கரடுமுரடான
கொடுஞ்சிறையில்
கட்டுண்டு கிடக்கிறது
கவனிப்பாரன்றி
கவிதை.
எப்போதாவது
தட்டுத் தடுமாறி
தலைகாட்ட நினைக்கையில்
இழுத்து நிறுத்தி விடுகிறது
இரும்புக்கரம் கொண்ட
இடைஞ்சல்கள்..
மீறிஎழும் போதெல்லாம்
சீறி விழுகிறது
பொங்கிய பாலில்
தெளித்த நீராய்
வாழ்க்கை.
ஆரவாரம் இல்லாமல்
அடங்கிப் போனாலும்
காலம் கனியுமெனக்
காத்திருக்கிறது
சுண்டக் காய்ச்சியக்
கவிதையொன்று.
சிவகுமாரன்
"சுண்டக் காய்ச்சிய கவிதை"..... :))))))
பதிலளிநீக்குஅது இது இல்லையா?
சுண்டக் காய்ச்சிய கவிதை . அருமை
பதிலளிநீக்குவரிகள் அருமை... வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குகாலம் கனியுமெனக்
பதிலளிநீக்குகாத்திருக்கிறது
சுண்டக் காய்ச்சியக்
கவிதையொன்று.
எங்கே ..!!???
சக்கை ஏதுமற்ற்ற சாற்றையே
பதிலளிநீக்குசுண்டக் காய்ச்சிய கவிதையையே
ஒரு பதிவாக்கித் தந்தமைக்கு
மனமார்ந்த வாழ்த்துக்கள்
வரும்பொழுது வானவில்லில் ஏறி வரட்டும். நன்று.
பதிலளிநீக்குசுண்டக்கய்ச்சிய கவிதை ஒன்றல்ல! ஒராயிரம் உண்டே உம்மிடம் ! வாழ்த்துக்கள்---காஸ்யபன்.
பதிலளிநீக்குகலயம் தரும் கவிதைகள்..
பதிலளிநீக்குகாலம் கனியும் போது ஏடுகட்டியும் இறுகலாம்..
தணலை ஊதிஊதி உயிர்ப்புடன் வைத்திட தோணலையோ தம்பி!
சுகமான கவிதை... மெல்லிய தென்றல் வீச்சாய்..
சுண்டக்காய்ச்சிய கவிதையின் இனிப்பு தூக்கல். இதுபோல் எத்தனைச் சட்டிகளில் சுண்டிக்கிடக்கின்றனவோ...பதிவுக்கப்பால் கவிதைப்பால்... பாராட்டுகள் சிவகுமாரன்.
பதிலளிநீக்கு