ஞாயிறு, ஜனவரி 08, 2017

முரண்-டு -காளை




அடித்துக் கொல்லலாம்
அங்கம் அறுக்கலாம்.
தோலை உரித்து
தொழிலை வளர்க்கலாம்.
வெட்டிக் கூறிட்டு
வியாபாரம் செய்யலாம்.
வாங்கித் தின்று
வயிறு வளர்க்கலாம்.
கொம்பு சீவி 
குளிப்பாட்டி
மாலையிட்டு 
மணிகள்கட்டி
மந்தையில் விரட்டி
மகிழ்ந்து துரத்தி
தினவு ஏறிய
திமிலைப் பற்றி
ஆரத்தழுவி
ஆண்மைச் செருக்கில்
அடக்கி ஆளுதல்
.......……………………………
அய்யகோ அய்யகோ
அக்கிரமம் கொடுமை.
காட்டுமிராண்டிகள்
காட்டுமிராண்டிகள்.

சிவகுமாரன் 


11 கருத்துகள்:

  1. அது குத்தி குடல் கிழிந்து சாகவும் செய்யலாம் ஒரு ஜல்லிக் கட்டு காளையை எத்தனை பேர் துன்புறுத்தலாம் காட்டுமிராண்டிகள்தான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது காட்டுமிராண்டித்தனம் என்றால் தோலை உரிப்பதும் மாட்டுக்கறி உண்பதும் எந்தவகை?ஜல்லிக்கட்டில் காளைகளை துன்புறுத்தக்கூடாது என்பது விதி. அவற்றை முறைப்படுத்த வேண்டுமேயொழிய தடைசெய்வது எப்படி நியாயமாகும்? இதற்குப் பின்னால் பன்னாட்டு சதியும், அரசியல் லாபியும் இருப்பதை தாங்கள் புரிந்து கொள்ளவில்லையா? இது நமது பாரம்பரியத்தை, இயற்கை சார்ந்த வாழ்வியலை அழித்து அந்நியக் கலாச்சார அடிமைகளாக்கும் முயற்சி. விழித்துக் கொள்ளாவிட்டால் வீணாய்ப் போவோம்.

      நீக்கு
  2. ஜல்லிக்கட்டை தடை செய்வதின் நோக்கம் மிருகவதை தடுப்பு அல்ல. நம் விவசாயத்தை அழித்து அந்நியர்களிடம் உணவுக்காக நம்மை பிச்சையெடுக்க வைக்கும் முயற்சி. தயவுசெய்து துணைபோகாதீர்கள்.

    பதிலளிநீக்கு
  3. சரியாகச் சொன்னீர்கள் சிவகுமாரன்! அறுத்துத் தொங்கவிட்டு உண்ணலாம் என்றால் இதை எப்படி விலங்குகளைத் துன்புறுத்தல் என்றிட முடியும்!! மிருகவதைத் தடுப்பு என்றால் எவ்வளவோ செய்திருக்க வேண்டும்! அருமையாகச் சொன்னீர்கள்!!

    கீதா

    பதிலளிநீக்கு
  4. பண்டைக்காலத்தில் ஏறு தழுவுதல் ஒரு வீர விளையாட்டு பாரம்பரியம் பேசுபவர் ஏன் தனியாக நின்று காளைகளை அடக்குவதில்லை. ஒரு காளையை விரட்டி அது மிரண்டோடும்போது பலர் அதைப் பிடிக்கும் முயற்சியில் துன்புறுத்துவதுதான் வீரமா இதற்கா வக்காலத்து ஒரு காளையை ஒருவரா அடக்குகிறார் ஜல்லிக் கட்டு நடக்க விடுவது விவசாயத்தை வளர்க்கிறது என்பது புரியாத வாதம்மன்னிக்கவும் நான் முரண்படுகிறேன்

    பதிலளிநீக்கு
  5. வேடிக்கையான வாதம். ஆபத்தானதும் கூட. ஜல்லிக்கட்டை முறைப்படுத்துங்கள். தடை செய்ய நீங்கள் யார்? அக்கறை இருக்கும் பட்ச்த்தில் கசாப்புக் கடையிலிருந்து தொடங்குங்கள்.கேரளாவுக்கு கொண்டு செல்லப்படும் காளைகளைக் காப்பாற்றுங்கள்.

    பதிலளிநீக்கு
  6. ஜல்லிக்கட்டை ஒழிப்பதன் மூலம் காளைகளையும், அதன்வழி இனப்பெருக்கத்தையும், நாட்டுப் பசுக்களையும் அதனைச் சார்ந்த விவசாயத்தையும் அழிக்கலாம். மருந்தேற்றப்பட்ட வெளிநாட்டுப் பாலுக்கும்,பருத்துப் பெருத்த காய்களுக்கும் நம் தலைமுறையை அடிமையாக்கி இளம் வயதிலேயே நோயாளிகளாக்கலாம். வெளிநாட்டு மருந்துகளை விற்கலாம்.புரியாத வாதமல்ல. புரிந்துகொள்ள மறுக்கும் வாதம்.

    பதிலளிநீக்கு
  7. சிவகுமாரன், இந்த விஷயத்தில் நான் உங்கள் பக்கம்தான்.

    பதிலளிநீக்கு