வெள்ளி, பிப்ரவரி 11, 2011

என்று மலரும் ?







                  
          
    
             (காவடிச்சிந்து)

ஊரைச் சுரண்டித் தின்னும் கூட்டம் - உடல்
  உழைப்பினில் கொள்வதென்று நாட்டம் ? - பணத்
தேரில் பவனிவந்து
  தின்று கொழுப்பவரின்
  ஆட்டம் - என்று - ஓட்டம் ?

சேற்றினிலே கால்கள் வைத்து நடப்பார் - அவர்
  தின்ன உணவுமின்றி கிடப்பார் - பிறர் 
சோற்றைத் திருடித் தின்று
   தொப்பை வளர்ப்பவர்கள் 
    நடிப்பார் - தின்று - வெடிப்பார்

பொத்தல் குடிசைக்குள்ளே வாழும் - ஏழைப்
  பிள்ளை குடிக்க இல்லை கூழும்- அவர்
நித்தம் வறுமையினில் 
   நீந்தும் நிலைமைஎன்று 
   வீழும் - இன்பம் - சூழும் ?

.பத்துமாடிக் கட்டிடத்தில் சிலரும் - வீதிப் 
 பாலம் அதனடியில் பலரும் - இன்னும் 
எத்தனை நாள் வாழ்ந்திருப்பார்  
  இங்குஒரு மாற்றமென்று
  மலரும் - சுகம் - வளரும் ? 
                                      
                                            -சிவகுமாரன்


இந்தக் கவிதையை அய்யா சூரி (சுப்பு ரத்தினம் ) அவர்கள் இனிமையாக பாடி என் கவிதைக்கு ஒரு மிகப் பெரிய அங்கீகாரத்தைக்  கொடுத்திருக்கிறார்.
நீங்களும் கேட்டு மகிழுங்கள்.

22 கருத்துகள்:

சிவகுமாரன் சொன்னது…

1990 ஆம் ஆண்டு புதுக்கோட்டை கொத்தமங்கலத்தில் நடந்த தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற கவியரங்கத்தின் போது இடைச்செருகலாய் கவிஞர் சுநதரபாரதியால் அறிமுகப்படுத்தப்பட்டு நான் வாசித்த கவிதை.

Unknown சொன்னது…

the bad /sad part is....nothing has changed / improved even after 20 years :-(

what does this teach us? What should we learn now? Should we forget about the society and focus on our personal & family welfare (without harming others) ?????

Unknown சொன்னது…

The bad / sad part is, nothing has changed /improved even after 20 yrs :-(

What does this teach us? What should we learn now? Should we forget about the society and focus on our personal & family welfare (without harming others)?

சிவகுமாரன் சொன்னது…

That is what we are doing now. Dont know what to do.Is 49-O the correct solution? A big group of youth is not at all interested in politics becas of corruption. There is nobody to lead the youth and make utilise their unbound energy in a correct path.

Unknown சொன்னது…

"புரளிகட்டி பொருளைத் தட்டும் சந்தை - பச்சை
புளுகை விற்று சலுகை பெற்ற மந்தை- இதில்
போலிகளும் காலிகளும் பொம்மலாட்டம் ஆடுகிற
விந்தை - சொன்னால் - நிந்தை."

- என்ற பட்டுக்கோட்டையாரின் பாடலை நினைவுபடுத்துகிறது உங்கள் கவிதை,
யாரைய்யா நீங்கள், எங்கிருந்தீர்கள் இவ்வளவு நாளாய்?

சிவகுமாரன் சொன்னது…

என்ன சொல்வது. ? தாயின் கருவறையில் என்றா?
நன்றி நண்பரே.
மரபுக்கவிதையை விரும்பும் ரசனைக்கும் பட்டுக்கோட்டையாரோடு ஒப்பிட்டுச் சொன்னதற்கும்

ShankarG சொன்னது…

அற்புதமான கவிதை. வாழ்த்துக்கள்.

kashyapan சொன்னது…

அனுபவித்துப்பாடிய சுப்புரத்தினம் அவர்களுக்கு நன்றி உங்களுக்கும் ---காஸ்யபன் .

சமுத்ரா சொன்னது…

காவடிச் சிந்து அருமை..வாழ்த்துக்கள்..

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

வழக்கம் போல, வறுமையைப் பற்றி அருமையானதொரு பதிவு. வாழ்த்துக்கள்.

கவி அழகன் சொன்னது…

அருமை வாழ்த்துக்கள்

நிரூபன் சொன்னது…

சிவகுமாரன் கூறியது...
1990 ஆம் ஆண்டு புதுக்கோட்டை கொத்தமங்கலத்தில் நடந்த தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற கவியரங்கத்தின் போது இடைச்செருகலாய் கவிஞர் சுநதரபாரதியால் அறிமுகப்படுத்தப்பட்டு நான் வாசித்த கவிதை//


பாஸ்.. என்ன ஒரு அருமையான சந்தம். அதுவும் இச் சந்தங்களுக்குள்ளே மானிடர்களின் குண இயல்புகளை வடிவமைத்துள்ளமை இன்னும் சிறப்பு. ஐயாபின் பாட்டு கவிதைக்கு பக்க பலம்.

Pranavam Ravikumar சொன்னது…

வாழ்த்துகள்!

சென்னை பித்தன் சொன்னது…

காவடிசிந்து பாடுவதற்கு ஏற்ற ஒரு வடிவம்!அருமையான படைப்புக்கு இனிமையான இசை.
வாழ்க!

மோகன்ஜி சொன்னது…

காவடிச் சிந்து எனக்கு மிகப் பிடித்த வடிவம். அதில் எனக்கு மிகவும் பிடித்த என் தம்பியின் கவிதை.. சர்க்கரை பந்தலில் தேன் மாரி

thendralsaravanan சொன்னது…

K.S.Ramasamy அவர்கள் கூறியதைப் போல் நானும் பட்டுக்கோட்டையாரின் வரிகளை உணர்ந்தேன் தங்களிடம்!
வாழ்த்துக்கள்!

jeevagv சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
jeevagv சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
jeevagv சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
இராஜராஜேஸ்வரி சொன்னது…

பாட்டுக்கோட்டையாம் பட்டுக்கோட்டையாரின் வரிகளை உணரமுடிந்தது.

அப்பாதுரை சொன்னது…

எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் பாட்டு நினைவுக்கு வந்தது. சேற்றில் கால், பொத்தல் குடிசை வரிகள் பிரமாதம். சூரி அவர்களின் குரல்வளம் நம்ப முடியவில்லை! அருமை! (கை வீசிப் பாடுவதை ரசிக்க முடிகிறது :)

சிவகுமாரன் சொன்னது…

பழைய கவிதையை தேடி படித்ததற்கு நன்றி அப்பாஜி. எனக்கு மிகவும் பிடித்த கவிதை இது.