புதன், மார்ச் 09, 2011

சின்னஞ்சிறு நெருப்பு

















வாசலிலே ரோஜாச்செடி
   வைத்து நிதம் நீர் தெளிக்க
   வாசமலர் நித்தமொன்று  மலரும்- உடன்
ஊசிமுனை முள்ளுமொன்று வளரும்.

நட்டநடு ராத்திரியை
   பட்டப்பக லாக்கிவிட
   நாள்முழுதும் மின்விளக்கு எரியும். - அதைத்
தொட்டு விட்டால் பின்விளைவு புரியும்.

ஒற்றைத்திரி நெய்விளக்கில்
   ஊற்றிவைத்த எண்ணெயொடு  
   ஒளிருது சின்னஞ்சிறு நெருப்பு - கூறை
பற்றிக் கொண்டால் யாரதற்கு பொறுப்பு.?

செல்லும் வழி கல்லு முள்ளு
   செய்வதெல்லாம் தில்லுமுல்லு 
   சேரச் சொல்லிக் கூப்பிடுதோர் கூட்டம் - அதைத்         
தள்ளிவிட்டு நில்லாமல் என் ஓட்டம் .

என்னுடைய கன்னித் தமிழ்
   ஈசன்தந்த சங்கத் தமிழ்
   ஈசனுக்கும் ஏழைக்குமென் பாட்டு - வேறு
என்ன சொல்ல , இதுதானென் ரூட்டு
.  

                                            


                                              

                                          
                                                                   -சிவகுமாரன் 

                                                    

      

39 கருத்துகள்:

எல் கே சொன்னது…

//ஒற்றைத்திரி நெய்விளக்கில்
ஊற்றிவைத்த எண்ணெயொடு //

முரணாக இருக்கே ? எண்ணைக்கு பதில் நெய்யோடு என்று இருக்க வேண்டுமோ ???

எல் கே சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Yaathoramani.blogspot.com சொன்னது…

அருமை.மீண்டும் மீண்டும் வாசித்து ரசித்தேன்
சிந்துகவி சிவராமன் என உங்களுக்கு
பட்டம் தாராளமாகத் தரலாம்
நல்ல படைப்பு
தொடர வாழ்த்துக்கள்

Chitra சொன்னது…

வாசலிலே ரோஜாச்செடி
வைத்து நிதம் நீர் தெளிக்க
வாசமலர் நித்தமொன்று மலரும்- உடன்
ஊசிமுனை முள்ளுமொன்று வளரும்.

.....வாழ்க்கையில் அமைந்து இருக்கும் முரண்களை சொல்லி இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். நல்லா வந்து இருக்கிறது.

சிவகுமாரன் சொன்னது…

நெய் என்பது பொதுப் பெயர் எல்.கே.
பசுவின் நெய்யைத்தான் நாம் நெய் என்கிறோம்.
எள் + நெய் எண்ணெய் ஆயிற்று. அதை நல்லெண்ணெய் என்கிறோம்.
தேங்காய் +எள்+நெய், கடலை+எள்+நெய்
முரணாக இல்லையா ?

-- தாள நயத்திற்காக வந்து விழுந்த வார்த்தைகள் இவை.
இருந்துவிட்டு போகட்டுமே எல்.கே. தங்கள் அனுமதியுடன் .

சிவகுமாரன் சொன்னது…

தங்கள் பட்டத்திற்கு நன்றி ரமணி சார்.
( ஆனாலும் இந்த பட்டமெல்லாம் எனக்கு அதிகம் தான் )

சிவகுமாரன் சொன்னது…

நன்றி சித்ரா மேடம்.
வாழ்க்கை மட்டுமல்ல.
மனிதர்களே முரண்பாட்டு மூட்டைகள் தான். ( எங்கோ படித்த ஞாபகம் ) .
எல்லாவற்றையும் அதனதன் இயல்புகளோடு ஏற்றுக்கொள்ளப் பழகிவிட்டால் பிரச்சினைகளின் தாக்கம் குறையும் என்பது என் கருத்து.

rajamelaiyur சொன்னது…

Super . . . Keep it up my friend. . . By www.kingraja.co.nr

Sriakila சொன்னது…

Good one!!

Muruganandan M.K. சொன்னது…

"..செல்லும் வழி கல்லு முள்ளு
செய்வதெல்லாம் தில்லுமுல்லு
சேரச் சொல்லிக் கூப்பிடுதோர் கூட்டம்.."
அருமையான கவிதை.

எல் கே சொன்னது…

எதோ என் சிறிய அறிவுக்கு எட்டியதை சொன்னேன் கவியே .. இருக்கட்டும்

நிரூபன் சொன்னது…

வணக்கம் சகோதரம், சந்தம் கொண்டு சிந்து பாடும் கவிதை அருமை. சின்னஞ் சிறு நெருப்பின் நன்மைகளையும் தீமைகளையும் கலந்து கவிதை தாளலயத்துடன் எம்மை இலயித்து விட்டது.

ஹேமா சொன்னது…

எதுகை மோனையோடு தாளக்கட்டும் இணைந்து நல்லாயிருக்கு இசைத்தேன் ரசித்தேன் !

ம.தி.சுதா சொன்னது…

/////செல்லும் வழி கல்லு முள்ளு
செய்வதெல்லாம் தில்லுமுல்லு////

ஆமாங்க என் உணர்வை சொன்னது போல இருக்கு....

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
உலகப் புகழ் பெற்ற தமிழர் கோயிலும் அழிவடையும் தமிழர் சின்னமும்..

RVS சொன்னது…

கண்ணோடு கண் கலக்கும் காதல் நெருப்பு பற்றியும் சொன்னால் என்னைப் போல இளவட்டங்கள் சந்தோஷப்படுவோம்.
கவிதை அபாரம்!! ;-))

geetha santhanam சொன்னது…

அருமை. தமிழைக் பதவி மற்றும் உதவிக்காக விற்று பிழைக்கும் கூட்டத்தில் சேராமல் நீங்கள் மாறுபட்டு நிற்பது மகிழ்ச்சி.

சுந்தரா சொன்னது…

இயல்பான சந்தத்தோடு அழகான கவிதை சிவகுமாரன்!

//ஒற்றைத்திரி நெய்விளக்கில்
ஊற்றிவைத்த எண்ணெயொடு
ஒளிருது சின்னஞ்சிறு நெருப்பு - கூறை
பற்றிக் கொண்டால் யாரதற்கு பொறுப்பு.?//

ஒளிருது என்பதற்குபதில் ஏற்றிவைத்த என்றுவந்தால் இன்னும் அழகாக இருக்குமோ?

சமுத்ரா சொன்னது…

என்ன சொல்ல வர்றீங்க?

Nagasubramanian சொன்னது…

செம ரூட்டு தான் ....

கார்த்திக் பாலசுப்ரமணியன் சொன்னது…

Very nice !

thendralsaravanan சொன்னது…

அழகான பாட்டு!
போட்டுக்கலாம் மெட்டு!
கவிதை மழைக் கொட்டு!
கவிச்சித்தனுக்கு ஒரு ஷொட்டு!

Unknown சொன்னது…

miga arumai..nandraga rasithu ezhudhpatta kavidhai..following u.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

ஒளிருது சின்னஞ்சிறு நெருப்பு - கூறை
பற்றிக் கொண்டால் யாரதற்கு பொறுப்பு.?
Interesting.

G.M Balasubramaniam சொன்னது…

கன்னித் தமிழுக்கு, ஈசன் தந்த சங்கத் தமிழுக்கு “ரூட்டு” தேவையா குமரா.?

மோகன்ஜி சொன்னது…

நல்லதோர் கவிதைக்கு நன்றி!

ஈசனுக்கும் ஏழைக்குமென் பாட்டு - வேறு
என்ன சொல்ல , இதுதானென் ரூட்டு//

ஈசனுக்கும் ஏழைக்குமென் பாட்டு - வேறு
என்ன சொல்ல,அவரோடேயென் கூட்டு.

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

கவிதையின் தலைப்புத்தான் சின்னஞ்சிறு நெருப்பு. அதன் வெளிச்சமோ (பொருளோ) மின்னலெனப் பளீரென்று.

வாழ்த்துக்கள், கவிஞரே.

சிவகுமாரன் சொன்னது…

நன்றி ராஜா
நன்றி ஸ்ரீ அகிலா
நன்றி டாக்டர்
நன்றி நிரூபன்
நன்றி ஹேமா
நன்றி மதி சுதா
நன்றி RVS
நன்றி கீதா மேடம்

சிவகுமாரன் சொன்னது…

சுந்தரா கூறியது

\\இயல்பான சந்தத்தோடு அழகான கவிதை சிவகுமாரன்!

ஒளிருது என்பதற்குபதில் ஏற்றிவைத்த என்றுவந்தால் இன்னும் அழகாக இருக்குமோ? //

நன்றி சுந்தரா .
ஏற்றிவைத்த - ஓசைநயத்துடன் நன்றாக உள்ளது. நன்றி.
ஆனால் நான் மோனைத்தொடைக்காக ஒளிருது என்று எழுதி இருந்தேன்.

சிவகுமாரன் சொன்னது…

தென்றல் கூறியது
\\அழகான பாட்டு!
போட்டுக்கலாம் மெட்டு!
கவிதை மழைக் கொட்டு!
கவிச்சித்தனுக்கு ஒரு ஷொட்டு!///

உள்ளத்தில் பட்டு
உணர்வைத் தொட்டு
சென்றது
தென்றலின் ஷொட்டு

சிவகுமாரன் சொன்னது…

நன்றி சவிதா ரமேஷ்.
நன்றி இராஜராஜேஸ்வரி மேடம்
நன்றி வை.கோ சார்

சிவகுமாரன் சொன்னது…

GMB சார் சொன்னது
\\கன்னித் தமிழுக்கு, ஈசன் தந்த சங்கத் தமிழுக்கு “ரூட்டு” தேவையா குமரா.?//

சுட்டிக் காட்டியதற்கு நன்றி.
தனித்தமிழில் தான் எழுத வேண்டும் என்று நான் சபதமெல்லாம் எடுக்கவில்லை. எழுதும் போது வந்து விழும் வார்த்தைத்யை வலிந்து மாற்ற விரும்பவில்லை. அவ்வளவுதான்
இந்த ரூட்டுத் தமிழும்
ஈசன் என் பாத்திரத்தில்
போட்ட தமிழ் தான் .

சிவகுமாரன் சொன்னது…

மோகன்ஜி சொன்னது
\\\நல்லதோர் கவிதைக்கு நன்றி!

ஈசனுக்கும் ஏழைக்குமென் பாட்டு - வேறு
என்ன சொல்ல , இதுதானென் ரூட்டு//

ஈசனுக்கும் ஏழைக்குமென் பாட்டு - வேறு
என்ன சொல்ல,அவரோடேயென் கூட்டு.///

நன்றிஅண்ணா .
தம்பி பாட்டில் ஒரு பிழை என்றதும் ஓடோடி வந்து விட்டீர்கள்.
GMB சார் இப்போ ஓகேயா ?

சிவகுமாரன் சொன்னது…

நன்றி நாகா
நன்றி கனாக்காதாலன்

சிவகுமாரன் சொன்னது…

சமுத்ரா சொன்னது
\\என்ன சொல்ல வர்றீங்க?//

இப்படியெல்லாம் கேள்வி கேக்கப்படாது ...ஆமா .
( உண்மையில எனக்கும் புரியலங்க )

ரிஷபன் சொன்னது…

உங்க ரூட்டு நல்ல ரூட்டு தான்.. தொடர்ந்து இசை கேட்க நாங்களும் பின்னால தானே வரோம்..

சிவகுமாரன் சொன்னது…

வருக வருக ரிஷபன் சார்.
ரொம்ப சந்தோசமாய் இருக்கிறது

ஸ்ரீராம். சொன்னது…

சுனாமியை விடுங்கள்....அதை விட கொடுமை தொடரும் அபாயம் அணுக கதிர் வீச்சு. அணு சக்தியை வைத்து மிரட்டும் அனைத்து நாடுகளுக்கும் 'நீங்கள் யாரும் என்னை மீறி அல்ல' என்று இயற்கை கொடுத்திருக்கும் பாடம். எங்களை மீறி என்ன நடந்து விடும் என்ற மனித ஆணவத்தின் மீது விழுந்த அடி.

கிருஷ்ணப்ரியா சொன்னது…

சும்மா அசத்தி விட்டீர்கள் சிவா,,, என்ன அழகான பாட்டு.....

சிவகுமாரன் சொன்னது…

உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி கிருஷ்ணப்பிரியா