எழிலென்ப உந்தன் இலக்கை அடைய
பழுதின்றிச் செய்யும் பணி. 91
பழுதின்றிச் செய்யும் பணி.
பணிவுகொள் வென்றால்! பயமறு தோற்றால்!
துணிவுதான் வாழ்வின் துணை.
துணிவுதான் வாழ்வின் துணை.
துணையென என்றும் தொடர்ந்திடும் கல்வி!
இணையதற் குண்டோ இயம்பு.
இணையதற் குண்டோ இயம்பு.
இயம்புவது ஒன்றும், இயல்வது வேறும்
கயமைக் குணமாய்க் கருது.
கயமைக் குணமாய்க் கருது.
கருதியது கைகூட காலம் கடந்தால்
உறுதியாய் ஆக்கு உளம்.
உறுதியாய் ஆக்கு உளம்.
உளமார நேசித்து வேலையைச் செய்தல்
வளமாக வாழும் வழி.
வளமாக வாழும் வழி.
வழியொன்று மூடினால் வேறொன்று தேடு!
செழிப்பாகும் என்றெண்ணிச் செல்.
செழிப்பாகும் என்றெண்ணிச் செல்.
செல்லும் பயணத்தில் சிந்தை முழுதாக்கு.
வெல்ல வழியுண்டோ வேறு.
வெல்ல வழியுண்டோ வேறு.
வே(ற்)று இலக்கிலும் வெற்றிகள் காணலாம்.
தோற்றதாய் எண்ணாதே சோர்ந்து.
தோற்றதாய் எண்ணாதே சோர்ந்து.
சோர்ந்து விடாதே, சுடரட்டும் நெஞ்சுக்குள்
தீர்ந்து அணைந்திடாத் தீ. 100
தீர்ந்து அணைந்திடாத் தீ.
...முற்றும்
வணக்கம்
பதிலளிநீக்குஐயா.
மிக அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் தொடருகிறேன்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி ரூபன்
நீக்குநன்றி ரூபன்
நீக்குபடித்தேன். அருமை.
பதிலளிநீக்குமிக்க நன்றி
நீக்குஅருமை
பதிலளிநீக்குஅருமை
நன்றி அய்யா
நீக்குபிள்ளைக்குறளுடன் திரும்பிவிட்டீர்கள். நன்று.
பதிலளிநீக்குநன்றி. புரிகிறது.ஒவ்வொரு பதிவுக்கும் திரும்பி வருவது போல்தான் அமைகிறது. சூழ்நிலை அப்படி.
நீக்குஅன்பு சிவகுமாரன், வணக்கம். தங்கள் மீள்வரவை அறியாதிருந்த அறியாமைக்கு வருந்துகிறேன். (மின்னஞ்சல் பெட்டி நிறைந்து போனதால் கழித்தபோது தங்கள் ஐடி யை இழந்தும் வருந்தினேன்)
பதிலளிநீக்குநூறு குறள் -அதுவும் அந்தாதியாக! மிக அரிய முயற்சி. சிறு நூலாகவே வெளியிடலாம். அவ்வளவு அடர்த்தி. எங்கள் பேராசிரியர் தமிழ்க்கடல் தி.வே.கோபாலய்யர் அவர்களின் சொற்களில் சொல்வதானால், “தொய்ஞ்சு போன கயித்துக் கட்டில் மாதிரி கவிதை இருக்கக்கூடாது. இழுத்துக் கட்டின வில் மாதிரி இருக்கணும்” அந்த வில்லின் கம்பீரம் உங்கள் சொல்லில்! அருமை! தொடர்ந்து இதுபோலும் புதுமைகளை மரபில் எழுதி விரைவில் வெளியிடவும் வேண்டுகிறேன். வாழ்த்துகள். எனது வலையில் இணைப்புத் தந்துள்ளேன். நன்றி.
தங்களின் அயராத பணிகளுக்கிடையிலும் என் தளத்திற்கு வருகை தந்தது என் பேறு. மிக்க நன்றி அய்யா. தங்களின் வாழ்த்தில் என் சித்தப்பா சுந்தரபாரதியின் வாஞ்சையையும் அக்கறையையும் உணர்கிறேன் அய்யா.மனம் நெகிழ்கிறேன் அய்யா.
நீக்குஅருமை நண்பர் சுந்தரபாரதியின் தமிழருவி நூலிலிருந்து நம் “கரிசல் குயில்” கிருஷ்ணசாமி 10-15 பாடல்களுக்கு மிக அழகாக இசையமைத்துள்ளார். தனியாகவே குறுந்தகடு வெளியிடவும் விரும்புகிறார். (குறிப்பாக அந்த அம்மா பாட்டு மிகவும் அருமை!) பாடல் உரிமை தொடர்பாக யாருடன் பேசுவது என்று என்னைக் கேட்டார். எனது மின்னஞ்சலில் பதில் தரவேண்டுகிறேன்.
நீக்குநன்றி அய்யா. தகவல் மின்னஞ்சலில் அனுப்பியுள்ளேன்
நீக்குஅந்தாதி வடிவில் குறள்கள் பாராட்டுகள் சிவகுமாரா
பதிலளிநீக்குமிக்க நன்றி அய்யா.
நீக்குஅட! குறள் அந்தாதி எனலாமோ!!! அருமை அருமை சிவக்குமாரன்!!! மீண்டும் மீண்டும் வாசித்து ரசித்தோம்...
பதிலளிநீக்குவாழ்த்துகள்!
மிக்க நன்றி தங்களின் தொடர் வருகைக்கு
நீக்குஅன்பார்ந்த சிவகுமாரன் எங்கள் வலைத்தளங்கள் இரண்டு தில்லைஅகத்து மற்ரும் தில்லைஅகத்து க்ரோனிக்கிள்ஸ் என்றாலும் நாங்கள் எழுதிவருவது தில்லைஅகத்து க்ரோனிக்கிள்ஸ் ல் தான்(thillaiakathuchronicles.blogspot.com மிக்க நன்றி தங்களின் கருத்திற்கு
பதிலளிநீக்குபாடமாக வைக்கலாம் அத்தனை குறட்பாக்களையும். பிரமிக்க வைக்கும் கவியாற்றல் உங்களுடையது.
பதிலளிநீக்குவாய்ப்பு கிடைக்கும் இடங்களில் உங்கள் கவிதைகளை உங்கள் பெயர் சொல்லி பகிர்வேன்.
முத்து நிலவன் ஐயா சொன்னது போல நூல் வெளியிடுங்கள்
நன்றி முரளி.
பதிலளிநீக்குஎனக்கும் இந்தக் குறட்பாக்களை நூலாக்கி நான் படித்த பள்ளியில் வெளியிட வேண்டும் என்று ஆசை இருக்கிறது. வெளிநாட்டில் இருப்பதால் இயலாமல் கட்டுண்டிருக்கிறேன். காலம் வரும்.
Sivakumaran, superb. Let your dream come true.
பதிலளிநீக்குIt has been a while since visited a blog. I did not realize that you are away from the country.
மகிழ்ச்சி சாய் சார். வெகு நாட்களுக்குப் (வருடங்களுக்கு)பிறகான தொடர்பு. மிக்க நன்றி.நலமா?
நீக்குதங்களின் வலைத்தளம் என்னவாயிற்று?
தங்கள் கவிதைகளை நினைவூட்டுமளவுக்கான மரபுச் செறிவோடு சகோதரரி உமா எழுதிவரும் கவிதைகளைப் பார்க்க வேண்டுகிறேன். (மரபுக்கவிதைப் பழக்கமுள்ளவர்கள் அருகி வரும் சூழலில் அப்படி எழுதுவோர்தானே கவனிக்கவும் ஊக்கப்படுத்தவும் வேண்டும்) பார்க்க -https://enathutamilkavithaigal.blogspot.in/
பதிலளிநீக்குநன்றி அய்யா
நீக்குஅருமை. தங்களை அறிமுகப்படுத்திய ஐயா முத்து நிலவனவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. தங்களின் கருத்துகள் கண்டிப்பாக எனக்கு மிகுந்த ஊக்கமளிக்கின்றன. தொடர்வோம், நன்றி
பதிலளிநீக்குதீயுண்ணும் ஓர்நெஞ்சம் தேனீந்து நிற்கின்ற
பதிலளிநீக்குதாயுள்ளப் பாவோயி து?
அருமை அண்ணா.
தொடர்கிறேன்.
அருமை
பதிலளிநீக்கு