வெள்ளி, ஏப்ரல் 01, 2011

தேர்தல் வெண்பாக்கள்

                V.O.

எல்லாம் இலவசமாய் 
   இங்கே கிடைப்பதினால்
பொல்லாத வேலைக்குப் 
   போவானேன் ?- சொல்லாமல் 
விட்டுவிடப் போறேன்நான் 
   வேலையை ! வீட்டுக்கு 
பொட்டிகட்டப் போறேண்டா 
        டோய்.

            மனசு 
    
மிக்சி கிரைண்டர் 
   இலவசம் என்றமிஸ்டர்
எக்ஸுக்குத்* தானப்பா 
   என்ஓட்டு - செக்சியாய் 
வேற எதுனாச்சும் 
   வீடுதேடி வந்தாக்க
மாறலாம் ஒய்க்கு**
     மனசு 

(* X க்கு , ** Yக்கு )

                                       -சிவகுமாரன் 

25 கருத்துகள்:

ம.தி.சுதா சொன்னது…

உண்மையில் இலவசம் தான் பலரை பழுதாக்ககிறது அருமையாக வடித்தள்ளிர்கள் சகோ...


அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
ஈழத் தமிழனுக்கு கருணாநிதியில் பிடித்த ஒரே சம்பவம்

இனி வரும் பொழுதுகளில் தங்கள் தளத்திற்கு வாரம் ஒரு தடவையே வர முடியும் என்பதை மன வருத்தத்துடன் அறியத் தருகிறேன்...

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

அந்தத்தொந்திப்பொம்மை நல்ல அழகாக இருக்கு, சார், தங்கள் கவிதையைப்போலவே பளிச்சுனு.

//செக்ஸியாய்//

ஒரு பயலும் இதுவரை அறிவிக்கக்காணோமே?

பாராட்டுக்கள்!

அப்பாதுரை சொன்னது…

அதானே!

ஸ்ரீராம். சொன்னது…

இது வேற புது யோசனையா....

நிரூபன் சொன்னது…

எல்லாம் இலவசமாய்
இங்கே கிடைப்பதினால்
பொல்லாத வேலைக்குப்
போவானேன் ?//

அருமை அருமை.. பண்டைய இலக்கிய கடின நடையினை தவிர்த்து, இக் கால இளைஞர்களின் மனதினை இலகுவில் தொடும் வகையில் இவ் வெண்பாவினை வடித்துள்ளீர்கள்.

நிரூபன் சொன்னது…

மிக்சி கிரைண்டர்
இலவசம் என்றமிஸ்டர்
எக்ஸுக்குத்* தானப்பா
என்ஓட்டு - செக்சியாய்
வேற எதுனாச்சும்
வீடுதேடி வந்தாக்க
மாறலாம் ஒய்க்கு**
மனசு//

நக்கலும், நையாண்டியுமாய், ஒரு சிந்து கவிப் பாணியில் இவ் வெண்பாக்களைத் தந்துள்ளீர்கள். அருமையான நகையாடல்கள்.

ஆச்சி ஸ்ரீதர் சொன்னது…

கம்பெனிக்கு கட்டுபடியாகுற ஐடியாவா சொலுங்க.

பத்மநாபன் சொன்னது…

போட்டி போட்டு இலவசமாய் வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறார்கள் ... கவிதையில் நறுக்கென்று கிள்ளிவிட்டீர்கள் x ம் Y ம் ஓட்டுக்காக எந்த கோரிக்கையும் பரிசீலிப்பார்கள் ....

Nagasubramanian சொன்னது…

அருமை!
பிச்சைக்காரன் ஆகிக்கொண்டிருக்கிறான் தமிழன் ....

சென்னை பித்தன் சொன்னது…

எதிலிருந்தெல்லாம் உங்களுக்குக் கவிதை பிறக்கிறது!
பிரமாதம்!

thendralsaravanan சொன்னது…

V.O வை விட (V)வெட்டி (O)ஆபிசரா இருக்கலானு சொல்றீங்க!
இலவசம் கொடுத்து கேட்கிற ஓட்டுக்கு நச் ன்னு ஒரு கவிதை!

வெங்கட் நாகராஜ் சொன்னது…

இரண்டுமே நறுக்கென்று இருக்கிறது நண்பரே!

G.M Balasubramaniam சொன்னது…

இலவசங்கள் ஏற்படுத்தும் தாக்கங்கள்தான் எத்தனை விதம். எக்ஸ் வை எல்லாமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். No choice.

Unknown சொன்னது…

"Mr".X க்குதானா உங்கள் ஓட்டு? நீங்கள் எப்போது கருணாநிதி கட்சிக்கு மாறினீர்கள்?

வேறு ஏதாவது செக்ஸியாக வந்ததா? மனசு மாறியதா?

போளூர் தயாநிதி சொன்னது…

எல்லாம் இலவசமாய்
இங்கே கிடைப்பதினால்
பொல்லாத வேலைக்குப்
போவானேன் ?//
நறுக்கென்று இருக்கிறது நண்பரே

Pranavam Ravikumar சொன்னது…

வாழ்த்துகள்!

RVS சொன்னது…

X, Y ன்னு சொல்லி இது ஒரு இரு பரிமாணத் தேர்தல் அப்படின்னு சொல்றீங்க. நாம முப்பரிமாணத்துல பார்த்து ஒட்டு போடணும். எக்ஸ், ஓய்ன்னு கவிதை செக்சியா இருக்கு.. ;-))

மோகன்ஜி சொன்னது…

எல்லோரும் யாருக்கேனும் ஓட்டு போடட்டும் என் ஓட்டு அன்புத் தம்பி! தங்கக் கம்பி சிவாவுக்கே

Unknown சொன்னது…

தேர்தல் வெண்பா

நல்லோர் துணையிருக்கு நாக்கினிலே மெய்யிருக்கு

‘தில்’லான நெஞ்சுடைய தொண்டர்படை இங்கிருக்கு

குள்ளநரிக் கூட்டங்களை கூண்டோடு வெல்வோமெனச்

சொல்லி அடித்திடுவோம் நாம் !!

Matangi Mawley சொன்னது…

charity-la jaasthi gavanam seluththiya raja oor senaikalellaam somberikalaanaarkalaam! ithuvum puraana katha thaan...

inga-- ellaa raajaavume appadi thaane... !

mad town-la sane fellow is the actual mad one!

சுந்தர்ஜி ப்ரகாஷ் சொன்னது…

விடாமல் சுளுக்கெடுப்பதால் சுளுக்குக் கவி என்ற பட்டத்தைப் பெருமையுடன் அளிக்கிறேன் சிவா.

வேலை கொஞ்சம் அதிகம்.விடுபட்டவைகளை விரைவில் படித்து விடுவேன்.

என் மேல் கோபமில்லையே?

Yaathoramani.blogspot.com சொன்னது…

அருமை
தங்கள் வெண்பாக்கள்
சுஜாதாவின் வெண்பாக்களை
நினைவு படுத்திப்போகிறது
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

தக்குடு சொன்னது…

புலவரே! உங்களோட வலைபூவுக்கு தக்குடுவோட பதிவில் ஒரு குட்டியூண்டு அறிமுகம் வந்துருக்கே!!!...:)

சிவகுமாரன் சொன்னது…

நன்றி மதி.சுதா , வை,கோ. சித்ரா, அப்பாத்துரை, ஸ்ரீராம், நிரூபன், திருமது ஸ்ரீதர், ரசிகமணி, நாகா, சென்னைப்பித்தன், தென்றல், வெங்கட் நாகராஜ், GMB இளமுருகன் , பிரணவ், போளூர் தயாநிதி, RVS மாதங்கி, சுந்தர்ஜி, ரமணி & தக்குடு,
அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி

ஆனந்தி.. சொன்னது…

சூப்பர் சிவா...எனக்கு ரெண்டாவது ஹைக்கூ ரொம்பவே பிடிச்சது...