நதிநீர் வடிந்தபின்
நாணலைக் கொல்லும்
விதியே உனது
வினையின் - சதியால்நான்
தோற்றுத் துவண்டு
தொலைவேனோ ? கட்டறுத்த
காற்றுக்கு உண்டோ
கரை.
கரைதேடி வந்த
கடலின் அலையாய்
இரைதேடிக் கொண்டே
இருந்து - நரைகூடி
மாண்டு மடிவேனோ?
மண்ணில் தடம்பதிக்க
மீண்டும் எழுவேன்நான்
மீண்டு,
( 2000 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் - என் தந்தையின் மரணத்திற்கு பின்னொரு இருண்ட காலத்தின் நாட்குறிப்பு.)
நாணலைக் கொல்லும்
விதியே உனது
வினையின் - சதியால்நான்
தோற்றுத் துவண்டு
தொலைவேனோ ? கட்டறுத்த
காற்றுக்கு உண்டோ
கரை.
கரைதேடி வந்த
கடலின் அலையாய்
இரைதேடிக் கொண்டே
இருந்து - நரைகூடி
மாண்டு மடிவேனோ?
மண்ணில் தடம்பதிக்க
மீண்டும் எழுவேன்நான்
மீண்டு,
( 2000 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் - என் தந்தையின் மரணத்திற்கு பின்னொரு இருண்ட காலத்தின் நாட்குறிப்பு.)