ஏதும் அறியாமல் ஏமாளி ஆகாதே
சூதும் அறிந்து துற. 71.
சூதும் அறிந்து துற. 71.
துறப்பதும் மீண்டும் தொடர்வதுமோ வீரம்?
புறப்படு வெல்லட்டும் போர்.
புறப்படு வெல்லட்டும் போர்.
போர்க்களம் போன்றதே போகின்ற பாதைகள்.
சேர்க்கும் சிகரத்தில் சென்று.
சேர்க்கும் சிகரத்தில் சென்று.
சென்றதின் தோல்விகள் சேமித்து வைத்திடு.
வென்றபின் பாடமாய் வை.
வென்றபின் பாடமாய் வை.
வையமே உன்னை வரவேற்கும் நாள்வரும்
ஐயமின்றி வைப்பாய் அடி.
ஐயமின்றி வைப்பாய் அடி.
( வேறு )
வையத் தலைமைக்கு வாய்மை வழிதன்னில்
ஐயமின்றி வைப்பாய் அடி.
ஐயமின்றி வைப்பாய் அடி.
அடித்தளம் தன்னை அசையா தமைத்து
முடிப்பாய் எதையும் முயன்று.
முயன்றால் எதுவும் முடியாத தில்லை.
இயன்றவரை வானோக்கி ஏறு.
இயன்றவரை வானோக்கி ஏறு.
ஏறினாலும் கீழே இறங்கினாலும் கொஞ்சமும்
மாறி விடாதே மனம்.
மாறி விடாதே மனம்.
மனம்போன போக்கில் மதிபோனால் உன்னை
இனங்கண்டு சேரும் இழுக்கு.
இனங்கண்டு சேரும் இழுக்கு.
இழுக்கன்று வீழ்தல், எழுந்திடச் சோம்பி
விழுந்து கிடக்கவே வெட்கு.. 80.
விழுந்து கிடக்கவே வெட்கு..
தொடரும்....
சிவகுமாரன்
அனைத்தும் அருமை... தொடர வாழ்த்துகள்...
பதிலளிநீக்குஅனைத்தும் மிகவும் அருமை அண்ணா
பதிலளிநீக்குஅருமையாக இருக்கு, தொடருங்கள்.
பதிலளிநீக்கு/ சென்றதின் தோல்விகள் சேமித்து வைத்திடு.
பதிலளிநீக்குவென்றபின் பாடமாய் வை/ ரசித்தது.
இனிமையும் எளிமையும் அறிவுரையும் ஆழமும் கொண்ட குறட்பாக்கள் அண்ணா.
பதிலளிநீக்குதுய்த்துத் தொடர்கிறேன்.
தம +
நன்றி.
பிள்ளைக்குறள் அருமை...
பதிலளிநீக்குதொடருங்கள்.
நம்பிக்கை தரும் கவிதை வரிகள். நன்றி.
பதிலளிநீக்குஉண்மையில் இன்று குழந்தைகளுக்குதான் மிகசரியான அறிவுறுத்தல் தேவை எப்படி வாழ்வது எதற்காக வாழ்வது என்பதுபற்றி ஒரு முறையான முழுமையான புரிதல் இருக்கவில்லை பாராட்டுகள்...
பதிலளிநீக்கு