புதன், நவம்பர் 23, 2011

ஒரு கவிஞனின் நாட்குறிப்பு 3

நதிநீர் வடிந்தபின்
  நாணலைக் கொல்லும்
விதியே உனது
  வினையின் - சதியால்நான்
தோற்றுத் துவண்டு
  தொலைவேனோ ? கட்டறுத்த
காற்றுக்கு உண்டோ
  கரை.


கரைதேடி வந்த
  கடலின் அலையாய்
இரைதேடிக் கொண்டே
  இருந்து - நரைகூடி
மாண்டு மடிவேனோ?
  மண்ணில் தடம்பதிக்க
மீண்டும் எழுவேன்நான்  
  மீண்டு,


2000 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் - என் தந்தையின் மரணத்திற்கு பின்னொரு இருண்ட காலத்தின் நாட்குறிப்பு.)





21 கருத்துகள்:

RVS சொன்னது…

சூப்பர்ப் சிவா!

காற்றுக்கு உண்டோ கரை ந்னு முடிச்சுட்டு அந்தாதி மாதிரி கரைதேடின்னு ஆரம்பிச்சது ரொம்ப நல்லாருக்கு. :-)

நிலாமகள் சொன்னது…

நான்கு க‌ண்ணிக‌ளுக்குள் நாலாயிர‌ம் விஷ‌ய‌ங்க‌ளை ப‌துக்க‌ முடிகிற‌து சிவா உங்க‌ளால்! 'மீண்டும் எழுவேன் நான் மீண்டு' எனும் முத்தாய்ப்பு இழ‌ப்பின் த‌ள‌ர்வை தூக்கி நிறுத்தும் துணிவு மீண்ட‌ இட‌ம்.

ஸ்ரீராம். சொன்னது…

கவிதையில் தனக்குத் தானே மீண்டு(ம்) எழ நம்பிக்கை மற்றும் ஆறுதல் வரிகள். படிக்கும் மற்றவர்களுக்கு நம்பிக்கை வரிகள். அருமை சிவகுமார்.

ஆச்சி ஸ்ரீதர் சொன்னது…

மனம் கணத்தும் கடைசி வரியில் ஆறுதல் தருகிறது.காலன் பரித்தது நமக்கு மேலும் வாழ்வை கற்றுத்தருகிறது.காலமே அனைத்தும் செய்கிறது.

G.M Balasubramaniam சொன்னது…

தந்தை இழந்த துயர் தந்த இருளிலிருந்து
மீள வேண்டும் என்னும் உறுதி உங்கள் நாட்குறிப்பில் தெரிகிறது. நானே இற்ந்து மீண்ட கதையைப் பதிவிட்டிருந்தேன். நீங்கள் படிக்கவில்லை என்று எண்ணுகிறேன். எனக்கு உறுதுணையாய் இருந்த என் மனைவிக்கு ஒரு பாமாலை எழுதியிருந்தேன்.(அந்தாதி போல.)நீங்கள் படித்து கருத்து தெரிவித்தால் உற்சாகமாயிருக்கும்.பாவைக்கு ஒரு பாமாலை என்ற தலைப்பு.

அப்பாதுரை சொன்னது…

சங்கடம் செய்யும் வரிகள்..
துன்பத்தை எரிக்கும் தமிழ் இருக்கிறதே உங்களிடம், எதற்குக் கவலை?

சுந்தர்ஜி ப்ரகாஷ் சொன்னது…

தந்தையின் இழப்பைச் சரிக்கட்ட இறைவனின் கருணையும் தமிழின் அரவ
ணைப்புமே துணையாய் இருந்திருக்கமுடியும் சிவா. காலம் கூட்டிச் செல்லும் பாதையில் உங்கள் தந்தையின் நிழல் எப்போதும் பின் தொடரும்.அந்தாதியில் இழப்பின் வலியைத் தாண்டிய உங்களின் வலிமை தெரிந்தது.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

கட்டறுத்த
காற்றுக்கு உண்டோ
கரை.

நம்பிக்கை வரிகள். அருமை

சென்னை பித்தன் சொன்னது…

எந்த சோகத்திலிருந்தும் மீண்டு எழுவதுதானே வாழ்க்கை? நன்று.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

ரொம்ப நல்லா இருக்கு.....

கீதமஞ்சரி சொன்னது…

தளர்ந்திருக்கும் மனத்தைத் தூக்கி நிறுத்தும் வலிமை மிக்க வரிகள். சோர்ந்திருக்கும் எவர் படித்தாலும் வாழ்வதற்கான பிடிப்பை வழங்கும் அநாயாச வரிகள். அற்புதம் சிவகுமாரன்.

SURYAJEEVA சொன்னது…

மீண்டும் எழுவது தான் போராளி

kashyapan சொன்னது…

சிவகுமரா! பேரன் வடிவில் உலாவருவது அவர்தானே!அவன் முகச்சாயலில்,பேச்சில்,நடையில் பாவனையில் அவரைத்தானே பார்க்கிறீர்கள் .வாழ்த்துக்களுடன்---காஸ்யபன்

மாலதி சொன்னது…

உள்ளம் கவர்ந்த சிறப்பான வரிகள் உளபூர்வ பாரட்டுகள் தொடர்க ...

Yaathoramani.blogspot.com சொன்னது…

என்னுள்ளும் அந்த இருண்ட நாளின் நினைவுகளை
ஞாபகப் படுத்திப் போகிறது இந்தப் பதிவு
கூடவே நம்பிக்கையையும்....
மனம் கவர்ந்த அருமையான பதிவு

ம.தி.சுதா சொன்னது…

இருண்ட காலத்தில் புனைந்தாலும் மனதை வெளிச்சமிட்டிருக்கிறதே...

அருமை...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
கடவுள்களை தொலைத்து விட்டோம்

r.v.saravanan சொன்னது…

வரிகள் நல்லா இருக்கு

ஜீவி சொன்னது…

முதல் கவிதையில் ஒரு வரியுடன் அடுத்து வரும் வரியையும் கோர்த்துப் பார்த்து, 'கட்டறுத்த காற்றுக்கு உண்டோ கரை?' என்று பீடுடன் விடையளிக்கும் பாங்கும்,

இரண்டாம் கவிதையில், 'மீண்டும் எழுவேன், நான் மீண்டு' என்று பிரகடனம் செய்கையில், அந்த 'மீண்டு' ரொம்ப அர்த்தத்துடன் விரல் நீட்டி எச்சரிக்கிறது!

கவிதையின் எழுச்சி ஞாயிறே!
கவிஞர் ஏறே! வாழுத்துக்கள்.

தினேஷ்குமார் சொன்னது…

ஆழ்ந்த அர்த்தமுள்ள வரிகள்....

ராதேஷ் சொன்னது…

இழப்பின் வலியைக் கூட எமக்கு கவிதையாய் தந்ததோடு , இறுதி வரிகளில் உத்வேகத்தை ஊட்டி இருக்கிறீர்கள். அருமை நண்பா

ரிஷபன் சொன்னது…

'மீண்டும் எழுவேன் நான் மீண்டு'

You will. You can.