீக்கு
  6. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  7. நன்றி மோகன் அண்ணா .தங்கள் மீண்ட வருகைக்கு

    நன்றி தனபாலன் சார் தங்களின் தொடர் வருகைக்கு

    நன்றி இராஜேஸ்வரி மேடம். துலாபாரம் படத்தில் வரும் அந்த பாடல் என் மிகச் சிறு வயதில் பார்த்து மனதில் ஆழமாய் பதிந்த ஒன்று.
    நன்றி ஜெயகுமார் சார்

    நன்றி ஹரணி சார் இது போன்ற நாட்கள் மகிழ்ச்சியைக் காட்டிலும் வலியைத் தான் கொண்டு வருகின்றன.
    நன்றி அப்பாஜி.
    \\\இப்பவே வேலைக்காரியாத் தான் நினைக்கிறோம்////
    உறுத்துகிறது.

    பதிலளிநீக்கு
  8. உழைப்பாளர் தினம் கொண்டாடவும் உழைக்கும் வர்க்கமாய் அங்கீகரிக்கப்பட்டிருக்கவேண்டுமோ... உழைப்பே வாழ்க்கையானவர்களுக்கு உழைப்பாளர் தினமாவது.. மண்ணாங்கட்டியாவது...

    கவிதை சொல்லாமல் சொன்னாலும் வலியைத் தவறாமல் வரவழைக்கிறது.

    பதிலளிநீக்கு
  9. நன்றி மஞ்சரி மேடம்.
    சரியாய் சொன்னீர்கள்.

    எல்லாவற்றிக்கும் அங்கீகாரம் தேவைப்படுகிறது. நாளெல்லாம் உழைப்போருக்கு ஏது கொண்ட்டாட்டம்?

    பதிலளிநீக்கு
  10. கவிதை சுமாரா இல்லை எனக்குப் புரியவில்லையா தெரியவில்லை.

    பதிலளிநீக்கு