காதல் வெண்பாக்கள் 40
பேர்த்தெடுத்துச் சென்றதடி உன்பிரிவு நெஞ்சத்தை
வார்த்தை இழந்ததடி வாயிதழும் - பார்த்துப்
பழுதாகிப் போனதடி பார்வை ! தினமும்
அழுதநீர் ஆனதடி ஆறு.
ஆறாத் துயராய் அகலா நெடுங்கனவாய்
மாறா வடுவாய் மனதுக்குள் - சூறா
வளியாய்ப் புகுந்து வலுவாய்ப் புரட்டி
வலியாய் நிறைந்தாய் வதைத்து.
-சிவகுமாரன்
பிரிவின் துயரம் என்றும் ஆறாது....
பதிலளிநீக்குவெண்பா அருமை நண்பரே
பதிலளிநீக்குவெண்பா எழுதுவது மிகவும் கடினம் என்று கேள்விப்பட்டிருக்கின்றேன்.
வாழ்த்துக்கள்
பிரிவு என்றும் துயரம் தான் பொருத்தமான நல்லகவிதை நன்றாகவே உள்ளது.
பதிலளிநீக்கு//அழுதநீர் ஆனதடி ஆறு//
பதிலளிநீக்குஅற்புதமான கற்பனை
இரண்டும் மிக சிறப்பு
ரொமேனியக் கவிதை நினைவுக்கு வருகிறது.
பதிலளிநீக்குநல்ல வெண்பா கவிஞரே!
பதிலளிநீக்குநின்று நடந்தாய்நீ நீங்காதென் உள்ளத்தே
வென்று யெனையாள வீழ்ந்தேனே-சென்ற
பொழுதிற்காய் ஏங்கியே போனதே காலம்
விழுதிற்காய் ஏங்குதே வேர்!
வணக்கம் சகோதரர்
பதிலளிநீக்குகாதலின் தவிப்பை வெளிப்படுத்தும் அற்புத வரிகள். பிரிவின் வலியை இதை விட எப்படி சொல்ல முடியும்? பகிர்வுக்கு நன்றி சகோதரர்
பிரிவின் வலியில் பிறந்த கவிதை
பதிலளிநீக்குஎரிபோல் மனத்தில் இறங்கும்! – அரிதாய்
விளம்பும் அழகிய வெண்பா பொருளோ
உளத்திலே நிற்கும் உயர்ந்து!
ஆளாளுக்கு பின்றாங்கய்யா..
பதிலளிநீக்குஅருணா செல்வம், ஜோசப் விஜு பாக்களையும் ரசித்தேன்.