என்னதான் நடந்தது
டைரியின்
எழுதப்படாத பக்கங்களில்?
நீக்கிவிடலாம்
நினைவில் நிற்காத
நாட்களை
ஆயுட்கணக்கிலிருந்து
அடியோடு.
தினசரிக் காலண்டரின்
நேற்றாய்
கிழித்தெறிந்து விடலாம்
முத்தெடுக்கும் ஆசையில்
கிளிஞ்சல் பொறுக்கிய
நாட்களை.
கனவிலும் சாதிக்காமல்
கடந்துசென்ற காலத்தை
எப்படிச் சேர்ப்பது
கணக்கில்?
வாழ்ந்து முடிப்பதும்
முடிந்தவரை வாழ்வதுமே
வாழ்வெனில்,
இன்னொரு பிறப்பு
இருப்பது நிஜமெனில்
இறைவா படைத்துவிடு
ஈசலாய் .
சிவகுமாரன்
ஏனிந்த சோகம்...?!
பதிலளிநீக்குஅது வரும் போகும்.
நீக்குஇதுவும் கடந்து போகும் கவிஞரே....
பதிலளிநீக்குத.ம.2
ஆம் ஜி. காலம் தான் சர்வதுக்க நிவாரணி
நீக்குவேதனை
பதிலளிநீக்குஇது எல்லோருக்கும் ஏற்படும் விரக்தி நிலை தான்.
நீக்குகவிதையைப் படித்ததும் இப்படித் தோன்றியது என்னில்:
பதிலளிநீக்குஎப்படியெல்லாமோ செல்கிறது வாழ்க்கை வண்டி
இப்படியாகச் செல் என்றால் கேட்டால்தானே
அப்படியும் இருக்குமோ ஒருவேளை என நினைக்கையில்
இப்படித் திரும்பி அப்படி வளைந்து
எங்கெங்கோ ஓடுகிறது
நான் ஒரு பயணி
ஓட்டுபவன் அல்ல
ஓட்டுபவன் யாரோ என நினைத்து
வாட்டப்போவதில்லை மனதை
காட்டினால் காட்டட்டும் தன்னை-கனவுபோல்
ஓட்டினால் ஓட்டட்டும் என்னை
கவலையில்லை
சொல்வதற்கு ஏதுமின்றியும்
செல்லலாம் காலம்
போகிறபடி போகட்டும்
ஆகிறபடி ஆகட்டும்
**
ஆகா ஏகாந்தன் அய்யா. நீங்கள் சொல்வது போலத்தான் நகர்ந்து கொண்டிருக்கிறது வாழ்க்கை வண்டி. சிலசமயம் மெதுவாகவும் சில சமயம் தறிகெட்டும் ஓடுகிறது. லகான் நம் கையில் இல்லை என்பது தான் வலிதரும் உண்மை.
நீக்குஅற்புதம்
நீக்குஎதுவுமில்லாததால்தானே பக்கங்கள் எழுதப் படாமல் இருகிறதுகிழிஞ்சல் பொறுக்கிய நாட்கள் பிற்காலத்தில் இனிமை தரும் எண்ணங்களில்
பதிலளிநீக்குநன்றி அய்யா.
நீக்குஅவ்வப்போது பாரதி கனவில் வந்து தேடிச்சோறு நிதந்தின்று என்று பாடி பரிகசிக்கிறான்.
என்ன நண்பரே
பதிலளிநீக்குஏனிந்த சோகம்
காலம் மாறும்
ஒன்றுமில்லை அய்யா. இது ஒரு தனிமை இரவின் தன்னிரக்கம். எழுதிக் கிழித்தெறிந்து விடுவது வழக்கம். மாறாய் இம்முறை பகிர்ந்து கொண்டேன். அவ்வளவே.
நீக்குசிலசமயங்களில் ஒவ்வொரு கணத்துக்கும் அர்த்தம் தேட முடியாது. அர்த்தமில்லா மகிழ்ச்சி கணங்களும் உண்டு!
பதிலளிநீக்குநிச்சயமாய்.ஆனாலும் அர்த்தமில்லாப் பொழுதுகள் அதிகமாகிவிடக் கூடாதே.
நீக்குஇன்பமும் துன்பமும் நமக்குள்ளே தான் இருக்கின்றன.
ஜனவரி 2017இல் விக்கிபீடியா போட்டியில் கலந்துகொண்டதால் தங்களின் சில பதிவுகளைக் காண்பதில் தாமதமேற்பட்டுவிட்டது....இதுதான் வாழ்க்கை. எதிர்கொண்டுதானே ஆகவேண்டும்.
பதிலளிநீக்குநன்றி அய்யா. என்ன போட்டி?வாழ்த்துக்கள்.
நீக்குஆம்...ஆனால் சில சமயம் சோகம் கூட நினைக்கும் போது இன்பம் தரும்....இப்படியான தருணங்கல் கடந்து விடும்....
பதிலளிநீக்குஆம். நினைத்துப் பார்க்க ஏதுமில்லாமல் கடந்துபோகும் காலங்கள் வருத்தமளிக்கவே செய்கின்றன.என்ன செய்ய?
நீக்குசூன்யமாய் இருப்பதும் சும்மா இருப்பதும் வெகு சிரமம் தான். சில நேரங்கள் சூழ்நிலைக் கைதியாய்...
பதிலளிநீக்குஆமாம் சகோதரி.
பதிலளிநீக்குதனிமை
வெறுமை
கொடுமை
கொடுமை.
"கனவிலும் சாதிக்காமல் //கடந்துசென்ற காலத்தை //எப்படிச் சேர்ப்பது
பதிலளிநீக்குகணக்கில்?" என்ற வார்த்தைகளை மிகவும் ரசித்தேன்!
-இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து.
நன்றி அய்யா
நீக்குஉோடு இருதை ரசிக்க முடியுமானால் தைவிடொரு சானையுோ
பதிலளிநீக்குபொருள் பொதிந்த கவிதை. சிந்தித்துப் பார்த்தால் வாழ்வின் பெரும்பகுதி நீக்கப் படவேண்டியதாக இருக்கும் போலிருக்கிறதே
பதிலளிநீக்கு