என்னிதய நன்றிகளை எப்படி நானுரைப்பேன்?
கன்னித் தமிழ்க்கவியைக் காதலித்து- தன்னிதயக்
கூட்டில் குடிவைத்துக் கொண்டாடும் அன்பருக்கென்
பாட்டைப் படைத்தேன் பணிந்து.
கன்னல் கவிஞர் களத்தில் பலரிருக்க
என்னதான் கண்டாரோ என்னிடத்தில் - சின்ன
மடுவை மலையாய் மதித்துப் பரிசை
நடுவர் அளித்தார் நயந்து.
-சிவகுமாரன்
குறிப்பு : ரூபன்& யாழ் பாவாணன் நடத்திய கவிதைப் போட்டியில் எனது கவிதை இரண்டாம் பரிசு பெற்றுள்ளது.
41 கருத்துகள்:
வாழ்த்துக்கள்...
நன்றி D.D சார்
வணக்கம்
கவிதைப்போட்டியில் வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள் தங்களின் விபரங்களை அனுப்பிவைக்குமாறு தயவாக வேண்டிக்கொள்கிறேன். மேலும் விபரம் பார்வையிட இதோ முகவரி
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: ரூபன்& யாழ்பாவாணன் இணைந்து நடத்திய உலகம் தழுவிய ...: ரூபன்& யாழ்பாவாணன் இணைந்து நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டியின் முடிவுகள்-2014 வணக்கம் வலையுலக உறவுகளே தீபாவளி...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க நன்றி ரூபன்
தேடிவரும் வெற்றியுமை! தித்திக்கும் பா கண்டே
ஓடிவரும் ஒன்றலவா என்றென்றும்- நாடிவர,
நற்றமிழின் சொற்களவை நயம்படவே இக்கவிதை
பெற்றதைய நன்றாம் பரிசு
வரகவிநீர் பாடும் வரமுமது போட்டிச்
சிரங்கவிய உன்கவிதை காணும்! - தரும்பரிசு
ஒன்றின்றே லென்னவும் உச்சி முகர்ந்திருப்பாள்
நன்றென்றே நல்ல தமிழ்!
அதிகாலையே கண்டேன் அண்ணா!
மலைகள் மோதுமிடத்தில் நான் என் மண்டையைக் காப்பாற்றிக் கொண்டேன்!
தலை தப்பியது!
முடிவு கண்டதும் பெருமகிழ்ச்சிதான்.
சகோதரியாரின் பெயரும் தங்கள் பெயரும் ஒருமித்துக் காணும்போது மகிழ்ச்சி இரட்டிப்பாயிற்று.
தொடருங்கள் அண்ணா!
நன்றி.
த ம 1
வாழ்க!
வாழ்த்துகள்
வெண்பாஅந் தாதி வெகுஅருமை, உம்பெயரில்
கண்பாவக் கண்டேன் களி!இளைய -நண்பா,நீ
காட்டும் வரிகளுக்குக் காலம் இசையமைக்கும்
பாட்டும் தருமே பரிசு.
வணக்கம் சகோதரரே!
அருமையான வெண்பாவில் ஆழ்ந்த பொருளாற்
தருகிறீரே தங்கத் தமிழ்!
என் இனிய வாழ்த்துக்கள் சகோதரரே!
மனமார்ந்த வாழ்த்துகள்!
வாழ்த்துக்கள்
வாழ்த்துகள் நண்பரே!
பரிசில் விரைவில் அனுப்பிவைக்கப்படும்.
மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே
வெற்றி தொடரட்டும்
தம 4
யாரங்கே.? எப்படி எங்கள் சிவகுமாரனுக்கு இரண்டாம் பரிசு என்று முடிவாகியது.? வாழ்த்துக்கள்
முதலாம் இடத்திலே மூழ்கிடுவீர் என்றே
இதமாய் மனத்தினில் எண்ண.. கவிஞரே
இக்கால பாபுனைய இன்கவிதை போனதோ
நோக்கும் இரண்டாம் இடம்!!
வாழ்த்துக்கள் கவிஞரே.
வாழ்த்துகள். கவிதைப் போட்டியில் பரிசு உங்களுக்குக் கிடைக்காவிடில்தான் ஆச்சரியப்படவேண்டும்.
நன்றி அய்யா. .
ஆகா விஜு . நீங்கள் எல்லாம் நடுவர் குழுவில் இருக்க வேண்டியவர். ( அப்பாடா... அடுத்த போட்டியில் இருந்தும் வெளியில் தள்ளியாச்சு).
உங்கள் பின்னூட்டம் பார்த்துத் தான் முடிவு அறிந்து கொண்டேன்.
நன்றி விஜு
நன்றி அப்பாஜி.(வேலைப்பளு அதிகம் என்று நினைக்கிறேன்.)
நன்றி சகோதரி
நன்றி அய்யா. உண்மையில் பரிசை எதிர்பார்த்து எழுதவில்லை. அந்தப் படம் என்னை எழுதத் தூண்டியது. நன்றி
தங்கைத்(??!!) தமிழுக்கும் வாழ்த்துக்கள்.
நன்றி சகோதரி
நன்றி கவிநயா
நன்றி அய்யா
மிக்க நன்றி அய்யா.
நன்றி அய்யா.
அய்யா. தங்கள் அன்பில் நெகிழ்ந்து போகிறேன். தமிழாய்ந்த ஒருவருக்குத் தான் முதல் பரிசு கிடைத்திருக்கிறது. நன்றி அய்யா
முதல் பரிசு முத்தமிழுக்குத் தான் சகோதரி.
தங்கள் நம்பிக்கைக்கு நன்றி ஸ்ரீராம் சார்.
“யாராவது தெரிந்தால சொல்லுங்கள்“
http://oomaikkanavugal.blogspot.com/2014/11/blog-post_16.html
என்னும் பதிவின் இறுதியில் மணவையார் கேட்டதற்குப் புதிரொன்றைப் போட்டுப் போயிருக்கிறேன்.
விடைகாட்ட வரவேண்டும்.
நன்றி
வணக்கம்!
சீா்கவிப் போட்டியில் போ்புகழ் பெற்றொளிரும்
கூா்கவி வாணா! குளிர்மனத்தா! - போர்மறவா!
எங்கள் சிவனின் இனிய குமாரா!நீ
பொங்கும் தமிழோ பொழில்
கவிஞர் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு
பொங்கும் தமிழோ பொழிலென்றீர்! கூப்பினேன்கை
உங்கள் தமிழில் உவந்து.
புதிரை அவிழ்க்கும் புலமை இலையே !
சதியென்பேன்! இல்லை சரக்கு.
மிக்க மகிழ்ச்சி மேலும் பல விருதுகள் பெற வாழ்த்துக்கள் சகோ !
நன்றி சகோதரி
அன்பு சிவகுமரன்
பரிசுகளைத் தாண்டியது உங்களின் கவிதைவளம். எனினும் வாழ்த்துக்கள்.
தங்களின் வாழ்த்து அதைவிடப் பெரிய பரிசு அய்யா.
கருத்துரையிடுக