ஞாபகம் வருதே
ஞாபகம் வருதே
தலைவன் என்றதும்
துரோகமும் செல்வமும்
தொண்டன் என்றதும்
தியாகமும் ஏழ்மையும்
உணர்வு என்றதும்
மரத்தலும் மறத்தலும்
உரிமை என்றதும்
மறுத்தலும் மீறலும்
தோழி என்றதும்
துரத்தலும் சேர்தலும்
தோழர் என்றதும்
சேர்தலும் துரத்தலும்
ஈழம் என்றதும்
இனமும் பிணமும்
ஈரம் என்றதும்
மனமும் பணமும்
குழப்பம் என்றதும்
போயஸ்கார்டனும்
குடும்பம் என்றதும்
கோபாலபுரமும்.
தேர்தல் என்றதும்
வாக்கும் நாக்கும்
ஆட்சி என்றதும்
கொள்கையும், கொள்-கையும்.
ஆட்சி என்றதும்
கொள்கையும், கொள்-கையும்.
அரசியல் என்றதும்
தஞ்சமும் லஞ்சமும்
அனுபவம் என்றதும்
ஆடலும் அடங்கலும்.
ஞாபகம் வருதே
ஞாபகம் வருதே
பதிலளிநீக்குஞாபகம் வருதே
>>
இந்த ஞாபகங்களால நாம படுற இம்சை இருக்கே. நல்ல விசயத்தைவிட கெட்டவையே ஞாபகத்துல நிக்கும்
மிகச் சரி
பதிலளிநீக்குஎன்று இந்த இன்னல்கள் போம் என்ற ஏக்கம்
என்னுள் கவலையாய் விரிகிறது
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
உண்மைதான்.
பதிலளிநீக்குஞாபகம் வருதே
பதிலளிநீக்கும்ம்ம் நல்ல இருக்கு
சில ஞாபகங்களை மறக்க நினைக்கும்போதுதான் எங்களை முந்திக்கொண்டு முன் வந்து நிற்கும்.ஞாபகம் வருதே...!
பதிலளிநீக்குஞாபகம் வருதே
பதிலளிநீக்குஞாபகம் வருதே
இணை பிரியாதவை நினைவுக்கு வருவது இயற்கைதானே!அருமை சிவா!
பதிலளிநீக்குசில ஞாபகங்கள் தாலாட்டும்... சில ஞாபகங்கள் தீ மூட்டும். ஆனால் ஞாபகங்களை விலக்க முடிவதில்லை, இல்லையா கவிஞரே... அருமை!
பதிலளிநீக்குசினிமா டைடில் பாட்டுக்கு ஏற்ற வரிகள்.
பதிலளிநீக்குரசித்தேன்.
கொள்கை - nice touch!
பதிலளிநீக்குஞாபகங்களின் பின்னலாய் பயணிக்கிற வாழ்க்கை.நல்ல ஞாபகப்பின்னல்,வாழ்த்துக்கள்.நன்றி வணக்கம்.
பதிலளிநீக்குதலைவன் என்றதும்
பதிலளிநீக்குதுரோகமும் செல்வமும்
தொண்டன் என்றதும்
தியாகமும் ஏழ்மையும்//எடுத்த எடுப்பிலேயே தமிழத் தலைவர்களின் பித்தலாட்டத்தை அம்பலப் படுத்து கிறீர்கள் சிறந்த ஆக்காம் பாராட்டுகள் .
ஏங்க கவிஞரே.... உங்களுக்கு மகிழ்ச்சியான நினைவெல்லாம் ஞாபகம் வராதா....?
பதிலளிநீக்குஇப்படி பழைய துரோகிகளை எல்லாம் ஞாபக படுத்தி விட்டீர்களே....
ஆனாலும் நன்றாக இருந்தது. வாழ்த்துக்கள்.
இயல்புகளை
பதிலளிநீக்குஇமயம் போல
உயர்த்தி பார்க்கிறது உங்கள் எழுத்துக்கள்
எளிமையில் மின்னுது வார்த்தை கோர்வை .......அருமை