நிலை தடுமாறுகிறது
நீதி அரங்கம்.
சரியென்றும் தவறென்றும்
செயல்களைக் கொண்டல்ல
செய்பவர்களைக் கண்டே
தீர்மானிக்கிறது.
தண்டனைகளை கூட
தகுதி பார்த்தே வழங்குகிறது.
விதிகளை எல்லாம்
வினாக்களைப் போல்
எழுதி வைத்திருக்கிறது.
கோடிட்ட இடங்களை
நிரப்புவதைப் போல்.
அறையெங்கும் தொங்குகிறது
விதிகளோடு
விலைப்பட்டியலும்.
காதுகளையும்
வாயையும்
பொத்திக் கொள்கிறாள்
நீதி தேவதை.
கரன்சி நோட்டுகளால்
கட்டவிழ்க்கப்படுகிறது
கருப்புத்துணி.
- சிவகுமாரன்.
உண்மை...
பதிலளிநீக்குஅதுவும் இனி இல்லை...
இனி இன்னும் இழிநிலைகளை காணவேண்பிய சூழல் வரும்...
பதிலளிநீக்குசரியான உண்மை, உண்மையான நிலை.
பதிலளிநீக்குசரியாகச் சொல்லி இருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குகரன்சி நோட்டுகளால்
பதிலளிநீக்குகட்டவிழ்க்கப்படுகிறது
கருப்புத்துணி.//
உண்மை! அழகா சொல்லியிருக்கீங்க.
கீதா
உண்மை
பதிலளிநீக்குஆஹா ... ஒரே ஒரு கவிதையிலேயே ஒட்டு மொத்த நீதிமன்றங்களையும் கூண்டிலேற்றி விட்டீர்களே !!! ... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<
பதிலளிநீக்கு