காதல் வெண்பாக்கள் 18
உனக்கென்ன என்மேல்
ஒருபார்வை வீசி
எனக்கென்ன என்று
இருந்தாய்- கணக்கின்றி
நான்தானே உன்நினைவில்
நாளைக் கழிக்கின்றேன் .
வீண்தானோ எந்தன்
விதி ?
பயனிலை
பார்வையில ஒன்றுமில்லை
பாவிப் பயமக்கா
ஆர்வமில்லை உன்மீது
ஆளைவிடு - தேர்வெழுதி
பாஸாகப் பாரப்பா
வீணாய் அடிவாங்கி
பீஸாகிப் போகாதே
போ .
29 கருத்துகள்:
எக்ஸாம் நேரத்து ஸ்பெஷல் மெசேஜ் கவிதைகள்...... சூப்பர்!
செய்வினை (எழுவாய்?) பயனிலையில் எழுதியுள்ள கவிதைகள் இரண்டுமே சித்ரா சொல்லுவது போல சூப்பர் ஆக இருப்பினும், செயல்படுபொருளாக எதுவும் எழுச்சியுடன் நடக்காமல் இப்படி வழுவட்டையாகிப்போனதில் எனக்கு வருத்தமே, கவிஞரே.
[ஆனாலும் காட்டியுள்ள அந்தக்கண்களில் நல்ல எழுச்சியுள்ளதில் என் பார்வைக்கு நல்லதொரு திருப்தியே]
வாழ்த்துக்கள்.
”உனக்கென்ன என்மேல்
ஒருபார்வை வீசி
எனக்கென்ன என்று ...”
அழகான எழுத்து,
நயமான வார்த்தைகள்,
சுகமான உணர்வு
காதல் எங்கே காணோம்?
குறைந்த வரியில் நிறைந்ததொரு மனத்திருப்பியாயிருக்கு...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பதிவுலகில் சமூகபதிவாளனாக என்னை முத்திரை குத்திய முக்கிய சாதனை
இனி வரும் பொழுதுகளில் தங்கள் தளத்திற்கு வாரம் ஒரு தடவையே வர முடியும் என்பதை மன வருத்தத்துடன் அறியத் தருகிறேன்...
செய்வினை ரசித்தேன். பாசாகி பீசாகி பயனிலை.
செயப்பாட்டு வினை எங்கே?
அவள் பார்வை தந்த மயக்கத்தில் ’செய்வினை” வைத்தது போல் திரியும் அவனைத் திருத்த நல்ல பயனுள்ள பயனிலை!
பெண்ணெல்லாம் பரிட்சையிலே முதலிடம் தாங்க
நம்ம ...................................................................................
//"பீஸாகிப் போகாதே
போ "//
இதற்கு 'போய்யா போ' பொருத்தமான படம்தான்...
முதல் கவிதை பாலகுமாரன் எப்போதோ எழுதிய கடற்கரையில் காத்திருக்கும் காதலன் கவிதை நினைவுக்கு வந்தது.
இரண்டுமே அற்புதம் சிவா! கண்ணடி தாங்காது நமது இதயம்.!!! ;-))
செய்வினை அருமை
பயனிலை பயனில்லை என்றாகிப் போச்சேணு வருத்தமாருக்குங்க
அடடே
இதுக்கு பேர்தான்
விகட கவி.
பயனுள்ள கவிதை.
எழுவாய்!நீ பயனில்லை என்று ஆகாமல் இருந்தால் சரி.
செய்வினை - முயற்சி
பயனிலை - பாவம் !
செய்வினை- நல்ல பார்வை!
பயனிலை- நல்ல பதில்!
படமும் கவிதையும் கலக்கல்..
மனசு பீஸாகிப் போனது..
அடடே! சூப்பரா இருக்கே..
பயனிலையில் காதல் பயனில்லையா!
பாஸாகப் பாரப்பா
வீணாய் அடிவாங்கி
பீஸாகிப் போகாதே
போ //
இரு வெண்பாக்களுள் பயனில்லை/ பயனிலை என் மனதினைப் பளிச் சென்று தொட்டு விட்டது. அருமையான சந்த நடை.
”உனக்கென்ன என்மேல்
ஒருபார்வை வீசி
எனக்கென்ன என்று ...”
அழகான எழுத்து,
நயமான வார்த்தைகள்,
சுகமான உணர்வு
அருமை வாழ்த்துக்கள்
Timely message...:)
கவிஞரே...உண்மையைச் சொல்லுங்கள். இந்த கவிதை 1987-ல் நீங்கள் +2 படிக்கும்போது எழுதியதுதானே? :-)
உணர்ச்சிக்கும் அறிவுக்கும் போட்டியில் அறிவுக்கு வெற்றி ...
அவசரத்துக்கும் நிதானத்துக்கும் போட்டியில் நிதானத்திற்கு வெற்றி ....
சூப்பர்...
நன்றி சித்ரா, வை.கோ.Dr முருகானந்தன், அப்பாத்துரை, மதி.சுதா, கலாநேசன், சென்னைப்பித்தன், நாகா , ஸ்ரீராம், RVS , ராஜி, கமலேஷ், திருமதி ஸ்ரீதர், இராஜராஜேஸ்வரி, ஹேமா, தென்றல், ஸ்ரீ அகிலா, மீனாக்ஷி மேடம், நிருபன், போளூர் தயாநிதி, தமிழ்த்தோட்டம், அப்பாவி தங்கமணி, இளமுருகன், ரசிகமணி & தோழி பிரஸா,
"பார்வையில"- இந்த சீர் தளை தட்டுகிறதே
( எங்களுக்கும் வெண்பா இலக்கணம் தெரியுமாக்கும் )
மிக்க மகிழ்ச்சி ராதேஷ். கொஞ்சம் இலக்கணம் பார்ப்போமா? ( நல்லா மாட்டுனீங்க )
பார்வையிலே - என்பதில் வை என்ற நெடில் எழுத்து 2 மாத்திரைலிருந்து குறைந்து 1 மாத்திரை அளவு ஒலிக்கிறது. எனவே இது குறிலாக கருதப்படும். இதனை ஐகாரக்குறுக்கம் என்று கூறுவர்
பார்/வை/யிலே நேர்/நேர்/நிரை என்பது பார்/வயி/லே நேர்/நிரை/நேர் என்று மாறி ஒலிக்கிறது.தேமாங்கனி என்னும் கனிச்சீர் கூவிளங்காய் என்னும் காய்ச்சீர் ஆகிவிட்டது.
ஆதாரத்திற்கு பாரதியின் இந்த வெண்பாவை பாருங்கள்.
- இன்மழலைப் பைங்கிளியே எங்கள் உயிரானாள்
"நன்மையுற" வாழும் நகரெதுகொல் ?- சின்மயமே
நானென் றறிந்த நனிபெரியோர்க் கின்னமுது
தானென்ற காசித் தலம்.
- இதில் நன்மையுற என்பதில் ஐகாரக் குறுக்கம் வந்துள்ளது.
--போதுமா ராதேஷ். l
கருத்துரையிடுக