என்னைக் குருடாக்கி ஈர்க்கும் இருவிழிகள்!
மின்னல் தெறித்தாற்போல் முத்துப்பல்!-கன்னத்தில்
தப்பிப் பிழைக்கத் தகையின்றிச் செய்தென்னைக்
குப்புறத் தள்ளும் குழி.
காற்றில் பறக்கும் கருங்கூந்தல்! செங்கரும்புச்
சாற்றாய் இனிக்கும் செவ்விதழ்"கள்" - மாற்றுக்
குறையாத பொன்மேனி கொண்டென்னைத் தாக்கி
சிறையிட்டாள் மெல்லச் சிரித்து.
-சிவகுமாரன்
12 கருத்துகள்:
அருமைஅருமை அபாயமும் அபயமும் கொடுத்த
நீங்கள் இதிலிருந்து தப்பிக்க ஒரு உபாயமும் சொல்லி இருக்கலாமோ ?
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
ம்ம்ம் ...
அருமையான வெண்பாக்கள் சார்
அழகு
இங்கே காதல் இரசம் வெண்பாக்களில் வழிகிறது கவிஞரே!
அருமைங்க!
காதல் முட்டி வழியுது வெண்பாவில்.கன்னக்குழியும்,பறக்கும் நெற்றிமுடியும் போதுமே கவியெழுதக் கோல் எடுத்துக் கொடுக்குமே !
வெண்பாவில் காதல். மிக நன்று.
சிறையிட்டது அவர்கள் மட்டுமா?பரஸ்பரம் நடப்பதுதானே?
சிலேடையும் நன்று
நதியின் சுழலாய், கன்னக்குழி ஆன்மாவை உள்ளே செருகி இழுக்கிறது கவிதையில்
காதல் வெண்பாவை கனித்தமிழில் வடித்து ரசித்துள்ளீர்கள்..அழகு...
அது என்ன சிவா, என்னை நினைவு இருக்கிறதா என்று ஒரு வினா வைத்துவிட்டு வந்துள்ளீர்கள். எப்படி என் வலை உறவுகளை மறக்க இயலும். மனம் ஏனோ சில மாதங்களாகச் சரியாக இல்லை. வலைப்பூ வசம் வர முடியவில்லை என்று சொல்ல மாட்டேன். ஏனோ எதுவும் பிடிக்க வில்லை. இயங்காமல் இருக்கிறேன் என்பதே உண்மை. மன்னிக்கவும். ஆனால் உங்கள் அன்பை மறக்க இயலுமா?
அருமை [இந்த விசயமெல்லாம் அண்ணிக்குத் தெரியுமா? :-) ]
வந்து விட்டேன் தம்பி! நல்ல காலம்,கொஞ்சம் அசந்திருந்தால் அந்தக் கன்னக் குழியில் அன்றோ விழுந்திருப்பேன்?
கருத்துரையிடுக