காலங்கள் ஓடிடும் நில்லாது.-நம்
கணக்குகள் அதன்முன் செல்லாது.
பாலனாய் தவழ்ந்திட்ட நாள்முதலாய்- நெஞ்சில்
பசுமையாய் பதிந்தவை அகலாது.
என்னில்
நீங்கள் தான்!
எண்ணம்!
நீங்கள் தான்!
என் வாழ்க்கையின்
ஒளி நீங்கள் தான்.
ஏற்றமும்
இந்தத் தோற்றமும்
வரும்
மாற்றமும்
இனி
நீங்கள்தான்.
நீங்கள் தான்!
எண்ணம்!
நீங்கள் தான்!
என் வாழ்க்கையின்
ஒளி நீங்கள் தான்.
ஏற்றமும்
இந்தத் தோற்றமும்
வரும்
மாற்றமும்
இனி
நீங்கள்தான்.
கிளைவிட்டு பறவைகள் பறந்திடலாம்- அதன்
கீழ்வளர் விழுதுகள் விலகாது.
முளைவிட்ட நாள்முதல் முகம்பார்த்தே-உச்சி
முகர்ந்திட்ட அன்புக்கு விலையேது?
நான்
வளர்வதினால் அந்த
வான்தொடலாம்-என்
வேர் உங்கள்
பூமியில்
தான்
கீழ்வளர் விழுதுகள் விலகாது.
முளைவிட்ட நாள்முதல் முகம்பார்த்தே-உச்சி
முகர்ந்திட்ட அன்புக்கு விலையேது?
நான்
வளர்வதினால் அந்த
வான்தொடலாம்-என்
வேர் உங்கள்
பூமியில்
தான்
என்னில்
நீங்கள் தான்!
எண்ணம்!
நீங்கள் தான்!
என் வாழ்க்கையின்
ஒளி நீங்கள் தான்.
ஏற்றமும்
இந்தத் தோற்றமும்
வரும்
மாற்றமும்
இனி
நீங்கள்தான்.
நீங்கள் தான்!
எண்ணம்!
நீங்கள் தான்!
என் வாழ்க்கையின்
ஒளி நீங்கள் தான்.
ஏற்றமும்
இந்தத் தோற்றமும்
வரும்
மாற்றமும்
இனி
நீங்கள்தான்.
நீங்கள்....தான்
நீங்கள்... தான்
நீங்கள்... தான்
தன்னில் தாயும்,
நெஞ்சினில் தந்தையும் சுமந்தீர்!
காலங்கள் தோறும்
நீங்கள் சொல்லும்
எந்த
வார்த்தையும் வேதம்,
நீங்கள் செல்லும்
அந்தப்
பாதையில் பயணம்,
நான்
பார்ப்பதெல்லாம்
உங்கள்
விழிவழியே,
உங்கள்
பரம்பரை
பேர்சொல்ல நான்
நெஞ்சினில் தந்தையும் சுமந்தீர்!
காலங்கள் தோறும்
நீங்கள் சொல்லும்
எந்த
வார்த்தையும் வேதம்,
நீங்கள் செல்லும்
அந்தப்
பாதையில் பயணம்,
நான்
பார்ப்பதெல்லாம்
உங்கள்
விழிவழியே,
உங்கள்
பரம்பரை
பேர்சொல்ல நான்
என்னில்
நீங்கள் தான்!
எண்ணம்
நீங்கள் தான்!
என் வாழ்க்கையின்
ஒளி நீங்கள் தான்.
ஏற்றமும்
இந்தத் தோற்றமும்
வரும்
மாற்றமும்
இனி
நீங்கள்தான்
நீங்கள் தான்!
எண்ணம்
நீங்கள் தான்!
என் வாழ்க்கையின்
ஒளி நீங்கள் தான்.
ஏற்றமும்
இந்தத் தோற்றமும்
வரும்
மாற்றமும்
இனி
நீங்கள்தான்
02.09.2015 அன்று திருச்சியில் நடைபெற்ற எனது அண்ணனின் 25வது திருமணநாள் விழாவின் போது நான் எழுதி என் அண்ணன் மகன் விக்கி பாடிய பாடல்.
ஆஷிகி 2 என்னும் இந்திப் படத்தில் இடம் பெற்ற தும் ஹி ஹோ - பாடலின் மெட்டு.
அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கங்கள் . எட்டாத உயரத்தில் இணையம் இருக்கிறது எனக்கு. சிறகொடிந்த பறவை போல் வலைப்பக்கம் வரமுடியாமல் தவிக்கிறேன். அதிர்ஷ்டவசமாய் இன்று இணையம் கிடைத்தது . அவசர அவசரமாய் இந்தப் பதிவு.
பதிலளிநீக்குவிரைவில் நிலைமை சீராகி மீண்டும் வருவேன் நிறைய கவிதைகளோடு .
அருமையான பாடல்! காலங்கள் ஓடினாலும் தங்கள் கவிதை நிலைத்து திற்கும்!
பதிலளிநீக்குபாடலுடன் இசை சேர்ந்துவிடும்போது கண்களோடு செவியும் பெறும் இன்பம் கவிதையை எங்கோ கொண்டு செல்கிறது அண்ணா!
பதிலளிநீக்குபதிவர் சந்திப்பை ஒடடிய கவிதைப்போட்டியில் கலந்துகொள்ள வேண்டுகிறேன்.
நன்றி.
ஆகா
பதிலளிநீக்குஅருமை நண்பரே
நீண்ட நாட்கள் ஆகிவிட்டதே தங்களை வலையில சந்தித்து
அத்தி பூத்தது!
பதிலளிநீக்குஎன்ன பிரச்சினை இணையத்தில் சிவகுமாரன்?
எங்கள் அனைவரின் எதிர்பார்ப்புகள் விரைவில் நிலைமையைச் சீராக்கும்
வாழ்த்துகள்
காலங்கள் ஓடிடும் ...
பதிலளிநீக்குஅருமை...
தொடர்ந்து எழுதுங்கள்..
வெகு நாட்களுக்குப் பின் நாங்களும்
பதிலளிநீக்குஒரு அற்புதமான கவிதையை இரசித்தோம்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
தங்கள் அண்ணன் குடும்பத்தார் அனைவருக்கும்
எங்கள் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
அன்பு சிவா? நலம் தானா? கவிதையை மிக ரசித்தேன். உங்கள் சகோதரனுக்கு வாழ்த்துக்கள். வலையுலகமே ஏனோ மந்த கதியில் இயங்குவது போல் இருக்கின்றது. நாமெல்லாம் இணைந்து கொண்டாடியது ஒரு காலம்....
பதிலளிநீக்குஅனைவருக்கும் நன்றி.
பதிலளிநீக்குநண்பர்களின் தளங்களுக்கெல்லாம் வர இயலாமைக்கு வருந்துகிறேன்.
நீண்டநாளாயிற்றே சிவா? நலம்தானா? கோடையிலே இளைப்பாறிக் கொள்ளும் வகை கிடைத்த குளிர்தருவாய் வலையில் வலம் வருவாய்,, எமக்கு நல்லபல கவிதருவாய்..நானும் தொடர்வேன்.
பதிலளிநீக்கு