நினைத்துக் கிடப்பதால் நீளும், விழிநீர்
நனைத்தத் தலையணையின் நாட்கள்-அனைத்தும்
அடங்கும் இரவில் அசையாமல் தூங்கி
முடங்கும் கடிகார முள்.
முள்ளாகக் குத்தும் முகம்தவிர்க்கும் உன்கோபம்!
உள்ளூரச் சிக்கி உணர்வழிக்கும் - சுள்ளென்று
சுட்டெரிக்கும் சொல்லும் சுகமாகும்! நீயென்னை
விட்டு விலகாமல் வீழ்த்து.
உள்ளூரச் சிக்கி உணர்வழிக்கும் - சுள்ளென்று
சுட்டெரிக்கும் சொல்லும் சுகமாகும்! நீயென்னை
விட்டு விலகாமல் வீழ்த்து.
வீழ்ந்து கிடக்காதே வேலிக்குள்! யாருக்கும்
தாழ்ந்து அடங்காமல் தாண்டிவா!-வாழ்ந்து
முடித்தோர்கள் நம்மை முடக்குவார்! காதல்
ஒடித்தால் உடையாதென்(று) ஓது.
சிவகுமாரன்
வணக்கம்
பதிலளிநீக்குஐயா
வெண்பாக்கள் எல்லாம் மிக அருமையா க உள்ளது படித்து மகிழ்ந்தேன் பகிர்வுக்கு நன்றி த.ம 1
ஷ-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வீழ்ந்து கிடக்காதே வேலிக்குள்! யாருக்கும்
பதிலளிநீக்குதாழ்ந்து அடங்காமல் தாண்டிவா!-வாழ்ந்து
முடித்தோர்கள் நம்மை முடக்குவார்! காதல்
ஒடித்தால் உடையாதென்(று) ஓது.
அனைத்தும் அருமை அருமை! உண்மையும் கூட !
வணக்கம் அண்ணா.
பதிலளிநீக்குஉங்கள் கவிதைகளைக் காணக் காத்திருப்பதை விடக் காதலை உளம் கொண்டு முடிவறியக் காத்திருத்தல் கடினமாய் இல்லை. அனுபவத்தில் சொல்கிறேன்.
“ஓதும் மனக்குகைகள் ஓயா தெதிரொலித்து
மோதும் அவள்நினைவு மந்திரங்கள்- காதலுக்கு
வேதம் எனவாகும் வெண்பாக்கள் செந்தமிழின்
கீதம்‘எனை ஆக்கும் கிறுக்கு!
தொடர்ந்து எழுதுங்கள் அண்ணா.
த ம கூடுதல் 1
நன்றி.
// யாருக்கும் தாழ்ந்து அடங்காமல் தாண்டிவா... // அப்படிச் சொல்லுங்க...!
பதிலளிநீக்குவெண்பா அந்தாதியில் காதல் பொங்கி வழிகிறது. அருமை
பதிலளிநீக்குகவிதை அருமை நண்பரே வாழ்த்துகள்
பதிலளிநீக்குதமிழ் மணம் 6
தங்களின் 50 வது இணைப்பாளர் ஆகி விட்டேன் நண்பரே...
பதிலளிநீக்குஏங்கிக் கிடப்பார்கே
பதிலளிநீக்குஇனிக்கின்ற வெண்பாவை
தேங்கும் நீர்தன்னின்
தெளிவே போல்தந்தீரே
ஓங்கும் வளர்மரமாய்
உயர்தமிழின் விளைநிலமாய்
தாங்கும் தூணாக
தமிழுக்கே ஆனிராம்
பதிலளிநீக்கு/வாழ்ந்து
முடித்தோர்கள் நம்மை முடக்குவார்! காதல்
ஒடித்தால் உடையாதென்(று) ஓது/ நானெல்லாம் இன்னும்வாழ்ந்து முடிக்கவில்லையோ சிவகுமாரா...!
சிவகுமாரன்!நலமா?
பதிலளிநீக்குவெண்பா அந்தாதி அருமை
தொடர்ந்து எழுதுங்கள்
அருமை. குறிப்பாக இரண்டாவது கண்ணியும், மூன்றாவதும்.
பதிலளிநீக்குஅருமை
பதிலளிநீக்குதங்களை வலையில் சந்தித்து நீண்டுநாட்கள் ஆகிவிட்டன நண்பரே
தொடர்ந்து எழுதுங்கள்
காத்திருக்கிறோம்
தம +1
ஏக்கத்தை வார்த்தைகளில் கவிதைவழியாகக் கொண்டுவந்தமையறிந்து மகிழ்ச்சி.
பதிலளிநீக்குhttp://drbjambulingam.blogspot.com/
http://ponnibuddha.blogspot.com/
வணக்கம்!
பதிலளிநீக்குவிழிநீர் நனைத்த தலையணை வெண்பா
மொழி..நீர் அளித்துநலம் மூட்டும்! - பொழிலாகப்
பூக்கும் கருத்தெல்லாம் பொற்றமிழ் மேன்மையைக்
காக்கும் அரணாய்க் கமழ்ந்து!
கவிஞர் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு
//.வீழ்ந்து கிடக்காதே வேலிக்குள்! யாருக்கும்
பதிலளிநீக்குதாழ்ந்து அடங்காமல் தாண்டிவா!-வாழ்ந்து
முடித்தோர்கள் நம்மை முடக்குவார்! காதல்
ஒடித்தால் உடையாதென்(று) ஓது.//
உள்ளத்தில் கட்டுண்ட வார்த்தைகள் கட்டற்று வெள்ளமாய் களம் காணுகிறது உள்ளம் பூரிக்கிறது பாராட்டுகள் ....
அனபுள்ள சிவகுமரன்
பதிலளிநீக்குவாழ்த்துக்கள். எப்படியிருக்கீங்க? நாளாயிற்று உங்கள் பதிவிற்கு வந்து என்றாலும் மனம் குளிர்கிறது வெண்பா மழையால்.
செமை தோழர்
பதிலளிநீக்குதொடர்ந்து எழுதுங்க ...
தம +
பதிலளிநீக்கு