போகும் உயிரைப் பிடித்திழுக்கும் ! நெஞ்சமது
வேகும் வரையில் விடாதிருக்கும்! - தேகத்தில்
பாதியாய் நின்றே பயணிக்கும் காடுவரை !
ஆதலினால் காதல் சுகம்.
ஊரே வெறுத்தாலும் விட்டு விலகாது !
யாரெதிர் வந்தாலும் நின்றெதிர்க்கும் - தீராத
போதைதான் ஆனாலும் புத்தி பிறழாது !
ஆதலினால் காதல் சுகம்.
சிவகுமாரன்
ஆகா
பதிலளிநீக்குசுகமான கவிதை நண்பரே
நன்றி
சரி சரி...!
பதிலளிநீக்குஆதலினால் காதல் சுகம்
பதிலளிநீக்குஅருமையான பாக்கள்
ஆமாம்! ஆதலினால் காதல் சுகமே! வரிகளிலும் அந்தக் காதலின் சுகம்!!!
பதிலளிநீக்குசேதியைக் கண்டேன், சிற்சில நீர்க்குமிழி!
பதிலளிநீக்குதேதியைக் கண்டே தெரிந்துகொண்டேன் - பாதிக்குப்
பாதியைத் தாண்டும் பயணத்தில் எல்லார்க்கும்
ஆதியைத் தாண்டும் அகம்!
மன்னிக்கவும், “சிற்சில” என்பதை “சிலச்சில” என்று திருத்தி, தளைப்பிழையிலிருந்து காக்க வேண்டுகிறேன்.
பதிலளிநீக்குஆதலினால் காதல் செய்வீர்
பதிலளிநீக்குரொம்ப சரி, தீராத போதைதான்...
பதிலளிநீக்குவணக்கம் அண்ணா!
பதிலளிநீக்குநலந்தானே?
உங்கள் கவிதைகளுக்கு கரு ஆதலினால் காதல் சுகம்தான்.
தொடர்கிறேன்.
நன்றி.
காதல் என்றதுமே கவிஞர்களுக்கு கற்பனை சிறகடித்துப் பறக்க ஆரம்பித்து விடுகிறது. காதலைப் போலவே தங்கள் கவிதையும் சுகம் சுகம் சுகம்
பதிலளிநீக்குகாதல் என்றதுமே கவிஞர்களுக்கு கற்பனை சிறகடித்துப் பறக்க ஆரம்பித்து விடுகிறது. காதலைப் போலவே தங்கள் கவிதையும் சுகம் சுகம் சுகம்
பதிலளிநீக்கு