சின்னக் கதிரொளி
சன்னல்வழி வந்து
கன்னத்தைத் தொட்டதடி.
வண்ணக் கனவுகள்
மெல்லக் கலைந்தது
உள்ளமும் சுட்டதடி.
நேற்றுக் கனவினில்
நீயிருந்தாய் - அந்த
நிம்மதி போனதடி.
வேற்று உலகினில்
நாமிருந்தோம் - இன்று
வேதனை மிஞ்சுதடி.
தூக்கக் கனவுக்குள்
நீயிருந்து - எனைத்
தொட்டுத் தழுவுகிறாய்
ஏக்கம் பெருகிட
கண்விழித்தால் - எனை
விட்டு நழுவுகிறாய்
பக்கத்தில் நீமட்டும்
வந்துவிட்டால்- சோகம்
பாதி குறையுமடி
துக்கத்தை உன்னிடம்
சொல்லிவிட்டால் -அந்த
மீதியும் போகுமடி.
கொஞ்சல் மொழிதனை
கேட்டுவிட்டால் -ஒரு
துன்பமும் இல்லையடி
நெஞ்சில் தலைவைத்து
நீபடுத்தால்- மனம்
நிம்மதி கொள்ளுமடி.
ஊடுதல் காமத்திற்(கு)
இன்பமென்று- நான்
உள்ளம் மகிழ்ந்தேனடி
கூடி முயங்கிடும்
காமமில்லை - எனக்
கூறிப் பறந்தாயடி.
ஓயாது உன்பெயர்
சொல்லிச் சொல்லி- என்
நெஞ்சு துடிக்குதடி.
நீயதை ஏனடி
நம்பவில்லை - மனம்
வெந்து துடிக்குதடி,
-சிவகுமாரன்
விலகி இருந்தால் வேதனை.
பதிலளிநீக்குகனவின் தொல்லை.
அருமை.
வணக்கம்!
பதிலளிநீக்குதென்னவள் பேரழகைத் தேடித் தினமுண்டு
பொன்னிகர் பாக்கள் பொழிந்துள்ளீர்! - சின்னவள்
வேல்கொண்ட கண்களின் மேல்கொண்ட காதலைச்,சீர்
சால்கொண்டு தந்தீர் தழைத்து
கவிஞர் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு
வாழ்த்து வெண்பாவிற்கு நன்றி அய்யா
பதிலளிநீக்குஅழகான கவிதை சிவகுமாரன்.
பதிலளிநீக்குமீதித் துக்கமும் போகும் வரிகள் சுகமானவை.
நன்றி ஸ்ரீராம்
பதிலளிநீக்குநன்றி அப்பாஜி.