பேர்த்தெடுத்துச் சென்றதடி உன்பிரிவு நெஞ்சத்தை
வார்த்தை இழந்ததடி வாயிதழும் - பார்த்துப்
பழுதாகிப் போனதடி பார்வை ! தினமும்
அழுதநீர் ஆனதடி ஆறு.
ஆறாத் துயராய் அகலா நெடுங்கனவாய்
மாறா வடுவாய் மனதுக்குள் - சூறா
வளியாய்ப் புகுந்து வலுவாய்ப் புரட்டி
வலியாய் நிறைந்தாய் வதைத்து.
-சிவகுமாரன்
சாராயம் வித்தீங்க
சகிச்சுக்கிட்டோம்
இட்லி தோசை வித்தீங்க
ஏத்துக்கிட்டோம்
தண்ணியையும் வித்தீங்க
தாங்கிக்கிட்டோம்
இனிமே எதை விப்பீங்க?
காத்தை பிடிச்சு
காசாக்குங்க
பத்தலைனா
எங்களை வித்துருங்க
வாங்கிக்க இருக்காங்க
வசதியா சில பேரு
ஏலாம கெடக்குறோம்
எங்கள்ள பல பேரு.