புதன், நவம்பர் 26, 2014

ஆரண்ய கண்டம்!!!



பாதுகையை வைத்துப்  பரதன் அரசாண்டான் 
போதுமய்யா அந்தப் பழங்கதைகள் - மாதுகளின் 
லஞ்ச வனவாச லாட்டரியில் கிட்டியதே 
பிஞ்ச செருப்புக்கும் பேறு.

சிவகுமாரன் 

35 கருத்துகள்:

http://bharathidasanfrance.blogspot.com/ சொன்னது…


வணக்கம்!

பிஞ்ச செருப்புக்கும் பேறென்ற வெண்பாவை
நெஞ்சம் படித்தால் நிமிர்ந்திடுமே! - அஞ்சாமல்
பொய்யும் புரட்டும் பொலிந்து புவியாண்டால்
உய்யும் வழியுண்டோ ஓது?

கவிஞர் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

http://bharathidasanfrance.blogspot.com/ சொன்னது…


தமிழ்மணம் 1

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சரி தான்...

Yaathoramani.blogspot.com சொன்னது…

அற்புதமான கவிதை
கவிதை தந்த கவிதையும்(கவிஞர் பாரதிதாசன் )
மிக மிக அற்புதம்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

நிலாமகள் சொன்னது…

நிலைகெட்ட மனிதர்கள் நிறையுலகில் வாழும்
வரையிந்த அவலங்கள் தொடர் கதையே
எரிமனசைக் குளிரூட்டும் படியாகவெகு சிலரேனும்
இருக்கின்றார் எத்துறைக்கும் உலகழியா திருக்க.

(சரிதானே சிவகுமரா? உன்நாவமிழ்தில் புளங்ககித்து
மழலைபோல் மிழற்றி விட்டேன் பாவடிவில். இலக்கணக் குறையிருப்பின் பொறுத்தருள்க. பண்படுத்துக.)

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை சொன்னது…

இத இத இதத்தான் எதிர்பார்த்தேன
ஆனால் இதுஎன்ன அம்மா கடை ரேஷனா?
ஒரே வெண்பாவில் ஓடுவிடுகிறீர்கள்?
நேரக்குறைவா எங்கள்மேல்
ஈரக்குறைவா?

G.M Balasubramaniam சொன்னது…

லஞ்ச வன வாச லாட்டரி...? புரிய வேண்டாமா சிவகுமாரா.?

Geetha சொன்னது…

உண்மைதான்..

ஸ்ரீராம். சொன்னது…

ஆம்!

இளமதி சொன்னது…

வணக்கம் சகோதரரே!

சந்தை அரசியல் சாக்கடை ஆட்சியில்
விந்தையேது? லஞ்சம் விருந்து!

அருமையான வெண்பா சகோ! வாழ்த்துக்கள்!

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அருமையான கவி
நண்பரே நன்றி

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

தம 6

ஊமைக்கனவுகள் சொன்னது…

கொஞ்சம் கவனமண்ணா! கோட்டைச் செருப்புகளை
நெஞ்சில் சுமந்தலையும் தேயத்தில் - வஞ்சத்தின்
வாய்பாடும் பாட்டிற்கு வாகாய்த் தலையசைக்கும்
நாய்வால்கள் ஆடுதலே நன்று.

அருமையான வெண்பா அண்ணா!
நீங்கள் வலைத்தளத்திற்குத் தொடர்ச்சியாய் வருவது மகிழ்ச்சியாய் இருக்கிறது.
த ம 7

தனிமரம் சொன்னது…

பிஞ்ச செருப்பும் அம்மாவின் பாதணி என்று
வஞ்ச உறுப்புக்கள் வருவார்கள்
நஞ்சக வார்த்தைக்களுடன்.

சிவகுமாரன் சொன்னது…

உய்யும் வழிகேட்டால் உண்டென்பேன் நாமெல்லாம்
செய்யும் கவியென்னும் தீ .

சிவகுமாரன் சொன்னது…

நன்றி D.D சார்

சிவகுமாரன் சொன்னது…

ஆமாம் ரமணி சார்,நானெழுதும் ஒரு வெண்பாவில் உதிக்கின்றன இன்னும் பல.
நன்றி

சிவகுமாரன் சொன்னது…

நேரக்குறைவு தான் அய்யா. வேறொன்றுமில்லை. இன்னும் எழுதுவேன்.

சிவகுமாரன் சொன்னது…

|||இருக்கின்றார் எத்துறைக்கும் உலகழியா திருக்க.///.
இருப்போம் சகோதரி .

சிவகுமாரன் சொன்னது…

எனக்குத்தான் புரியவில்லை அய்யா. பெயரைக் குறிப்பிட்டு எழுதினால் அது கவிதையாய் இருக்காது.
இதிகாச இராம இலக்குமணர்கள் வஞ்சத்தால் வனவாசம் போனார்கள். இன்றைய இராமி இலக்குமிகள் லஞ்சத்தால் வனவாசம் போயிருக்கிறார்கள். லாட்டரி அடித்தது போல் செருப்புக்கு பேறு கிடைத்திருக்கிறது அன்றும் இன்றும்.

சிவகுமாரன் சொன்னது…

நன்றி சகோதரி

சிவகுமாரன் சொன்னது…

நன்றி ஸ்ரீராம் சார்

சிவகுமாரன் சொன்னது…

நன்றி சகோதரி

சிவகுமாரன் சொன்னது…

நன்றி அய்யா

சிவகுமாரன் சொன்னது…

நெஞ்சில் துணிவிருக்கு,நேர்மைத் திறமிருக்கு
கொஞ்சும் தமிழிருக்கு கேடயமாய்! - அஞ்சி
நடுங்காமல் நின்றெரியும் நாட்டைக் கெடுப்போர்
அடங்கிட மூண்ட அனல்.

- விஜூ என்ன இது நான் எழுதியது வெண்பாவா இல்லை பெண்பாவா ? இத்தனைக் குட்டிகளை ஈன்றிருக்கிறது. :)

சிவகுமாரன் சொன்னது…

நஞ்சக வார்த்தைக்கு நாம் பணியோம் நண்பரே . நன்றி

kashyapan சொன்னது…

லஞ்ச வனவாச லாட்டரியில் கிட்டியதே
பிஞ்ச செருப்புக்கும் பேறு !
புரிகிறது சிவகுமாரா ! பயமகவும் இருக்கிறது !---காஸ்யபன்.

Unknown சொன்னது…

நித்தம் தருக! நிலைபெறவே நற்கவிதை
சித்தம் களித்திடவே செம்மொழியில் - புத்தம்,
கருத்துகளே! பொங்கி வழியட்டும்! போற்ற
திருத்தம் அடையட்டும் தீது




'பரிவை' சே.குமார் சொன்னது…

ஆஹா... அருமையான கவிதை கவிஞரே...

'பரிவை' சே.குமார் சொன்னது…

ஆஹா.... கவிதை அருமை கவிஞரே...

சிவகுமாரன் சொன்னது…

என்ன பயம் அய்யா. நீங்கள் எல்லாம் இருக்கும் போது

அப்பாதுரை சொன்னது…

செருப்பு சங்கதி புரியவில்லையே?!

சிவகுமாரன் சொன்னது…

அப்பாஜி .... தங்களுக்கு தமிழக அரசியல் நிலவரம் தெரியவில்லை என்று நினைக்கிறேன்

சிவகுமாரன் சொன்னது…

நன்றி குமார்

சிவகுமாரன் சொன்னது…

நன்றி அய்யா